
சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்?
பெரியார் திடல், கம்யூனிஸ்ட் அலுவலகம், வழக்கறிளுர் அலுவலகம், காவல் நிலையம் ஆய இடங்களில் நடைபெறும் சாதி மறுப்பு திருமண தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சாதி சான்றிதழ் வாங்குகிறார்கள்.
சாதி மறுப்பு, சாதி கலப்பு திருமணம் செய்து தமிழக அரசிடம் சன்மானம் வாங்கும் தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் தான் வாங்க வேண்டும் என்ற அரசானை ஏதும் உள்ளதா ???..
இதற்காக போராடிய தலைவர் யாராவது உள்ளீர்களா ?????
காதல் திருமணங்களில் கூட, பிறந்த குழந்தைக்கு தந்தை சாதி இட்டு தான் சான்றிதழ் வாங்குகிறார்கள் என்பதே வழக்கத்தில் உள்ளது .. அப்படி இருக்கையில் நீங்கள் 60 ஆண்டுகளில் அதிகம் ஒழித்த சாதி எது ???
இளம் பெண்களுக்கு ஒரு தகவல் .. நீங்கள் காதல் திருமணம் செய்து கொஎ்வது, பெரும்பாலும் உங்கள் கணவரின் சாதி எண்ணிக்கையை அதிகரிக்கதானே தவிர. சமூகத்தில் சாதியை ஒழிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..
சழூக செயற்பாட்டாளர்,
இயக்குநர் மோகன் ஜி
கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?
ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.
சரி ஜாதி ஏற்றத்தாழ்வையாவது ஒழிக்குமா..?
ஒழிக்காது. இயல்பாக நடக்கும்போது சம்பந்தப்பட்ட இரண்டு நபர்கள் நீங்கலாக அவர்களுடைய குடும்பத்தினர் யாரும் ஜாதி உணர்வில் இருந்து வெளியே வருவதில்லை.
நாடகக் காதல், லவ் ஜிஹாத்களில் அது மேலும் ஜாதி, மத வன்மத்தை அதிகரிக்கவே செய்யும்.
ஆக, கலப்பு ஜாதித் திருமணமும் கலப்பு மத திருமணமும் பெற்றோரை வாட்டும் கல்யாணம் என்பதற்கு மேல் சமூகத்தில் எதையும் செய்வதில்லை.
இதனால்தான் தமிழகத்தில் 98% பேர் சொந்த ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். மதம் மாறினாலும் அதே மதம் மாறிய சொந்த ஜாதிக்குள்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
ஜாதிக் கலப்புத் திருமணம் கூடாது என்று சொல்பவர்கள் அருவாளை எடுத்துக் கொண்டுபோய் வெட்டிவிடுவதில்லை.
கலப்புத் திருமணம் சரி என்று சொல்பவர்கள் தம் வீட்டில் நடக்கும்போது அருவாளை எடுத்துக் கொண்டுபோய் வெட்டுவதும் உண்டு.
ஆக சொல்வது அல்ல; செய்வதே பிரதானம். அதிலும் கலப்பு திருமணங்களிலும் 95% வெளிக்குத் தெரியாமல் சுமுகமாக நடந்து இரு குடும்பங்களுடைய விவகாரமாக அடங்கிவிடுகிறது. அரிதினும் அரிதாகவே மோதலாக வெடிக்கிறது.
ஆக 99% ஜாதியின் பங்களிப்பை விட விரிசலுறும் 1% மட்டுமே பூதாகரப்படுத்தப்படுகிறது. பின்னே நான் முற்போக்கு ஆகிறேனே மம்மி… பிரிட்டிஷ்- ஐரோப்பிய-அமெரிக்க எஜமானரின் தரத்துக்கு உயர்கிறேனே ப்ரோ…
*
உண்மையில், ஒருவேளை குழந்தைகள் அப்படி பெற்றோரை மீறித் திருமணம் செய்துகொண்டுவிட்டால், மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவர்களை மறந்துவிடுவதே பெற்றோருக்கு நல்லது. ஒன்று பட்டுத் திருந்தி வரட்டும் என்று விட்டுவிடலாம். அல்லது எக்கேடு கெட்டும் போகட்டும் என்று விட்டுவிடலாம்.
பிள்ளையை ஒழுங்காக வளர்க்காத பாவத்துக்கான தண்டனை என்று மனம் கலங்கி ஒதுங்கிவிடலாம். அதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஆனால், 99% சாமர்த்தியசாலிகளாக இருக்கும் ஒரு சமூகம் 1% அப்பாவிகளை இப்படி வேட்டையாடக்கூடாது.
இதைத் தடுக்க அரசு/அரசியல் சாசனம் ஒரு வழி கண்டுபிடித்தாகவேண்டும்.
ஆனால், அது ஜாதிக் காதல் திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத் தொகைகள் தொடங்கி அனைத்து சட்டப் பாதுகாப்பையும் தருகிறது. மதக் கலப்புக்கு இந்த சலுகைகள் கிடையாது. அங்கே சர்ச்சும் மசூதியும் சொல்வதே தீர்ப்பு.
இளிச்சவாய் இந்துவுக்குத்தான் எல்லா சீர்திருத்தங்களும் முற்போக்குகளும்.
இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சாசனத்துக்கு எதிரானது. இது இந்து பெற்றோர் அனைவரையும் டிஃபால்ட்டாக பிறவிக் குற்றவாளியாக நடத்துகிறது. காதல் ஜோடிகள் அனைவரையும் டிஃபால்டாக பிறவிப் புரட்சியாளர்களாகப் போற்றுகிறது.
இது அடிப்படை மனித உரிமை மீறல்; கெளரவ மீறல்; நன்றி கெட்ட தனத்தை ஊக்குவிக்கும் செயல்.
குழந்தைகளின் திருமணம் தொடர்பாக பெற்றோரின் சம்மதம் அவசியம்.
விவாகரத்தின் போது அந்த உறவு முறியாமல் இருக்க பல கவுன்சலிங் நடப்பதுபோல் ஓரிரு வருடங்கள் கால அவகாசம் தரவேண்டும்.
18 வயதானதும் திருமணம் என்ற விதிமுறை தவறு.
18 வயதுக்கு மேல்தான் காதல் பற்றி பெற்றோரிடம் சொல்லவே வேண்டும். அதன் பின் ஓரிரு வருடங்கள் பெற்றோரிடம் கலந்து பேசியே ஒரு இறுதி முடிவை எடுக்கவேண்டும்.
ஒரு பெண் தன் பெற்றோருடனே இருக்க முடிவெடுக்கலாம்.
காதலருடன் போக முடிவெடுக்கலாம்.
ஆனால், அது ஓரிரு ஆண்டு காலம் கலந்தாலோசித்த பின்னரே செய்யவேண்டும்.
தலாக் தலாக் தலாக் என்று சொல்வதுபோல் ஒரே நிமிடத்தில் பெற்றோரின் உறவை முறித்துவிடக்கூடாது.
ஆக, புதிதாக இது தொடர்பாக இயற்ற வேண்டிய சட்டம்:
- பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் நடக்க அனுமதிக்கக்கூடாது.
- ஓரிரு வருட கவுன்சிலிங் கட்டாயம்.
- ஒருவேளை காதல் ஜோடி இருவருமே அல்லது காதல் ஜோடியில் ஒருவர் தன் பெற்றோரை மீறி அந்தத் திருமணம் செய்துகொள்கிறாரென்றால் அந்தப் பெற்றோருக்கு ஜீவனாம்சமாக – பெற்றோர் தட்சணையாக கணிசமான தொகையைத் தந்தாகவேண்டும்.
மனைவிக்கு கணவர் விவாகரத்தின்போது தருவதுபோல் பெற்றோருக்கு காதல் ஜோடி விவாக மீறலின்போது தரவேண்டும்.
மோகன் ஜி சொன்னதுபோல் ஒரு சில ஜாதியினரின் கட்டப்பஞ்சாயத்து, தவணைத் தொகை கோஷ்டிகளிடமிருந்து பாதுகாக்க ‘குலங் காக்கும் வழக்கறிஞர் படை’ ஒன்றை அமைக்கவேண்டும்.
கூடவே, மதம் சார்ந்த மோதல்களில் இருந்து காப்பாற்ற ’தர்மம் காக்கும் வழக்கறிஞர் படை’ ஒன்றை உருவாக்கவேண்டும்.
சமீபத்தில் ஒரு காதல் ஜோடி, பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றதும் தற்கொலை செய்துகொண்டுவிட்டனர்.
அதை ஜாதி ஆணவக் கொலையாக ஆக்க பல திரை மறைவு முயற்சிகள் நடந்திருக்கின்றன. பெண்ணின் அப்பா, காதலனை மிரட்டியதால் பெண்ணின் வீட்டை அடித்து உடைத்திருக்கிறார்கள்.
காதலித்த ஆணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் பல சலுகைகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
மகளை இழந்தை குடும்பத்துக்கு கொலைப்பழி வேறு.
தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவரை ஜாதிப் பெயர் சொல்லித் திட்டியது தவறுதான். ஆனால் வெறுமனே திட்டிவிடவில்லை. 18 வயது கூட ஆகாத (ஆகியிருந்தாலும்) தன் மகளை தன் விருப்பம் இன்றி திருமணம் செய்ய வந்தவனைத் திட்டியதில் என்ன தவறு? வெறுமனே இருந்தபோது ஜாதி பார்த்துத் திட்டுவது நிச்சயம் தவறு. இப்படியான விஷயங்களில் திட்டும்போது அதற்கு கண்டனம் என்பதைத் தாண்டி எந்த தண்டனையும் கூடாது.
இந்துக்கள், இந்துத்துவர்கள், பிராமணர்கள், மேல் ஜாதியினர் எல்லாரும் எல்லாராலும் அடையாளம் சொல்லி வசைபாடத்தான் படுகிறார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் சம வாய்ப்புகள், அரசியல் சாசனத்தில் தரப்படும் இந்நாளில் ஒருவர் ஜாதி சொல்லித் திட்டியதை பெரிய பிரச்னையாகச் சொல்வது சரியல்ல.
யாராவது ஜாதி சொல்லித் திட்டினால், ஆமாம் நான் இந்த ஜாதிதான். அரசியல் சாசனம் எனக்கு இந்த ஜாதிக்கு உரிய கெளரவம் தந்திருக்கிறது. நீ பேசும் அதே தமிழ் மொழியைத்தான் பேசுகிறேன். உன்னைவிட எந்தவகையில் நான் தாழ்ந்தவன் என்று கேட்டுவிட்டுப் போய்க்கொண்டே இருக்கவேண்டும்.
இந்த குல தெய்வத்தின் குழந்தை நான் என்று கம்பீரமாகச் சொல்லவேண்டும். தன் குலத்தின் பெயரை வசையாக ஒருவன் சொல்லும்போது அல்ல, அதை வசையாக நீ எடுத்துக் கொள்ளும்போதுதான் அது வசையாகிறது. உன் தமிழ் குலம் பற்றி உனக்கே பெருமை இல்லையென்றால் யாரைக் குறை சொல்ல..? க்ரிப்டோ கட்டபஞ்சாயத்து கும்பலுக்கு ஜாதிப் பெருமை கிடையாது என்பதால் ஒவ்வொரு குலமும் தன் ஜாதி பற்றி ஏன் இப்படி மிகை குற்ற உணர்ச்சியும் தேவையற்ற வேதனையும் அடையவேண்டும்?
நீ பிறந்ததிலிருந்து இறப்பதுவரை கேட்கும் பாட்டைப் போட்டது என் ஜாதிக்காரர் தான் என்று பெருமையுடன் சொல்லவேண்டும்.
உண்மையில் அங்கு நடப்பது ஜாதி மோதல் அல்ல; பெண்ணைப் பறிகொடுத்த தந்தை பெண்ணைப் பறித்தவனுடன் போடும் சண்டை.
அதில் ஜாதியைச் சொல்லித் திட்டினார் என்ற உடனே ஜாதிச் சண்டையாக, கலப்பு ஜாதி என்பதால் ஜாதிப் பிரச்னையாக இதைப் பார்ப்பதே தவறு.
இருவரும் தமிழர்கள். ஒரு தமிழர் இன்னொரு தமிழரை அடிக்கிறார். திட்டுகிறார். அப்படியானால் இது பொதுவான குற்ற வழக்காகவே கருதப்படவேண்டும்.
அல்லது தமிழ் மொழிதான் காரணம் என்று சொல்லவேண்டும். தமிழ் குற்றம் இது. ஜாதிக் குற்றம் அல்ல.
மொழி இணைக்கிறதென்றால் ஏன் இங்கு இணைக்கவில்லை? அதோடு ஒருவர் திட்டுவதென்பது மொழியில்தான். போடா மஹர்ப்பயலே என்று திட்டினால் தமிழ் நாட்டில் தாழ்ந்த ஜாதிக்காரர் வருத்தமே படமாட்டார். ஏனென்றால் அவருக்கு மஹர் என்பதன் அர்த்தம் தெரியாது. ஆக தமிழ் மொழியில் இருக்கும் ஜாதியின் பெயரைச் சொல்வதால்தான் வருத்தம் வருகிறது. ஆக மொழிதான் இங்கு குற்றவாளி.
ஒன்று அது இருவரையும் இணைக்கவில்லை. இன்னொன்று வசையே தமிழ் மொழியில்தான் இருக்கிறது.
பின் ஏன் ஜாதிமீது பழி போடப்படுகிறது?
இதில் இன்னொருமுக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு சிற்பி – ஆசாரி குலத்தைச் சேர்ந்தவர் ஒரு சிலை செதுக்கினாலோ கோவில் கட்டினாலோ அது தமிழ் பெருமையாகச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் அது அவருடைய ஜாதித் தொழில். குலத் தொழில். முழு பெருமையும் அந்த ஜாதிக்குத்தான் போகவேண்டும்.
ஆனால், ஒருவர் திட்டினாலோ அடித்தாலோ ஜாதியின் மீது பழி போடப்படும். நல்லது செய்தால் தமிழண்டா… கெட்டது செய்தால் ஜாதிச் சனியன்.
உண்மையில் தமிழகத்தில் இருக்கும் தமிழ் பெருமைகள் எதுவுமே தமிழர்களின் பொதுவான பெருமையே கிடையாது. கடல் கடந்து வாணிகம் செய்த பெருமை என்றால் அது வைசிய ஜாதியின் பெருமை.
ராஜ ராஜ சோழன் போன்ற மன்னரின் பெருமையென்றால் அது அதை குலத் தொழிலாகச் செய்த க்ஷத்ரிய வர்ணத்தின் பெருமை.
மூழ்காத கப்பல் கட்டியதென்பது அந்த ஜாதியின் பெருமை.
நல்லவற்றுக்கெல்லாம் தமிழ் ஸ்டிக்கர். பெற்றோரை மீறித் திருமணம் செய்ததை தடுத்தால் ஜாதி மீது மட்டும் பழியா..? அங்கே அவர் தமிழர் இல்லையா..?
உண்மையில் கலப்பு ஜாதித் திருமணத்தைத் தடுப்பது இந்து ஜாதிக் குலங்கள் மட்டுமல்ல; தமிழ்க் குலங்களும் தான்.
ஒரு பாதிரியும் மெளல்வியும் இந்த விஷயத்தில் தந்திரசாலிகள். முதலில் தம் மந்தை வேறு பக்கம் நகரவே விடமாட்டார்கள். அப்படியே நகர்ந்தாலும் அந்த புதிய ஆட்டை தம் கிடைக்குள் அடைக்கவே பார்ப்பார்கள். கொல்லமாட்டார்கள்.
ஆனால், இது அப்பட்டமான அடையாள அழிப்பு.
ஒரு தமிழரை உன் தமிழ் மரபை விட்டுவிட்டு அரேபிய மரபுக்கு வா என்று அழைப்பது ஆளைக் கொல்வதைவிட அயோக்கியத்தனம்.
எனவே சொந்த ஜாதிக்குள் திருமணம்; அண்டை ஜாதியுடன் நட்பு.
சொந்த ஜாதிப் பெண் கழுத்தில் தாலி; அடுத்த ஜாதிப் பெண் கையால் ராக்கி.
முதலாவது ஏற்கெனவே தமிழ் மரபில் இருக்கிறது. இரண்டாவதை இனி தமிழ் மரபுக்குள் கொண்டுவரவேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு குரு பூஜை செய்து பாதம் கழுவிப் பிரார்த்தனை செய்வதுபோல் சக ஜாதி ஆண்களுக்கு சகோதரக் கயறு கட்டும் மங்கல விழாவை முன்னெடுக்கவேண்டும்.
- – பி. ஆர். மகாதேவன்




