2 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்! உலகமே பீதியில்!

இந்தியா உலகம் சற்றுமுன்
lockdown
lockdown

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இன்று(ஏப்.,24) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் பலியாகி உள்ளனர். 4,749 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். உயிரிழப்புகளில் மஹாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அங்கு 283 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் 112 பேரும், ம.பி.,யில் 83 பேரும், டில்லியில் 50 பேரும், ராஜஸ்தானில் 27 பேரும், தமிழகத்தில் 20 பேரும் ஆந்திராவில் 27 பேரும், கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629ஆக உயர்ந்துள்ளது

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 27 பேர் வீடு திரும்பினர். இதுவரையில் 662 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், சென்னையில் இதுவரை 373 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நேற்றைய அறிக்கையில் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை நடுங்க வைக்கும் கொரோனா பீதி,..1.90 லட்சத்துக்கு மேலாக பலி.. பாதிப்பு 27.17 லட்சத்தை தாண்டியது

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 190,635 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,718,139 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 745,500 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,679 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.