அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

annamalai bjp tn leader - 2026

அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது  We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார். அறிவித்த அன்று காலையில் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 20,000 க்கு கீழே இருந்தது. அவரின் அரசியல் அறிவிப்பு மற்றும் கோரிக்கைக்கு பின்னர் அதில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அன்றைய இரவிற்குள் 10 லட்சத்தை தாண்டியது. 

விஜய் இதுபோல ஒரு முன்னெருப்பை சில வாரங்களுக்கு முன்பிருந்து விளம்பரப்படுத்தி ஆரம்பித்தபோது, 22 லட்சம் பேர் சேர்ந்தார்கள். எந்த அறிவிப்பும் இல்லாமல் அண்ணாமலை விலகிய செய்தி பலரை சேராமாலே இது என்பது குறிப்பிடத்தக்கது. சில நண்பர்கள் இது ஒரு கோடியை ரொடும்.என்கிறார்கள், அபப்டி எனக்கு தோன்றவில்லை, ஆனால் விஜயின் இலக்கை மிஞ்சிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த குறியீடு அவருக்கான ஆதரவு தளத்தை, தாகத்தை, தாக்கத்தை உணர்த்துவதாக இருக்கிறது என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். 

இது மூப்பனார் தொடங்கிய TMC போல ஒரு தேசியவாதத்தை ஆதரிக்கும் கட்சி. உணமையான செக்யூலரிஸம் என இந்து தர்மத்தின்படி நம்பிக்கை, வழிபாட்டு உரிமையில் தலையிடாத ஒரு நிலையை ஏற்றிருக்கும். பாஜகவும் இதே கொள்கையை கொண்ட கட்சியாக இருந்தாலும், திமுக அதற்கு மதசாயம் பூசியதால், அதை உடைக்க முடியவில்லை, ஆம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவைதான் செக்யூலர் பார்டி. ஏனெனில் பாஜகாவால் திமுகவை உதைக்க முடியவில்லை. 

தவெக என்பது எப்படி மெஷினரிகளால் கிரியேட் செய்த திமுகவின் கார்பன் காப்பியோ, TMC எப்படி காங்கிரஸின் காப்பியோ அதுபோல அண்ணாமலையுன் புதிய கட்சி பாஜகவின் கார்பன் காப்பியாக இருக்கும். அப்போது எதற்கு தனி கட்சி என்றால், பாஜக என்ற தேசிய கட்சிக்கு தமிழகம் என்பதைவிட இந்தியா என்பது முன்னுரிமை என்பதால், தமிழகத்தின் நலன்கள் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. திமுகவில் குடும்ப நலன்களுக்காக கட்சி சமரசம் செய்துகொண்டது போல என்பதனால் தவெக கொள்கையில் எதிரிகளல்ல, அரசியில் எதிரிகள். 

அண்ணாமலைக்கு இந்த திறமை இருந்ததால்தான் அவருக்கு கட்சியில் சேரும்போதே பதவி, அடுத்த ஒரு வருடத்தில் மாநில தலைவர் பதவி, முன்பு எந்த தலைவருக்கும் இல்லாத சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை முழுதாக கொடுக்கவில்லை (2024 வேட்பாளர் தேர்வு, அதிமுகவுடன் கூட்டணி என்று தாமதித்ததால் கொடுக்க வேண்டிய நேரத்தில் (தேர்தலுக்கு மிக அருகில்) கொடுக்கவில்லை. அது தேசிய கட்சிகளுக்குள்ள சாபம்.

ஆனால் அந்த தேர்தலில் 2014 ஆண்டு பாஜக கூட்டணி பெற்ற சீட்டுக்களை வாங்க முடியவில்லை, ஓட்டுக்களைத்தான் அண்ணாமலையால் வாங்க முடிந்தது என்றால், அது தவறு.  அந்த தேர்தலில் பாஜக தேமுதிகவின் ஜூனியர் பார்ட்னர், அதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%.ஆனால் 2024 ல் பாஜக தலைமையில் அமைந்த கூட்டணியில் பாஜக பெற்றது 11.34%. அதில் பாமகவை கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் பாஜக சற்றேறக்குறைய 18% வாங்கி இருக்கும். பாஜகவின் மத்திய தலைமை பாமகவை கூட்டணியில் சேர்க்க காரணம், அதிமுகவின் வெற்றியை தடுப்பதுதான் பிராதானமாக இருந்தது என்பதால், அண்ணாமலைக்கு தேவையான சுதந்திரம் அங்கேயும் கிடைக்கவில்லை.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

அதுவல்லாமல் பாஜகவிற்கு தொடந்து மதசாயம் பூசிய திமுக மீது பல வழக்குகள் இருந்தும், பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதை வெற்றி பெற அனுமதித்தது. அதிலும் TR பாலு, கனிமொழிக்கு எளிதாக வெல்லும் வாய்ப்புகளை பாஜக தாரை வார்த்து கொடுத்தது. அப்போதே அவர்களை தண்டித்து இருந்தால் பாஜக அன்றே சில தொகுதிகளிலாவது ஜெய்த்திருக்கும். 

அவையெல்லாம் முடிந்துபோனவை. ஆனால் தமிழக சட்டமன்றத்திற்கு களத்தை திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சி என்ற நிலையில் தயார் செய்து வைத்தபோது, அதிமுக கூட்டணி மூலம் அதை தவெகவிற்கு தாரை வார்த்து கொடுத்தது. அதுவும் பாஜக ஆட்சி அமைக்கவேண்டும் என்பதற்காகவல்ல, திமுக மீண்டும் ஆட்சியில் அமராமல் இருப்பதற்காக ஒரு பக்கம், மறுபக்கம் அதிமுக, தவெகவுடன் சேராமல் தடுப்பதற்காக மறுபுறம்.

இப்படி தமிழக பாஜக என்பது மத்திய தலைமையின் தேவைக்காக என்றபோது, அதனால் தமிழக பாஜக அதற்கான வாய்ப்பை மீண்டும் நழுவவிட்டது, அதுவே வருங்காலத்திலும் தொடரும் என்பது எதார்த்தம். அது தேசிய நோக்கில் சரிதான் என்றாலும், தமிழகத்தின் நலன் சமரசம் செய்துகொள்ளப்பட்டது. 

இன்று தவெக ஆட்சியில் உள்ளது. ஆனால் அதற்குரிய் அனுபவமோ, திமுக விட்டுச்சென்ற மிக மோசமான நிதி நிலையால், துளிகூட அரசு ஆளுமை என்ன மற்ற வகைகளில் கூட அனுபவம் இல்லாததால் தவெக கட்சி தடுமாறுகிறது, தடம் மாறுகிறது. அதன் செயல்பாடுகள் வெறும் வாய்ச்சவாடல் என்பதால் அது மீண்டும் இடைத்தேர்தலில், அதுவும் திருச்சியில் வெல்லுமா என்பதே சந்தேகத்துக்கு உரியதாகிவிட்டது. 

ஏனெனில் அதன் வாக்குகள் சரிவடைந்துள்ளதாக செய்திகள் இருந்தாலும் அதனுடன் இப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, அடுத்து மதிமுக என்று  இருப்பதாலும், ஆளும் கட்சி என்பதாலும், அதற்கு வெற்றிபெற வாய்ப்புகள் போதுமானது. ஆனால் அதன் செயல்பாடுகள், கொடுத்த வாக்குறுதிகளில் ஏமாற்று என்று அதே திமுக பாலிசியால் அதற்கு மக்களிடம் எதிர்ப்பு மிக குறுகிய காலத்தில் எழுந்துள்ளது. 

இந்த குறுகிய காலத்தில் ஏற்பட்ட எதிர்ப்புக்கு முக்கிய காரணம் திமுகவின் சிறப்பான எதிர்கட்சி என்ற அதன் செயல்பாடுகளே என்பதை நாம் மறைக்க முடியாது. முதலில் அந்த எதெப்பு ஆளும் கட்சிக்கு சாதகத்தைத்தான் கொடுத்தது, ஆனால் தவெகவின் நிர்வாக செயலற்ற இயாலமையால் அது எதிராக திரும்பி வருகிறது. இப்போதுள்ள திமுகவின் மைனாரிட்டி, கூட்டணி இழப்பால் அதனால் தேர்தலில் வெல்லும் நிலையில் இருந்து சருக்கிவிட்டது. அதே சூழலில் அதிமுக கிட்டத்தட்ட தனது இருப்பை இழந்துவிட்டது என்றதால், அதனாலும் வெல்ல முடியாது. 

இந்த சூழலில் இந்த தேர்தலில் அண்ணாமலை கட்சி போட்டியிட்டால், கனிசமான தவெக வாக்குகளை இழக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதன் மூலம் எதிர்கட்சி வாக்குகள் சிதையாமல் சேர்ந்தால், அது ஜெய்க்க வாய்ப்புண்டு. திமுக, அதிமுக, பாஜக என்று மூன்றும் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால், அது ஒரு மிக வலுவான ஒரு டஃப் ஃபைட்டை தவெகவிற்கு கொடுத்து வெற்றிபெற முடியும். திமுக தேர்தல் வெற்றிக்கு தேவைப்பட்டால் காவடி எடுக்கவும் தயங்காது.

ALSO READ:  அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி...!

தவெகவின் செயல்பாடுகள் வரப்போகும் நாட்களில் அதன் செயல்பாடுகளை பொறுத்தே, எதிரே இருக்கும் கட்சிகளுக்கான வாய்ப்பு என்பது முடிவாகும். தற்போது கைகாட்டும் தவெகவின் ஆட்சி என்பது திரிணமுள் காங்கிரஸ் கட்சியின் நிலையை நோக்கி செல்கிறது என்றால், அந்த ஆதரவு அண்ணாமலை பக்கம் மாறும். அதாவது திராவிட கட்சிகளின் கூட்டணியில் பாஜக ஒரு பக்கம், அண்ணாமலை ஒரு பக்கம் என்று மாறலாம். இப்போது நாம் முன்பு சொன்ன மெஷினரிகளின் நோக்கம் என்பது தவெக ஒரு பக்கம், திமுக ஒரு பக்கம் என்று தமிழக அரசியலை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது என்றால் RSS இன் இந்த மூவ் வெற்றி பெறுமேயானால், மெஷினரிகளுக்கு தமிகத்தில் எழுதப்பட்ட முடிவுரையல்லவா?

நான் 1984 லிருந்து பாஜக ஆதரவாளன். ஆனால் தமிழகத்தில் 2004 வரை திமுகவின் ஆதரவாளன் என்பதை விட அதிமுகவின் எதிர்ப்பாளர். அதன் பின் நடந்த திமுகவின் விலகலாலும், 2006-11 ல் நடந்த திமுகவின் கேடுகெட்ட ஆட்சியால் அந்த கட்சியை தோற்கடிக்கும் கூட்டணிக்கு வாக்களித்து வருகிறேன். மத்திய பாஜகவின் வெகுசில நடவடிக்கைகள் தவிர முழுமையாக பாஜகவை ஆதரித்து வருகிறேன், இனிமேலும் அது தொடரும். 

ஆனால் தமிழகத்தில் அண்ணாமலையின் வழி என்பது மாற்று வழியில்லாத கட்டாயம் என்பதால் முழு மனதோடு ஆதரிக்கிறேன். இது என்ன ரெட்டை குதிரை சவாரியா என்றால் இதுவரை எந்த பதவியையும் கட்சியில் ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, எனக்கு என்னைவிட கடை பெரிது, கட்சியைவிட நாடு பெரிது என்பதால் நாளை மோடியை விட நல்ல தலைவர் நாட்டிற்கு கிடைத்தால் அவரையும் ஆதரிப்பேன். 

இன்றுவரை மட்டுமல்ல, அடுத்த 4 ஆண்டுகளுக்கு மோடிக்கான மாற்று யாருமில்லை. நாளை நல்ல ஒரு தலைவர் வந்துவிட்டால், அப்போதும் மோடி என்றா மாபெரும் தலைவரை, அவர் செய்த இமாலய சாதனையை நான் ஒரளவிற்கு புரிந்தவன் என்பதால், அவர்தான் இந்தியாவின் தேசத்தந்தை, என்று நம்புகிறேன். இன்றும் ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், அதற்கு மின் வந்த வாஜ்பாய் அவர்களை நேசிக்கிறேன். 

ராஜீவ் காந்தியை இன்னும் நன்றியோடு நேசிப்பதால் நான் மோடிக்கு எதிரானவன் என்று சொல்கிறவர்களை பற்றி எனக்கு  கவலையில்லை. ஆம், இப்போது மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதல்ல எ(ந)மது நோக்கம், திராவிஷத்தால் தரம் தாழ்ந்துபோன தமிழகத்தை, தலை நிமிர செய்ய முடியாவிட்டாலும், தரம் குறைந்த நிலையை மாற்ற என்னால் முடியாது, ஆனால் அண்னாமலையால் முடியும் என்று நம்புகிறேன். அவர் பின்னால் காலடி எடுத்து வைக்கிறேன்.

அதற்காக அவர் பின்னால் வராத பாஜகவினரை நான் குற்றம் சொல்ல மாட்டேன், அது அவரவர் புரிதல், நம்ம்பிக்கை, தேவை போன்றவற்றை பொறுத்தது. அதனால் அவர்களையும் மதிக்கிறேன். அதே சமயம் எனக்கு சென்ற தேர்தலில், அதிமுகவோடு பாஜக கூட்டு சேர்ந்ததை நான் அண்ணாமலையின் பார்வைக்கு மாறாக ஆதரித்தேன். ஆனால் என் நோக்கம் திமுகவை வீழ்த்தியாக வேண்டும்  என்ற பாதி வெற்றியை பெற்றாலும், மீதி வெற்றியை பெற முடியாமல் போனதிற்கு என் புரிதல் தவறு என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

அப்படியெனில் அண்ணாமலையை 100% ஏற்கிறீர்களா என்றால், என் அப்பா, அம்மா, மனைவி, மகள்கள் என்று அவர்களிடமே எனக்கு 100% உடன்பாடு இல்லை எனும்போது, எப்படி அண்ணாமலையிடம் அது வரும்?  அப்படி நான் இருப்பதாக சொன்னால், நான் அவரிடம் எதிர்பார்க்கும் எனது தேவைக்காக அதை சமரசம் செய்துகொள்கிறேன் என்பதோ அல்லது எனக்கு சுயமாக எந்த புரிதலும் இல்லை என்பதோ அர்த்தமாகிவிடும். 

மோடி ஆட்சி மீது எனக்கு பெரும் சேடிஸ்பேக்‌ஷன் இருக்கிறது என்றாலும், சில விஷயங்களில் முரண்பாடுகள் உண்டு, அதை நான் எப்போதும் சொல்ல தயங்கியதில்லை. அதே சமயம், அவர் சூழலில் நாம் இல்லாததால், அதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்பதையும் ஏற்கிறேன் என்பதால் எதிர்க்கவில்லை. அதுவே தொடரும்..

இது நான் சுத்தமானவன் என்று யாருக்கு நிரூபிக்க எழுதப்பட்ட பதிவு அல்ல, இப்படி ஒரு பார்வையும்.உண்டு என்று நண்பர்களுக்கு புரியவைக்க.

எனவே இங்கே யார் சரி ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை விட, சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது. எனவே நீஙகள் எந்த கட்சியாகவோ, அமைப்பாகவோ இருக்கலாம். அதில் தொடர்வதில் எந்த சிக்கலுமில்ல, நான் இன்றும் பாஜககாரன் தான், மோடி அரசின் ஆதரவாளந்தான். ஆனால் தமிழகற்றிற்கு தேவையான மேம்பட்ட இந்த நோக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இது சரியாக சென்றால், அடுத்து தொடங்கப்படும் கட்சியில் சேர்ந்து பயணிப்போம்… 

மேலும் தமிழகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணம் பொறாமை. என்னைவிட ஒரு அறிவாளியை பார்த்தால், பாராட்டுவதற்கு பதிலாக, பொறாமையே நம்மிட. மேலிடுகிறது. அதற்கு மெக்கல்லெந் கல்வியை போதித்த திராவிஷத்தின் 60 ஆண்டு ஆட்சி காரணம். என்னைவிட அண்ணாமலை 14 வருடம் சிறியவர். நான் பேண்ட் போட்டிருந்தபோது ட்ராயர் போட்டதை பார்த்தவன். ஆனால், அவரின் அறிவும், திறமையும் என்னைவிட அதிகம், நான் செய்ய நினைத்ததை அண்ணாமலை செய்வதால், இன்னும் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரை தலைவராக ஏற்க எனக்கு எந்த கூச்சமுமில்லை, மாறாக பெருமைபப்டுகிறேன். எனவே அசரின் இந்த இயத்தில் சேர்கிறேன் 

இப்போதுவரை இந்த அமைப்பில் சேர்ந்தவர்கள் 12,39,777. இது விரைவில் 22 லட்சத்தை, ஒரு லட்சியத்தை அடையும் என்று நம்புவதால், வரவேற்கிறேன். அதே சமயம், முதலில் உங்கள் குடும்பத்தி தேவையை பூர்த்தி செய்துவிட்டு, அதற்கு மேல் உள்ள நேரத்தை இந்த பொ(பு)து நலனுக்காக அர்ப்பணியுங்கள். பொது நலன் என்பது சுய நலனை அடைய ஒரு பொதுவான மாற்றுவழியே..

வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன்.. #Indea

— முரு. தெய்வசிகாமணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Entertainment News

Popular Categories