‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

parliament women reservation bill failed - 2026

மகளிர் இட ஒதுக்கீட்டுடன் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஏப்.17 வெள்ளிக்கிழமை நேற்று அறிமுக நிலையிலேயே தோல்வியை சந்தித்து, பின்வாங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த இந்த மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. பதிவான 489 ஓட்டுகளில், ஆதரவாக 278 ஓட்டுகளும், எதிராக 211 ஓட்டுகளும் பதிவாகின. பதிவான ஓட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாததால் இந்த மசோதா, மக்களவையின் அறிமுக நிலையிலேயே தோல்வி அடைந்தது. பெரும்பான்மை பெற 326 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் 48 வாக்குகள் குறைவாகப் பெற்று இந்த மசோதா ஆதரவிழந்தது. 

இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைய வேண்டும் என்று தொடக்கம் முதலே வேலை செய்தது திமுக.,வும் அதன் தலைவர் ஸ்டாலினும் தான். திமுக., அளித்த அழுத்தத்தால் காங்கிரஸும் இண்டி கூட்டணிக் கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்ப்பதில் ஓரணியில் நின்றன. ஆனால், இந்த மசோதாவை தோல்வி அடையச் செய்ததால், பெண்களுக்கு மட்டும் பாதிப்பு என்றில்லை, தமிழகம் உள்ளிட்ட ஒட்டு மொத்த தென்னிந்திய மாநிலங்களுக்குமே இழப்பு என்பது தான் உண்மை. உண்மை எப்போதும் கசக்கவே செய்யும். அது என்ன என்பதை பின்னாளில் தமிழகம் பார்க்கப் போகிறது. அன்றும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்து தெருக்களில் இறங்கி திமுக., நாடகம் போடப் போகிறது. அன்று திமுக., எதிர்க்கட்சியாக இருக்கக் கூடும். அப்போது நாடகத்தனங்களை வெளிப்படுத்தி மக்களிடம் எதிர்ப்பலைகளை உருவாக்குவதில் அது மிகச் சிறப்பாகவே செயல்படக் கூடும்!

இந்த மசோதா தோல்வி அடைந்தவுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்தபோது, “நண்பர்கள் யார், துரோகிகள் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது தொகுதி மறுவரையறை; புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாகப் பேசுகிறது; நமது வெற்றி தொடரட்டும். தீ பரவட்டும் என்று நான் சொன்னது நாடாளுமன்றம் வரை பற்றிக் கொண்டது; மகிழ்ச்சி, புது எனர்ஜியுடன் உங்கள்முன் நிற்கிறேன்; தொகுதி மறுவரையறை என்ற கருப்பு சட்டத்தை எதிர்த்து வெற்றி கிடைத்திருக்கிறது.” என்று கூறினார்.

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

முன்னர் 1998ல் பாஜக., பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இதே போல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்த போது, எதிர்க்கட்சிகள் மசோதாவைக் கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்து, நாடாளுமன்றத்தையே முடக்கியது வரலாறு. இப்போது 2026ல் பாஜக., பிரதமர் நரேந்திர மோடி, தொகுதி மறுவரையரையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கொண்டு வந்த போது, அதே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முடக்கியுள்ளன. 

ஆனால், பாஜக., பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில்தான் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் 2023 நிறைவேறியது என்பது குறிப்பிடத் தக்கது. 1970களில் இதே போல் இடஒதுக்கீடு என்று பேசி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கூட, அடுத்த 25 வருடங்களுக்கு இந்த மசோதா வேண்டாம் என்று ஒத்தி வைத்தார். அந்த வகையில், காங்கிரஸால் அது ஆண்ட காலங்களில் இந்த இடஒதுக்கீட்டைத் தரமுடியவில்லை என்பதும் வரலாறு!

இப்போது திமுக வேறு ஒரு வகையில் அரசியலை முன்னெடுக்கிறது.  தாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிப்பதாகவும் ஆனால் தொகுதி மறு சீரமைப்பு மசோதா உடன் அதை தாக்கல் செய்ய மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஒரு கதையை விடுகிறது.  ஆனால் தொகுதி மறு வரையறை மசோதாவின் மத்திய அரசு முன் வைத்திருக்கும் தீர்வு மிகத் தெளிவானது.  அது தற்போதைய நிலையில் தற்போதைய விகிதாச்சாரத்தை அப்படியே 50 சதவிகிதம் உயர்வு செய்து அந்த மொத்த இடத்தில் 33 சதவிகிதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது. 

ஆனால் திமுக இதனை வேறு விதமாக மக்களிடம் பிரச்சாரம் செய்தது. தொகுதி மறு வரையறை மூலம் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் தற்போதைய இடங்களே கூட குறைந்து விடும் என்று மக்களை பயமுறுத்தி வருகிறது.  மேலும்,  33% மகளிர் ஒதுக்கீடு திருத்த மசோதாவை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?  என்றும் கேள்வி எழுப்புகிறது. 

இந்நிலையில்,  2023லேயே சட்டமாகிவிட்டது 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா.  இப்போதைய 543 என்கிற நாடாளுமன்ற எண்ணிக்கையில் இருந்தே இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாமே என்ற கேள்வி எழக்கூடும். ஆனால், ஏற்கெனவே இருக்கும் தங்களது உறுப்பினர் இடங்களையும் இழந்துவிட வேண்டி இருக்கும் என்று அச்சப்படுவதால் அந்தக் கட்சிகள் எதிர்ப்பது புரிந்து கொள்ளக் கூடியது.

ஆனால், மசோதா தோற்கடிக்கப்பட்டதன் மூலம், மூன்றில் ஒருபங்கு “ஆண்களுக்கான இடம்” பறிபோய், மொத்த இடமும் குறைந்து இடங்களுக்கு அடித்துக் கொண்டு பரிதவிக்கும் போதுதான், எதிர்க் கட்சிகளின் ஆணாதிக்கத் தலைவர்களுக்கு இப்போது மத்திய அரசு முன்வைத்த 50% உயர்வு மற்றும் அதில் மகளிருக்கான இடஒதுக்கீடு என்பதன் அருமை புரியும்! 

“இடங்களை எல்லா மாநிலத்திற்கும் 50℅ உயர்த்துகிறோம் என்பதை எழுத்துபூர்வமாகத் தருவீர்களா?” என வேணுகோபால் (காங்.) கேட்டபோது, “எதிர்க்கட்சிகள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் அந்தத் திருத்தத்தைத் தயாரித்து அவையின் முன் வைக்கிறோம்” என்றார் அமித்ஷா. ஆனால் எதிர்க்கட்சிகள் பின்வாங்கின. அவற்றின் நோக்கம் மசோதாவைத் தோற்கடிப்பது மட்டுமே என்பது தெரியாததா என்ன? 

அண்மையில், ஜார்கண்ட், உத்தராகண்ட், சட்டீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டபோது அவற்றுக்குள் மட்டும் தொகுதி மறுவரையறை நடந்தது. ஆனால், ஒட்டுமொத்த நாட்டுகுமான தொகுதி மறுவரையறை என்பது வருடக் கணக்கில் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. 

இந்த நாடு உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. அதிக மக்கள்தொகை கொண்டதில் முதலிடம் பிடித்த நாடு. இப்போது நாட்டின் மக்கள்தொகை 140 கோடிக்கும் மேல். ஆனால், கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக, அந்நாளைய தொகுதிகளின் எண்ணிக்கை இன்றளவும் மாறவில்லை. அண்மையில் தான், பிரதமர் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த நிலையை உணர்ந்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, நாடாளுமன்றக் கட்டடமும் புதிதாகக் கட்டி அதில் சபையை மாற்றினார். புதிய கட்டடத்தின் படி, மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் என மொத்தம் 1272 உறுப்பினர்களைக் கையாளும் வகையில் விரிவாகப்பட்டதை நினைத்துப் பார்க்கலாம். 

அதனால் தான் தற்போதைய 543 என்ற எண்ணிக்கையில் இருந்து சுமார் 800க்கும் அதிகமான உறுப்பினர்களை அதிகரித்து, மக்கள் பிரதிநிதித்துவத்தை மேலும் விரிவாக்க பிரதமர் மோடி அமைச்சரவை முடிவு செய்தது. மக்கள்தொகை அதிகரித்துள்ள சூழ்நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் இடங்களை அதிகரிக்கலாம் என்றால்,  மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த தென் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், அது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சரியாக செயல்பட்ட தங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்றும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கருத்துக்கள் எழுந்தது. 

எனவே, மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல், இப்போதிருக்கும் பிரதிநிதித்துவ சதவிகித அடிப்படையில், அதாவது இப்போது ஒவ்வொரு மாநிலமும் எந்தெந்த சதவிகித பிரதிநித்துவத்தில் உள்ளதோ அதே சதவிகிதத்தில் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம், அதன் மூலம், 850க்கும் அதிக இடங்களாக வரும் வகையில் மாற்றம் செய்து கொள்ளலாம் என மத்திய மோடி அரசு, இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை வடிவமைத்தது. இந்த மசோதா அவ்வகையில் மிக எளிமையானது, எவருக்கும் வஞ்சகமற்றது, அதே நேரம் மக்கள்தொகை அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய தென் மாநிலங்களுக்கு நிவாரணம் வழங்குவது!

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 543 என்கிற தொகுதிகளின் எண்ணிக்கையில் இருந்து 33% எண்ணிக்கையை பிரித்து எடுத்து பெண்களுக்கு ஒதுக்குவதை விட, அதிகரிக்கப்பட்ட 850க்கும் கூடுதலான இடன்க்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து 33% அளவில் தொகுதிகளைப் பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவது என்பது, ஏற்கெனவே இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதும், அமல்படுத்துவதற்கு எளிமையானது என்பதும் மோடி அரசின் கருத்து. 

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்ளன. திமுகவின் கோரிக்கையின்படி, தற்போதுள்ள 543 தொகுதிகளுக்குள்ளேயே நாம் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தினால், பெண்களுக்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 26 தொகுதிகள் மட்டுமே பொதுப்பிரிவிற்கு (open) எஞ்சியிருக்கும். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் நாம் செயல்பட்டால், தமிழ்நாடு உண்மையில் 6 தொகுதிகளை இழக்க நேரிடும். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை; மாறாக, ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கிறோம். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 20 தொகுதிகள் கிடைக்கும் — இதன் விளைவாக 39 பொதுத் தொகுதிகளும், 20 ஒதுக்கப்பட்ட தொகுதிகளும் அமையும். — மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை விளக்கினார்.

அதனால்தான் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைந்து மகளிருக்கான  33% இட ஒதுக்கீட்டு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.  ஆனால் இந்த மசோதாவை ஸ்டாலினின் வழிகாட்டலில், இண்டி கூட்டணி வேண்டுமென்றே தோற்கடித்தது!

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்களும் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்காவது அவர்களது பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இருக்க வேண்டும் என்று, மோடி கொடுக்க முயன்றார். அதைக் கெடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories