janagai mariamman temple ther - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
janagai mariamman temple ther - 2026

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது தமிழகத்தில் மிக நீண்ட நாட்கள் நடைபெறும் திருவிழா இதுவாகும்

சுமார் 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது சோழவந்தான் பெரிய கடை வீதி பகுதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம் எல் ஏ வடம் பிடித்து துவக்கி வைத்தார் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேல ரத வீதி வடக்கு ரத வீதி கறிக்கடை சந்து மூலக்கடை பகுதி முத்துக்குமரன் நகை மாளிகை ஆகிய பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்றது

தேரோட்டத்தில் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர் தேரோட்டம் நடைபெற்ற இடங்களில் பொது மக்களுக்கு நீர்மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது தேரோட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் சேத்தாலி வேஷம் போட்டும் ஊர்வலமாக வந்தனர்

சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மூலக்கடை பகுதியில் வாடிப்பட்டி தாலுகா தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் வழங்கினார்கள்

தேரோட்ட நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் மருது பாண்டியன் வள்ளி மயில் கொத்தாலம் செந்தில்வேல் ரேகா ராமச்சந்திரன் ஜெனகை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜா பணியாளர்கள் பூபதி, வசந்த், கவிதா , பெருமாள் உள்ளிட்டோர் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் கண்காணிப்பாளர், சோழவந்தான், காடுபட்டி உதவிக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் தேரை வடம் பிடித்துச் சென்றனர்.

தேரோட்ட நிகழ்ச்சியை மண்டக படிதாரர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு மற்றும் அவசரகால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.