நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

hindu munnani meeting in nellai - 2026

இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று, திருநெல்வேலி பாளையங்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவிற்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன், பொதுக்குழு தீர்மானங்களை படித்தார். தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகளை இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர்கள் ஜெ.எஸ். கிஷோர்குமார், செந்தில்குமார் ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். இந்து முன்னணியின் தென் பாரத அமைப்பாளர் க.பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் நா. முருகானந்தம், டி. மனோகர், மாநில அமைப்பாளர் எஸ். இராஜேஷ், மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சதீஷ், கிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்யஞான பரமாசார்ய சுவாமிகள், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஆகியோர் ஆசியுரை ஆற்றினார்கள்.

பக்திப் பாடகர் வீரமணியின் நான்காவது தலைமுறை இளம் பாடகர் அபிஷேக் தேசபக்திப் பாடல் பாடினார். நிறைவாக மாநில துணைத் தலைவர் டாக்டர் அரசு ராஜா நன்றியுரை நிகழ்த்தினார்.

இந்தப் பொதுக்குழுவில் இந்து முன்னணி மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்  பொறுப்பாளர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாயத் தலைவர்கள், ஆன்மீக அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பொதுக்குழுவில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…

தீர்மானம் 1: போதை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

திருச்சியில் கால் டாக்சி ஓட்டுனர், மதுபோதையில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, சுயநினைவற்ற நிலையில் வீட்டின் அருகே வீசிச் சென்ற சம்பவம்… தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் இரண்டு பேர், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே, கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் உடல் வீசப்பட்டுள்ள மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம்… என, கடந்த திமுக ஆட்சியில் நிலவியது போல பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழல் தற்போதும் தொடர்வது கவலைக்குரியது. இப்படி அராஜகம் செய்துள்ள மிருகத்தனமான குற்றவாளிகளை, உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையை இந்து முன்னணியின் மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கடந்த திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட விஷ்ணு என்ற இளைஞர் போதைக் கும்பலால் அம்மிக்கல், பீர் பாட்டில்கள் மற்றும் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது போதை ஆசாமிகளுக்குத் தெரிகிறது. போதைப்பொருட்களை எவரிடம் விற்க வேண்டும் என்பது போதை வியாபாரிகளுக்குத் தெரிகிறது. ஆனால் காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் ஒன்றுமே தெரியாது என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

கஞ்சா, போதைப் பொருட்களால் தமிழகம் சீரழிந்து போவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை செயல்படுத்தும் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என இந்த பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2: திருச்செந்தூரில் திண்டாடும் பக்தர்கள்-தமிழக அரசே நடவடிக்கை எடு !

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூரில் சமீப காலமாக பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் தற்போது சாதாரண நாட்களில் கூட பல மணி நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். திருச்செந்தூர் முருகனை தரிசிக்கவேண்டும் என்றாலே மக்கள் அச்சப்படும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளும், பக்தர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்து வழக்கறிஞர் முன்னணி குழுவினர் ஆய்வு செய்ததில், தங்கும் விடுதியில் பக்தர்களுக்கு பல்வேறு இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படுவது தெரியவந்தது. விடுதிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டாலும் அதிலும் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

கோவிலைச் சுற்றி பல்வேறு பகுதிகளில் முறைகேடாக பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. கடற்கரை, பேருந்து நிலையம் அருகில் உள்ள கழிவறைகள், குளியலறைகள் வேண்டுமென்றே பூட்டி வைக்கப்பட்டும், பயன்படுத்த முடியாத வகையில் சுகாதாரமற்ற முறையிலும் உள்ளது. கோவில் பணத்தில் ரூ 25 லட்சம் கையாடல் செய்ததாக சமீபத்தில் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் இந்தப் பிரச்சனை மூடிமறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என இந்துமுன்னணி கோரிக்கைவிடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சபரிமலை, திருப்பதி போன்ற திருக்கோவில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வந்தாலும் பக்தர்கள் பெரிய சிரமத்திற்கு உள்ளாகாமல் தரிசனம் செய்கின்றனர். ஆனால் திருச்செந்தூரில் பக்தர்கள் வேண்டுமென்றே பல மணி நேரம் காக்க வைக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் பணம் கொடுப்பவர்கள் குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தற்போது வரை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகிறது.

எனவே திருச்செந்தூரில் பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது

தீர்மானம் 3: நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இஸ்லாமியர்களின் தர்காவை காரணம் காட்டி கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. முந்தைய திமுக அரசு ஆட்சியில் இருந்தபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அப்போதைய திமுக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை. தற்போது புதிய அரசு பதவி ஏற்று உள்ளது. தமிழகம் முழுவதும் இந்துக்கள் வாக்களித்து த.வெ.க அரசை ஆட்சி பீடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த வருடம் 2026 ல் வரக்கூடிய கார்த்திகை மாதம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே இந்துக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்படும் அரசாக த.வெ.க அரசு செயல்பட்டு இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீபத்தூணில் தீபம் ஏற்ற, புதிய அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்திடவேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 4: தமிழகத்தில் உள்ள கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் த.வெ.க அரசுக்கு வேண்டுகோள்!

பாரத நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. 2000 ஆண்டுகள், 1000 ஆண்டுகள் பழமையான நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன. கடந்த 60 ஆண்டு கால திராவிட ஆட்சியில், நிறைய கோவில்கள் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி, ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது. நம்முடைய முன்னோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் கோயிலுக்கு வழங்கிய பல லட்சக்கணக்கான நிலங்கள் அரசியல்வாதிகளின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான வாடகை, குத்தகை பாக்கி கூட வசூலிக்கப்படாமல் உள்ளது.

அதேபோல கோயிலுக்கு வழங்கப்பட்ட நகைகளை கடந்த ஆட்சியில் உருக்குகிறோம் என்ற பெயரில் அதிலிருந்து வைரம், வைடூரியம், முத்துக்கள், நவரத்தினங்கள் களவாடப்பட்டுள்ளன. பழமையான கோவில்களில் இருந்த விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இதைப்பற்றி கோயில் நிர்வாகம் அதாவது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புகார் கூட கொடுக்கப்படவில்லை. பல கோவில்களில் கடவுளை தரிசனம் செய்யும் பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தப்படுகிறது. காசு ஒன்றே குறிக்கோளாகச் செயல்படுகிறார்கள்.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

தமிழக அரசு இந்த நிலையை மாற்றி கோயிலுக்கு தனி வாரியம் அமைத்து கோயில்கள் சுதந்திரமாக செயல்படவும் கோவில் சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பக்தர்கள் எந்தவித சிரமம் இல்லாமலும், கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்யவும், பழமை மாறாமல் கோயிலை புதுப்பிக்கச் செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி மாநில பொதுக்குழு, தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 5: நெல்லையப்பர் திருக்கோவில் மதில் சுவரை ஒட்டியுள்ள கடைகளை அகற்ற வேண்டும் !

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலின் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் கோவில் மதில் சுவரை ஒட்டி ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் மதில் சுவரை துளையிட்டும், சேதப்படுத்தியும், கோவில் மதில் சுவரை பராமரிக்க முடியாத வகையிலும் இந்த கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் மதில்சுவருக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுவதுடன் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மேலமாடவீதியில் இருந்த ஒரு சில கடைகள் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மாட வீதிகளில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் தடைபட்டு நிற்கிறது.

எனவே கோவில் மதில் சுவரை காப்பாற்றும் வகையில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் மதில்சுவரை ஒட்டி அமைந்துள்ள அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தி அந்த வியாபாரிகளுக்கு வேறு இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என தமிழக அரசையும், இந்து சமய அறநிலையத்துறையையும், நெல்லை மாவட்ட நிர்வாகத்தையும், திருக்கோவில் நிர்வாகத்தையும், நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6: மதசார்பற்ற நாட்டிலே மதத்துக்கு ஒரு சட்டமா? பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும்.

கோவா, உத்தரகாண்ட், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திலும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 44-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மதம், ஜாதி, மொழி, இன வேறுபாடுகளைத் தாண்டி சமமான சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக நீதியை வலுப்படுத்தும் எனக் கருதுகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுப்பு, பராமரிப்பு போன்ற தனிநபர் சட்டங்களில் அனைவருக்கும் ஒரே சட்டம் அமல்படுத்தப்படுவது பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை உறுதிப்படுத்தவும் உதவும்.

தமிழ்நாட்டிலும், நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை விரைவாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7: சாதியை காரணம் காட்டி பள்ளிகளில் சாமி கயிறுகளை தடை செய்வதற்கு கண்டனம்

சாதி பிரிவினைகளை தடுக்கும் வகையில் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வரக்கூடாது எனவும், எந்தவிதமான மத அடையாளங்களையும் அணிந்து வரக் கூடாது எனவும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். பள்ளிகளில் சாதி ரீதியாக பிரிவினை கூடாது என்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்காக மத அடையாளங்களை அணிந்து வரக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற, அரசியல் சாசனம் உறுதி அளிக்கிறது. இதனை மறுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

பள்ளிக் கூடங்களில் இந்து மாணவர்கள் தங்கள் நெற்றியில் திலகம் வைத்து வருவார்கள். குலதெய்வங்களின் கயிறுகள், உள்ளூர் கோயிலில் காப்பு கட்டும் கயிறுகள் ஆகியவற்றை மாணவர்கள் அணிந்து வருவார்கள். இது ஆன்மிகத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்த விஷயமாகும். கயிறு கட்டி வர வேண்டாம் என சொல்லும் அரசு, முஸ்லிம் மாணவர்கள் குல்லா, மாணவிகள் புர்கா அணிந்து வருவது மற்றும் கிறிஸ்தவ மாணவ மாணவியர் சிலுவை அணிந்து வரக்கூடாது என சிறுபான்மை மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்குமா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பல இந்து குழந்தைகள் படிக்கின்றனர். அங்கு அவர்களை தினமும் பைபிள் வாசகங்களை பாட வைக்கின்றனர். இது மதத்தை கட்டாயமாக திணிப்பது தானே. எனவே, கிறிஸ்தவ பள்ளியை பொது கல்வி பட்டியலில் இருந்து நீக்கி கிறிஸ்தவ பள்ளியாக அறிவிக்க அமைச்சர் தயாரா?

இது எல்லோருக்குமான ஆட்சி என்பதை உறுதி செய்யும் விதமாக மத அடையாளங்களை அணிந்து கொண்டு பள்ளிகளுக்கு வரக் கூடாது என்ற அறிவிப்பை கல்வித் துறை அமைச்சர் திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநில பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 8 தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும்

நதிகளில் தாமிரபரணி தனிச்சிறப்பு வாய்ந்தது. பொதிகை மலையில் உற்பத்தியாகி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பயணித்து தென்தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,000 ஏக்கர் நிலங்கள் இந்த ஆற்றின் பாசனத்தை நம்பியே உள்ளன. இரு மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்களின் தாகம் தீர்க்கும் ஒரே நீராதாரம் தாமிரபரணி. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீருக்கு இதனையே சார்ந்துள்ளனர். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நதி, தமிழரின் பண்பாட்டுடனும் வழிபாட்டுடனும் பின்னிப்பிணைந்த புண்ணிய நதியாகும்.

மக்களின் வாழ்வாதாரமாகவும், தெய்வீகமாகவும் போற்றப்படும் இந்த ஜீவநதியின் தூய்மை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகள், நகராட்சிக் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் ஆறு கடுமையாக மாசுபட்டு வருகிறது. இது குடிநீரின் தரத்தையும், விவசாயத்தையும், நீர்வாழ் உயிரினங்களையும் நேரடியாக பாதிக்கிறது. எனவே, தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகளை முற்றிலும் தடுத்து, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து ஆற்றை மீட்டெடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்ட தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. வெள்ளக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை சேமித்து வறண்ட பகுதிகளுக்கு வழங்கும் இந்த மக்கள் நலத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து செயல்படுத்த வேண்டும்.

தென் தமிழக மக்களின் உயிர்நாடியான தாமிரபரணியை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு ஒருமனதாக வலியுறுத்துகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories