ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

Published:

1001321396 - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா நாளை புதன்கிழமை அமாவாசை திதியில் நடக்கிறது.

இக்கோயிலில் கடந்த ஏழாம் தேதி (7.3.2026)பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை தொடர்ந்து பெரிய மாரியம்மன் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்வு (தீமிதித்தல்) வ
நாளை புதன்கிழமை 18ஆம் தேதி மதியம் 1.35க்கு மேல் நடைபெறுகிறது .இந்த நிலையில் பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்பு சீட்டும், கைப்பட்டையும் வழங்கப்படுகிறது.

1001321496 - 2026

இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறுகையில், கொடியேறிய நாளிலிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு கோவிலில் காப்புச்சீட்டும் கை பட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் கோவிலில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம். பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் கோவிலில் பக்தர்கள் இடையே நெரிசல் குறையும்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பெரிய மாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசை அன்று பக்தர்கள் விரதமிருந்து, காப்புக்கட்டி, மஞ்சள் ஆடை அணிந்து, கோயிலுக்கு முன்புள்ள பூக்குழி குண்டத்தில் தீ மிதித்து அம்மன் அருள் பெறுவது வழக்கம். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மன் அருள் பெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து பெரியமாரியம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, இரவு வேளைகளில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெறும்.

புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயிலுக்கு எதிரே உள்ள தீ குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் .முன்னதாக அதிகாலை பெரிய மாரியம்மனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு பெரிய மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார்.மதியம் 1.35க்கு மணிக்கு ல் பூக்குழித் திருவிழா சிறப்பாகத் தொடங்கி நடைபெறும்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இந்நிகழ்வில், ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பூக்குழி இறங்குவர்.மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் பூக்குழி இறங்கி நேர்ச்சை செலுத்துவர்.ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தீச்சட்டி ஏந்தியும், உடம்பில் அலகு குத்தியும், வேப்பிலை ஆடை அணிந்து அங்கப்பிரதட்சணம் செய்தும் நகர்வலம் வருவர்.பூக்குழி நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்வர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img