pm narendra modi - 2026
#image_title

4398 நாட்கள் நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை  ஜூன் 10 இன்று, பாரதப் பிரதமர் நரேந்திர  மோடி முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார். 

2014ம் ஆண்டு மே 26ம் தேதி நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அன்று முதல் இன்று வரை தொடர்ச்சியான நாட்கள், அவர் பிரதமராக பொறுப்பில் இருக்கிறார். 

முன்னதாக, இந்திரா 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை 4077 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்தார். அப்படி, முன்னாள் பிரதமர் இந்திராவின் மிக நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்ற சாதனையை கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று, நரேந்திர மோடி முறியடித்தார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, 1952 மே 13ம் தேதி முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக பதவியேற்றார். பிறகு தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பிரதமராகப் பணியாற்றினார். இந்நிலையில் இன்று நாட்டின் நீண்ட கால பிரதமராக இருந்த நேருவின் சாதனையை பிரதமர் மோடி முறியடிக்கிறார்.

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை தில்லி பாரத் மண்டபத்தில் பிரமாண்ட கூட்டம் நடைபெறுகிறது. தேஜ கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பிற முக்கிய மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். 

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

பிரதமர் மோடி தனது 12 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் அவரது தலைமையின் கீழ் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற சாதனையை 4,399 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் தொடர்கிறது…

இந்தியாவில் நீண்ட காலம் பணியாற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்
தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பணியாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை
32 சர்வதேச விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 19 முறை உரையாற்றியுள்ளார்
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர்
தனது அரசியல் வாழ்க்கையில் ஒரு தேர்தலில் கூட தோல்வியடையாதவர்
மாநில முதலமைச்சராக முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்த ஒரே பிரதமர்

4,399 நாட்கள் : ஒரு நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாட்கள்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து; அதன் மூலம் மாநிலத்தை தேசிய நீரோட்டத்தில் இணைத்தது!
500 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
UPI – உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை அமைப்பு
GST – ஒரே நாடு, ஒரே வரி 
நக்ஸல் அச்சுறுத்தல் இல்லாத இந்தியா
வந்தே பாரத் – இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்
திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத இந்தியா
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரம்

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

தலைமைத்துவம் – ஒரு வரலாற்றுச் சாதனைப் பயணம்!
மாற்றத்தை ஏற்படுத்திய 4,399 நாட்கள் 

இந்தியாவின் நீண்ட காலம் பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி திகழ்கிறார்
சீர்திருத்தங்கள் முதல் சிறப்பான பலன்கள் வரை
58 கோடிக்கும் அதிகமான ‘ஜன் தன்’ (Jan Dhan) கணக்குகள்
44 கோடிக்கும் அதிகமான ‘ஆயுஷ்மான்’ (Ayushman) அட்டைகள்
74-லிருந்து 164-ஆக உயர்ந்த விமான நிலையங்கள்
102 கோடிக்கும் அதிகமான இணைய இணைப்புகள்
1,000 கி.மீ-லிருந்து 7,332 கி.மீ-க்கும் அதிகமான விரைவுச் சாலைகள் (Expressways)
1.4 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனங்கள்
21,801 கி.மீ-லிருந்து 69,873 கி.மீ-க்கும் அதிகமான ரயில்வே மின்மயமாக்கல்
6 கோடி -> 33 கோடிக்கும் அதிகமான மொபைல் உற்பத்தி அலகுகள்
₹86,647-லிருந்து ₹2,43,180-ஆக உயர்ந்த தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)
₹700 கோடி-லிருந்து ₹38,424 கோடியாக உயர்ந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி
நிதிச் சேர்க்கை முதல் டிஜிட்டல் அதிகாரமளித்தல் வரை; உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை.
இந்தியாவின் எழுச்சியை வேகப்படுத்திய 4,399 நாட்கள்

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

அமெரிக்கா வாழ்த்து!

நீண்ட கால பிரதமர் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க செனட்டர் ஜான் கார்னின் வாழ்த்து தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்…
”இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். மூன்று முறை மக்களாட்சி  ஆணையைப் பெற்று, 140 கோடி மக்களின் நம்பிக்கையின் மூலம் 4,399 நாட்கள் தலைமை தாங்கியுள்ளார். 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது முதல் இந்தியாவை உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக மாற்றியது வரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending