கொரோனா தொற்று அதிகரிப்பால்… கடுமையாகிறது மதுரை! பைக்கில் சுத்தினா பறிமுதல்தான்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai fake claim on police1 - 2026

மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மற்ற வாகனங்களில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், இது குறித்து தகவல் அறிய 1077, 0452-2547160, 9597176061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், மதுரை காவல் கண்காணிப்பு கடுமையாகிறது

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப் பட்டதாவது…

காவல்துறை தங்களின் நலனில் இதுவரை எடுத்த அனைத்து நடைமுறைக்களுக்கும் ஒத்துழைப்பு தந்து கொரோனா பரவலை குறைக்க உதவியவர்களிடம் மட்டும் மதுரை மாநகர் காவல் துறை சற்று மன்னிப்பு கோருகிறது…

ஒரு சிலரின் புரிதல் இல்லாத நடப்பிற்கும் அறிவுகெட்ட நடவடிக்கைக்கும் அத்தியாவசியமில்லா அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளிவைத்து மதுரையின் கொரோனா மீழ்விற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் மதுரை மாநகர் காவல் ஆணையரின் அறிவுரையின் பேரில் ஒரு சில கட்டுப்பாடுகள் நாளை முதல் நடைமுறை படுத்தப்படவுள்ளது..

எடுக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைத்துப்பு கொடுத்து கொரோனா மீள்விற்கு வழிவகை செய்ய கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்..

நாளை முதல் உங்களின் அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள்., மாளிகைப்பொருட்கள்., மருந்தகம்., ஆகிவற்றிக்கு செல்வதற்கு இரு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டாம்…. அருகில் உள்ள உங்கள் பகுதி கடைகளிலிலே உங்களின் தேவைகளை நடந்து சென்று பூர்த்தி செய்து கொள்ளவும்….

இதனை மீறிய உங்களின் பயணம் வருந்த தக்கதாக அமையும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்….. தங்களின் வாகனம் மாதக்கணக்கில் காவல்துறையின் கண்காணிப்பில் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்து தனிமை படுத்தப்படும்…. இப்படிக்கு மதுரை மாநகர் காவல்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.