
பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி தமிழகம் வருகிறார். ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.
இதற்காக அவர் தமிழகம் வருகிறார். மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகிறார். அங்கிருந்து கப்பலில் சென்று பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார்.
பின்னர், புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரயிலில் பயணம் செய்யும் வகையில் திறப்பு விழா நிகழ்ச்சி திட்டமிடப்பட்டு உள்ளது.
இதையொட்டி பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ஓரிரு நாட்களில் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.