ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

gnanapeet award - 2026

பொதுவாக இலக்கியம் என்றாலே சர்ச்சை நிறைந்தது என்பதை எழுதப்படாத விதியாக இருக்கிறது. முக்கியமாக இலக்கியவாதிகள் என்று வரும்போது அரசியல்வாதிகளைப் போன்று குழுக்களாகப் பிரித்துக் கொண்டு சண்டை போடுபவர்கள் என்கிற கண்ணோட்டமும் உலகம் முழுதும் ஏற்பட்டிருப்பது தான்! காரணம் இது சிந்தனை வயப்பட்டும் சித்தாந்தங்களுக்குள் சிக்கிக் கொண்டும் வெளிப்படுத்தும் எண்ணங்களின் தொகுப்பு என்பதால்.

எனவே சர்ச்சை இல்லாமல் இலக்கியம் முழுமை பெறாது என்பது ஒரு விதத்தில் அதன் ஜனநாயகத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இருந்தாலும் அதிக அளவில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஒருவருக்கு இது போன்ற இலக்கிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அது பெருமளவில் அந்த அமைப்பின் மீதும் விருதின் மீதும் அவமரியாதையை சமூகத்தில் ஏற்படுத்த தான் செய்யும். அத்தகைய நிலைமை இப்போது ஞானபீடம் விருதுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு காரணமாக அமைந்தது, தமிழகத்தின் சினிமா கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிற ஞானபீட விருது.

அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு ஆள்பவர்களுக்கு அனுசரணையாக வாழ்ந்து கொண்டு இலக்கியம் எனும் போர்வையில் அரசியல் பிரசாரம் செய்து வரும் வைரமுத்து போன்றவர்களுக்கு விருது அளிக்கப்படுவது உண்மையில் இலக்கிய ஆர்வலர்களுக்கு பெரும் மனச்சோர்வையும் கொந்தளிப்பையும் தந்துள்ளது என்பது கடந்த ஓரிரு தினங்களாக வெளிவரும் கருத்துக்களை பார்த்தபோது புரிகிறது. அவ்வாறு வந்த சில கருத்துகள்…


முகத்தில் பூசிய கரி!

  • ஜடாயு, பெங்களூரு

முதலில் திட்டமிட்ட வதந்தியோ என்று நினைத்தேன். ஆனால் கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு என்று செய்திகளில் வந்து விட்டது. ஒரு தேசத்தின் உயர்ந்த விருதுகள், அதுவும் கல்வி, கலை, இலக்கியம், கலாசாரம் போன்ற துறைகளின் விருதுகள் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர்களுக்கும் கயவர்களுக்கும் அளிக்கப் படுவது என்பது பெரும் கொடுமை. அந்தத் தேசத்தின் அறிவுப் பாரம்பரியத்தின் மீது வீசப்படும் மற்றுமொரு சாணி, அதன்மீது படியும் மற்றுமொரு கறை. அப்படிப்பட்ட ஒரு தருணம் இது.

1965ல் நிறுவப்பட்ட பாரதத்தின் மிக உயர்ந்த இலக்கிய விருது ஞானபீட விருது. கடந்த வருடங்களில், தாராசங்கர் பந்தோபாத்யாய, குவெம்பு, ராமதாரி சிங் தினகர், சிவராம் காரந்த், ஜெயகாந்தன், எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற மகத்தான இலக்கிய சாதனையாளர்களுக்காக வழங்கப் பட்ட இந்த விருதை இந்த வருடம் வைரமுத்து வாங்குகிறார்.

ஏற்கனவே 6-7 முறை சிறந்த திரைப்பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளையும், பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் “வாங்கி”யுள்ள வைரமுத்து, 2018ல் இந்த விருதுக்காக கடுமையாக முயற்சி செய்வதாக வதந்திகள் வரத் தொடங்கியதும், அப்போது அதை எதிர்த்து ஆன்லைன் பெடிஷனில் கையெழுத்து போட்டது, கையெழுத்து சேகரித்தது எல்லாம் நினைவு வருகிறது. ஆண்டாளைக் குறித்த அவதூறுப் பேச்சினால் அப்போது வைரமுத்துவின் மீது படிந்திருந்த எதிர்மறைப் பிம்பத்தில் விருதை வாங்கும் அவரது முயற்சி வெற்றியடையவில்லை என்று இப்போது தோன்றுகிறது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

ஆனால், வைரமுத்து போன்ற ஜந்துக்கள் இத்தகைய விஷயங்களில் மனம் தளர்வதில்லை. எந்தவித இலக்கியத் தரமும் இல்லாத சராசரிக்கும் கீழான ஒன்றிரண்டு புனைவுகளையும், பாலியல் வக்கிரங்களும் வெறுப்புணர்வு அரசியலும் தளும்பும் பாடல்களையும் மட்டுமே எழுதியது போக, பாலியல் அத்துமீறல்களுக்காக பாதிக்கப்பட்ட #Metoo பெண்கள் வெளிப்படையாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானவர் இந்த நபர். இந்த உயர்விருது இத்தகைய ஒரு ஆசாமிக்கு வழங்கப் படுவது அசிங்கம், தேசிய அவமானம்.

அதிகாரபூர்வமாக ‘பாரதிய ஞானபீடம்” என்பது ஒரு தனியார் அறக்கட்டளை என்று கூறப்பட்டாலும், ஒவ்வொரு வருடமும் இந்த விருதுக்கான தேர்வுகள் மத்திய அரசின் பார்வையையும், பரிந்துரையையும் தாண்டி வழங்கப் படுவதில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்ற இந்த வருடம், இப்படியாகப் பட்ட ஒரு மிக மோசமான விருதுத் தேர்வை செய்துள்ள மத்திய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். அதுவும் பாரத கலாசாரத்தையும், இந்து பண்பாட்டையும் பாதுகாக்கக் கூடிய கட்சி என்பதையே மையமாக தமிழ்நாட்டில் முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஆதரவாளர்கள், தொண்டர்கள் முகத்தில் இதைவிட மோசமாக கரியைப் பூசவே முடியாது. வெட்கம்.


சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?

  • வேதா டி. ஸ்ரீதரன்

ஆண்டாளை தே* என்றவனுக்கு ஞானபீட விருது.
மத்திய அரசாங்கம் தவறிழைத்து விட்டதாம். மோதிஜி குற்றவாளியாம்.

மன்னிக்கவும்.

ஞானபீடம் என்பது ஒரு பணக்காரக் குடும்பம் தனது அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காக ஏற்படுத்திய விருது. அது பல வருடங்களாகப் பாரபட்சமில்லாமல்தான் இயங்கி வருகிறது. ஆனாலும், ஆங்காங்கே – குறிப்பாக, மாநில வாரியாக – ஏற்படுத்தப்படும் தேர்வுக் குழுவினரின் முடிவுகள் எப்படி அமைகின்றனவோ, அதன்படிதான் அந்த அமைப்பு செயல்பட முடியும்.

இதற்கும் மத்திய அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

பாரதத்தில் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த தேர்வுக்குழுக்களில் ரத்த வாடை வீசும். காரணம், இலக்கியம் என்பதே தற்கால இந்தியாவில் இடதுசாரிகளின் குத்தகைப் பொருள் என்றாகி விட்டது.

அதிக துர்நாற்றம் வீசுவது சாகித்ய அகாதமியில்தான். காரணம், அது மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் சுதந்திர அமைப்பு. அரசுப் பணம் என்பதாலும், சுதந்திர அமைப்பு என்பதாலும் அதில் இடதுசாரிகள் அதிகம் கோலோச்ச முடிகிறது. சிவலிங்கத்தின்மேல் சிறுநீர் கழித்தேன் என்று எழுதிய கன்னட கார்ல்புகிக்கு ஓடோடிப்போய் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஆண்டாள் பிரச்சினையில் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுமே (அதுவரை இல்லாமல், திடுதிடுப்பென) மாலனுக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் சாகித்ய அகாடமி விருது வழங்கினார்கள். (ஆண்டாள் திருவெம்பாவையை இயற்றினார் என்று இவ்விருவரும் கண்டுபிடித்த காரணத்துக்காகவும் இருக்கலாம்.)

அமெரிக்க நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு (மாதொருபாகன் என்ற நாவலில்) திருச்செங்கோட்டுத் தேர்த்திருவிழாவைப் பற்றிக் கொச்சையாக எழுதிய பெருமாள் முருகனை உள்ளூர் ஹிந்துக்கள் நாறடித்து விட்டார்கள். அவனும் தனது புத்தகத்தை வாபஸ் வாங்கிவிட்டு எழுத்துப் பணிக்குத் தலைமுழுக்குப் போட்டு விட்டான்.

ஆனால், இடதுசாரிகளின் மானம் போய்விட்டதே, என்ன செய்வது? அட்ரஸ் இல்லாத அவனுக்காக இந்தியா முழுவதும் ஊடகங்களில் ஒப்பாரி வைத்தார்கள். மேலும், மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு (மோதிஜி பிரதமராக இருக்கும்போதே) சாகித்ய அகாடமி விருது வழங்கி அரிப்பைத் தணித்துக் கொண்டார்கள்.

ஒருபுறம் பாரத அரசாங்கம் நக்சல்களை எதிர்த்துப் பல விதங்களில் போராடிக் கொண்டிருக்கும்போது – ஏராளமான காவல்துறை, ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கொண்டிருக்கும்போது – நக்சல்கள் தேசபக்தர்கள் என்று அருந்ததிராய் எழுதிய புத்தகத்தை (மத்திய அரசாங்கத்தின் நிதியுடனும், கண்காணிப்பின் கீழும் செயல்படும்) மனோன்மணியம் பல்கலைக்கழகம் பாடநூலாக வைத்தது.

இத்தகைய சூழலில்கூட ஓரளவு மரியாதைக்குரியதாக இயங்கி வந்தது ஞானபீடம். எனவேதான், அது ஆண்டாளை தே* என்றவனுக்கு விருது வழங்கியது என் போன்றவர்களைப் புருவம் உயர்த்த வைக்கிறது.

அதேநேரத்தில், இந்த விருது வழங்கும் குடும்பம்தான் எகனாமிக் டைம்ஸ் அவார்ட், ஃபிலிம்ஃபேர் அவார்ட், மிஸ் இந்தியா அவார்ட் ஆகியவற்றையும் வழங்குகிறது என்பதைப் புரிந்து கொண்டால், ஞானபீடம் என்பது வெறும் ஃபேமிலி ஷோ மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, இதற்காக அலட்டிக்கொள்வது அனாவசியம்.

ஆனாலும், ஞானபீட விருது என்பது சான்றிதழ், (ரூ 11 லட்சம்) பணமுடிப்பு ஆகியவற்றுடன் ஸரஸ்வதி விக்கிரகத்தையும் உள்ளடக்கியது. ஆக, ஆண்டாளை தே* என்றவனுக்கு வாக்தேவி ஸரஸ்வதியைப் பரிசாக வழங்கப் போகிறார்கள்.

அந்த விக்கிரகத்தை அவன் ஈ. வெ. ரா., கருணாநிதி சமாதிகளில் வைத்து அஞ்சலி செலுத்தினாலும் செலுத்துவான். யார் கண்டது? பாம்புக்கறி தின்னும் கூட்டத்தில் வாழ்கிறோம். நடுக்கண்டம் நமக்குத்தான் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவதுதான் புத்திசாலித்தனம்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

சூடு சொரணை, வெட்க, மானமெல்லாம் நமக்கெதற்கு?


உணர்ச்சிவசப்பட என்ன இருக்கிறது?

  • டி.கே.எல். ஸ்ரீராம்

இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதாக கருதப்படும் ஞானபீட விருது, மத்திய அரசால் வழங்கப்படுவது கிடையாது. இந்த விருதை பாரதிய ஞானபீடம் (Bharatiya Jnanpith) என்ற தனியார் பண்பாட்டு அமைப்பு வழங்குகிறது.

இது 1944-ல் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாகு சாந்தி பிரசாத் ஜெயின் மற்றும் அவரது மனைவி ரமா ஜெயின் ஆகியோரால் நிறுவப்பட்டது. முதல் விருது 1965-ஆம் ஆண்டு மலையாள எழுத்தாளர் ஜி. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. ஞானபீட விருதுக்கும் மத்திய அரசுக்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை.

அரசு விருதுகளான ‘சாகித்ய அகாடமி’ போன்றவற்றுடன் இதை ஒப்பிடக்கூடாது; அவை மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளால் வழங்கப்படுபவை. இருப்பினும், இந்த விருதின் கௌரவம் கருதி, பெரும்பாலும் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்லது துணைக் குடியரசுத் தலைவர் தான் விழாவில் கலந்துகொண்டு விருதை வழங்குவார்கள்.

விருது பற்றிய முக்கிய விவரங்கள்:

பரிசுத் தொகை | ₹11 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி சிலை.

விருதுக்கு தகுதி என்னவென்றால் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும். தேர்வு முறை நடக்கும் விதம் எப்படி என்றால் ஒரு குறிப்பிட்ட நூலுக்கு மட்டுமல்லாமல், அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பிற்காக வழங்கப்படுகிறது.

இதுவரை அகிலன், ஜெயகாந்தன் மற்றும் கவிஞர் வைரமுத்து (2024-ஆம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது) ஆகியோர் பெற்றுள்ளனர். திரும்பவும் சொல்வது என்னவென்றால் மத்திய அரசு நேரடியாக சாகித்ய அகாடமி விருதுகளைத் தான் வழங்குகிறது. ஞானபீடம் என்பது ஒரு கௌரவமிக்க தனியார் இலக்கிய அங்கீகாரம். ஆக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories