அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

annamalai bjp tn leader - 2026

சி எம். மகாதேவன்

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. அவர் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் இருந்தே இந்த வதந்தி ரெக்கை கட்டி பறந்து கொண்டு தான் இருக்கிறது. சென்ற டிசம்பரில் கூட கட்சிக்கு பெயர் வைத்து, கொடியெல்லாம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அண்ணாமலை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இன்று டெல்லி செல்லும் அண்ணாமலை இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் 2 நாளில் பேசுவதாக சொன்னது மேலும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. அதுவும் பாஜக கொடி இல்லாத காரில் வந்தார் என்றெல்லாம் செய்திகளை பார்க்கும் பொழுது சந்தேகம் ஊர்ஜிதம் ஆகிறது.

அண்ணாமலை எதற்காக தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்? என்ற கேள்வியில் இருந்து தான் பதில் தேட வேண்டும்.

அண்ணாமலை மீண்டும் மாநிலத்தலைவராக வேண்டும் என்பது தான் ஒவ்வொரு பாஜக தொண்டனின் விருப்பம். எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட அண்ணாமலை மீண்டும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த நடுநிலை மீடியா ஆட்கள் கூட அண்ணாமலை வந்தால் தான் பாஜகவுக்கு எதிர்காலம் என்று வெளிப்படையாக பேசுகிறார்கள்.

அண்ணாமலைக்கும் மீண்டும் தலைமை பதவியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவர் கட்சி தலைமையிடம் சில உத்திரவாதங்களை கேட்கிறார். அதில் மிக முக்கியமானது எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அண்ணாமலை எதிர்பார்க்கிறார்.

தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறிவிட்டது. விஜயின் வெற்றி முற்றிலுமாக எல்லாவற்றையும் கலைத்து போட்டு விட்டது. இன்று திமுக தனிமைப்பட்டு கிடக்கிறது. பதவி இல்லாமல் அதிகாரம் இல்லாமல் திமுகவால் 5 ஆண்டுகளை கடக்க முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் திமுக கண்டிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று இப்பொழுதே பேசப்படுகிறது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

பாஜகவின் கொள்கை எதிரி + அரசியல் எதிரி இரண்டுமே திமுக தான். அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை அண்ணாமலை ஒருபோதும் விரும்பமாட்டார். அவரது தலைமையில் அப்படி ஒரு இணைவு நடந்தால் அண்ணாமலையின் நம்பகத்தன்மை முற்றிலுமாக சிதைந்துவிடும். ஏற்கனவே அதிமுகவுடன் இணைய வேண்டும் என்று கட்சி தலைமை முயற்சித்த பொழுதே அதற்கு தடையாக இருந்தவர் அண்ணாமலை. கடைசியில் அவரது தலைமை பதவியை விட்டுக்கொடுத்து தனது நம்பகத்தன்மையை காப்பாற்றிக்கொண்டார். ஆனாலும் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அண்ணாமலைக்கு ஏற்பட்டது.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்று சொல்லலாம். ஆனால் அண்ணாமலை முன்வைக்கும் மாற்று அரசியலுக்கு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது ஒத்துவராது.

அண்ணாமலையின் நோக்கம் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும், பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் எப்போதும் பாஜக ஆட்சி வர வாய்ப்பே இல்லை. எனவே தோல்வியே கிடைத்தாலும் களத்தில் போராட நான் தயாராக இருக்கிறேன். நாம் காத்திருப்போம் என்ற அண்ணாமலையின் வழி கட்சி மேலிடத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அவர் ஒதுங்கி விட்டார்.

இப்போது மீண்டும் தலைவராகி விட்ட இடத்தில இருந்து அவர் பணிகளை துவக்கி கட்சியை ஆக்டிவாக கொண்டு செல்லும் போது நாளை திமுகவுடன் கூட்டணி என்று டெல்லி முடிவு செய்தால் அதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் தலைவராகிறேன், ஆனால் என் வழியில் தான் கட்சி நடக்கும். எந்த தலையீடும் இருக்கக்கூடாது, அதற்கு ஒப்புக்கொண்டால் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்பது தான் அண்ணாமலையின் ஒரே கண்டிஷனாக இருக்கும்.

ஆனால் டெல்லி தலைமை மாற்றி யோசிக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பாஜக தயங்கினாலும், திமுகவிடம் இருக்கும் 22 எம்பிக்கள் எண்ணிக்கை அனைத்தையும் மறக்கடிக்கும். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வருடம் இருக்கும் காலகட்டத்தில் 22 எம்பிக்கள் ஆதரவு கிடைக்கிறது என்பது பாஜகவுக்கு ஜாக்பாட் தான். அதுவும் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையும் குறைகிறது என்பதையும் இங்கே சேர்த்து கணக்கில் கொள்ள வேண்டும்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

எனவே பாராளுமன்ற தேர்தல் வரும் போது பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வரும் ஆதரவை வாங்கிக்கொள்வோம் என்று நிலைப்பாட்டையும் பாஜக எடுக்கலாம். அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தான் என்னுடைய பார்வை.

ஆனால் என்னை பொறுத்தவரை காங்கிரசும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, கம்யுனிஸ்டும் பாஜகவும் எப்படி சேர முடியாதோ, அகிலேஷ்யாதவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் எப்படி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாதோ அதே போல் தான் திமுகவும் பாஜகவும் கூட்டணி வைக்க முடியாது.

திமுக முன்னெடுத்த பாஜக எதிர்ப்பு என்பது மிக கடுமையானது. நுணுக்கமாக திட்டமிடப்பட்டது. காங்கிரசை காப்பாற்ற, திமுக மீண்டும் அதிகாரத்திற்கு வர மிக தெளிவாக பாஜகவை வில்லனாக கட்டமைத்து வெற்றி பெற்றது திமுக. இன்று வரை அந்த எதிர்ப்பு மனநிலையை முழுமையாக உடைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது பாஜக. அப்படிப்பட்ட எதிரியுடன் கூட்டணி வைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். மாற்று அரசியலுக்காக பாஜக பக்கம் வந்த தொண்டர்களே விரும்ப மாட்டார்கள்.

ஏற்கனவே இருந்த கூட்டணி தானே என்று சால்ஜாப்பு சொல்லலாம். ஆனால் கருணாநிதி காலத்து திமுக வேறு, இன்றைக்கு ஸ்டாலின் காலத்து திமுக வேறு. இன்றைய திமுக தேசவிரோத பிரிவினை பாதையில் நீண்ட தூரம் சென்று விட்டது. இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, பிரிவினைவாதம் இவைதான் இன்றைய திமுக. இதிலிருந்து திமுக தன்னை மாற்றிக்கொள்ளுமா என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதிலில்லை.

ஒருவேளை இந்த கூட்டணி அமைத்தால் திமுக சர்வைவ் ஆகிவிடும். ஆனால் பாஜகவால் சர்வைவ் ஆகமுடியாது என்பது மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

ஏனென்றால் திமுக முன்னெடுத்த அதே பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு அரசியலை விஜய் செய்வார். இன்றைய சமூக வலைதள யுகத்தில் எந்த கேள்விக்கும் பாஜகவால் பதில் சொல்லவே முடியாது. இது ஒரு சுழல். மீளவே முடியாத ஒரு சுழல்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

எனவே திமுக கூட்டணி என்பது ஒரு தற்கொலை முயற்சி. அதைத்தான் அண்ணாமலை அவர்களும் சொல்கிறார்.

இன்று அண்ணாமலை முன் இருப்பதே இரண்டே ஆப்ஷன்கள்.

ஒன்று கட்சி தலைமை சொல்வதை கேட்டு நடப்பது. ஒருவேளை நாளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவருக்கான பதவி கிடைக்கும். டெல்லி அரசியலை செய்யலாம்.

இல்லையென்றால் தனியாக போராடலாம். சமரசங்கள் செய்து கொள்ளாத தலைவனாக அவர் முன்வைத்த மாற்று அரசியலை நோக்கி பயணத்தை தொடங்கலாம்.

ஆனால் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் ஒரு கட்சியை ஆரம்பிப்பது அண்ணாமலைக்கு எந்த வகையிலும் பலன் தராது என்பது என்னுடைய பார்வை.

அடுத்த தேர்தலுக்கு 3 வருடங்கள் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் 5 வருடம். அதுவரை சர்வைவ் ஆக வேண்டும். இங்கிருக்கும் எல்லா கட்சியையும் எதிர்க்க வேண்டும். டெல்லி ஆசியும் இல்லாமல், அதிகாரமும் இல்லாமல் அரசியல் செய்வது சாதாரண விஷயமில்லை. இதெல்லாம் அண்ணாமலைக்கும் தெரியும்.

எனவே தான் அண்ணாமலை தனிக்கட்சி என்ற முடிவுக்கு போகமாட்டார் , அவர் இப்போதும் கட்சி தலைமையை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்று தான் நான் நம்புகிறேன். 2031 வரை எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று டெல்லி தலைமை முடிவெடுத்தால் அண்ணாமலை 2.0 வெற்றிகரமாக தொடங்கும்.

மோடி மற்றும் அமித்ஷா இருவரும் அண்ணாமலையின் முடிவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

பொறுத்திருந்து பாப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories