railway news - 2026

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

நெல்லை கோவை சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
railway news - 2026
#image_title

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

  1. ரயில் எண் 06023 / 06024 சென்னை செண்ட்ரல் – போத்தனூர் – சென்னை செண்ட்ரல் அதிவிரைவு வண்டி
    22 ஏப்ரல் புதன் அன்று சென்னை செண்ட்ரலில் இருந்து மதியம் 3.10க்கு கிளம்பி அன்று இரவு 11.30க்கு போத்தனூர் சென்றடையும்.
    மறு மார்க்கத்தில், போத்தனூரில் இருந்து ஏப்ரல் 23ம் தேதி வியாழன் இரவு 11.30க்கு கிளம்பி, மறு நாள் காலை 8.20 க்கு சென்னை செண்ட்ரலுக்கு வந்து சேரும்.
  2. ரயில் எண் 06018 / 06017 தூத்துக்குடி – தாம்பரம் – தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி
    ஏப்ரல் 20, 27 ஆகிய தேதிகளில் துத்துக்குடியில் இரவு 11.30க்கு கிளம்பி தாம்பரத்துக்கு மறு நாள் மதியம் 12.30க்குச் சென்றடையும்.
    மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து ஏப்.21, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் மதியம் 3.30க்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 4.30க்கு தூத்துக்குடிக்கு வந்து சேரும்.
  3. ரயில் எண் 06045 / 06046 சென்னை எழும்பூர் – கன்யாகுமரி – சென்னை எழும்பூர்அதிவிரைவு வண்டி
    ஏப். 22 புதன் இரவு 11.50க்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு, மறு நாள் மதியம் 1 மணிக்கு கன்யாகுமரி சென்றடையும்.
    மறு மார்க்கத்தில் ஏப்.26 ஞாயிறு அன்று இரவு 11.25க்கு கன்யாகுமரியில் புறப்பட்டு, மறு நாள் முற்பகல் 11.15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
  4. ரயில் எண் 06028 / 06027 போத்தனூர் – சென்னை செண்ட்ரல் – போத்தனூர் சிறப்பு விரைவு வண்டி
    போத்தனூரில் ஏப். 21, 22, 25, 26 ஆகிய தேதிகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை செண்ட்ரலுக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும்
    மறு மார்க்கத்தில் ஏப். 21,22, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னை செண்ட்ரலில் இருந்து மாலை 6.35க்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 4 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

  1. (1) தாம்பரம் – செங்கோட்டை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06089 , 22/04/26 புதன்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு மேலமருவத்தூர் விழுப்புரம் பண்ருட்டி திருப்பாதிரிபுலியூர் சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக 23/04/26 வியாழக்கிழமை காலை 05.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

(2)மறுநாள் 23.04.26 வியாழக்கிழமை செங்கோட்டை – சென்னை பீச் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் எண் 06090 செங்கோட்டையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தென்காசி கடையநல்லூர் சங்கரன்கோவில் ராஜபாளையம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி விருதுநகர் மதுரை கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் திருச்சி ஶ்ரீரங்கம் அரியலூர் விருத்தாசலம் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் சென்னை எழும்பூர் வழியாக மறுநாள் 24/04/26 வெள்ளிக்கிழமை காலை 10.03 மணிக்கு தாம்பரத்தையும் காலை 10.50மணிக்கு சென்னை எழும்பூரையும்
11.30 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலயத்தையும் சென்றடையும்.

இந்த ரயில்களில் 3 அடுக்கு ஏசி பெட்டிகள் -4, இரண்டாம் வகுப்பு ஏசி இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் -10, முன்பதிவில்லா பெட்டிகள்-4, திவ்யாங்ஜன் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் -2 இணைக்கப்படும்.

முன்பதிவு நாளை 18.04.26 சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.
பொது மக்கள் இந்த ரயில்களை பயன்படுத்தக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.