pm modi in iit delhi - 2026

‘வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில், இளம் தலைமுறையினரின் திறமையிலும், வலிமையிலும் முழு நம்பிக்கை இருக்கிறது’’  என்று, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தலைநகர் புதுதில்லியில் ஐஐடி., – இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா ஆக.8 நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசினார்.  அப்போது அவர் குறிப்பிட்டதாவது…

நண்பர்களே, நான் வாழ்க்கையின் சில நடைமுறை விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.   கல்விவளாக வாழ்க்கை, மற்றும் கல்விவளாகத்தின் வெளியேயான வாழ்க்கை.   இவை இரண்டுக்குமிடையே, பெரிய வித்தியாசம் இருக்கிறது.  ஐஐடியின் தேர்வுகளில் பாடத்திட்டம் இருக்கிறது.  ஆனால் வாழ்க்கையின் தேர்வினிலே அனைத்துமே, பாடத்திட்டத்துக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.   

நினைவுக்குக் கொண்டு வாருங்கள்!!  கல்விவளாக வாழ்க்கையிலே, அனைத்துக் கூறுகளும் தெளிவாக இருந்திருக்கும்.  என்ன படிக்க வேண்டும், எந்த assignmentஐ முடிக்க வேண்டும், எந்தத் தேர்வை எழுத வேண்டும், அனைத்தும் முன்னமேயே தீர்மானிக்கப்பட்டவை.   

ஆனால் வாழ்க்கையோ, சற்றே வித்தியாசமான வழியிலே செயல்படுகிறது.  அங்கே எந்தவொரு திட்டமிட்ட பாடத்திட்டம் கிடையாது, எந்தவொரு வினாத்தாளும் கிடையாது.  பல வேளைகளிலே, இதைக்கூட யாரும் தெரிவிப்பதில்லை, அதாவது உண்மையான வினா எது என்பதை.  அந்த வினாவையும் கூட, நீங்களே தான் அடையாளம் காண வேண்டியிருக்கும்.   

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

நான் ஐஐடியினுடைய, பல முன்னாள் மாணவர்களுடைய பயணத்தைப் பார்த்திருக்கிறேன்.  அவர்களுடைய வெற்றிக்கான காரணம், என்னவென்று நினைக்கிறீர்கள்?   அவர்கள் சரியான விடையை அளித்தார்கள் என்பதா?   அவர்களுடைய வெற்றிக்கான காரணம் என்னவென்றால், அவர்கள், அந்த வினாவை அடையாளம் கண்டார்கள், அதாவது எதை இந்த உலகமானது, வினா என்று ஏற்பதைக் கூடத் துறந்து விட்டது.  அவர்கள், அந்த சிக்கல்களுக்கான தீர்வைத் தேடினார்கள்.  ஆனால் மற்றவர்களோ, அந்தச் சிக்கல்களை சகித்துக் கொள்ளப் பழகியிருந்தார்கள். 

 ஆக அந்த வகையிலே, வாழ்க்கையிலே, தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பராமரியுங்கள்.  கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தாகத்தை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுங்கள்.  விழிப்பு உணர்வை பாதுகாப்பாய் வைத்திருங்கள்.  எந்த விஷயங்கள் சிந்திக்காமல் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, அவற்றை சோதனை செய்து பாருங்கள். 

அவற்றின் மீது வினாக்களை எழுப்புங்கள்.  கேள்வி கேட்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள்.  அவற்றுக்கான தீர்வுகளைக் காணத் தேவையான, நெஞ்சுரத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.  இந்த எண்ணத்தையே, உங்களுடைய, தனி அடையாளமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

நண்பர்களே, உங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும்.  ஒவ்வொரு தலைமுறைக்கு முன்னாடியும், அந்த காலகட்டத்துக்கே உரித்தான சவால்கள் இருந்திருக்கு.  அதே போல ஒவ்வொரு தலைமுறைக்கும்னு, ஒரு தேசியக் கடமையும் இருக்கிறது.  நம்முடைய தேசமானது, அடிமைத்தனக்காலத்தையும் பார்த்திருக்கு, அந்தத் தலைமுறைக்கு முன்னால, ஒரே ஒரு, இலட்சியம் தான் இருந்திச்சு.  பாரதத்தோட விடுதலை.  

அதற்காக அவங்க, தியாகங்கள் புரிஞ்சாங்க.  நீண்டகாலம் போராடினாங்க.  இன்னைக்கு நாம, சுதந்திர பாரதத்தில சுவாசிக்கறோம்னா, அதன் பின்னணியில, அந்தத் தலைமுறையோட தவம், தியாகம், மற்றும் உயிர்த்தியாகம் அடங்கியிருக்கு.  மேலும் நண்பர்களே இன்றைய காலகட்டத்திலே, நம்ம முன்னால இருக்கற சவால்கள் வேறுபட்டதா இருக்கு.  ஆகையினால நம்ம பொறுப்பும் கூட வித்தியாசமானது. 

நம்ம வாழ்க்கையோட அடுத்த, 30-35 ஆண்டுகள்ல, நீங்க என்ன பணியை ஆற்றினாலும் கூட, அது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நம்ம பயணத்தில தாக்கமேற்படுத்தும்.  ஆகையினால, உங்களோட அனைத்து முடிவுகளோட ஆதாரம் என்னவா இருக்கணும்னா, இதனால தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும்ங்கறது தான்.  இதனால தேசத்தோட எந்தத் தேவை நிறைவடையும்?  

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

இன்று பாரதம், பொருளாதார தற்சார்பு, தொழில்நுட்ப தற்சார்பு, தொழிலக தற்சார்பு, இப்படி அனைத்துத் துறைகள்லயும், தற்சார்பு நிலையை அடைய, பணியாற்றி வருகிறது.  இது தான், வளர்ச்சியடைந்த பாரதத்துடைய பலமான, அடித்தளத்தோட, ஆதாரம்.  இந்த பலமான அஸ்திவாரத்தின் மீது, நீங்க எல்லாரும் ஒரு ரொம்ப அழகான வளர்ந்த பாரதத்தை, நிர்மாணம் செய்ய வேண்டும். 

தமிழ்/ குரல்: ஆர். சுதர்ஸன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending