Astrological symbols and horoscope chart

பஞ்சாங்கம் நவ.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஆன்மிகம் பஞ்சாங்கம்
astrology panchangam rasipalan
astrology panchangam rasipalan

||श्री:|| 

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

இன்றைய பஞ்சாங்கம் – நவ.02

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி ~ 16 ( 2.11.2026 ) திங்கள் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்
ருது ~ சரத் ருது.
மாதம்~ ஐப்பசி மாஸம் { துலா மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ மாலை 5.16 PM வரை அஷ்டமி பின்னர் நவமி.
நாள் ~ ஸோம வாஸரம் { திங்கள் கிழமை }
நட்சத்திரம் ~ காலை 9.09 AM வரை பூசம் பின்னர் ஆயில்யம்.
யோகம் ~ சுபம்.
கரணம் ~ கௌலவம் / தைதுளை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகுகாலம்~ காலை 7.30 ~ 9.00 AM.
எமகண்டம் ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON
நல்ல நேரம் ~ 9 to 10.30 AM & 5 to.5.30 PM
குளிகை ~ மதியம் 1.30 ~ மாலை 3.00 PM.
சூரியஉதயம் ~ 6.08 AM.
சந்திராஷ்டமம் ~ தனுர்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु॥

!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திங்கள் ஓரைகளின் காலம்

காலை

6-7. சந்திரன். சுபம்
7-8. சனி அசுபம்
8-9. குரு. சுபம்
9-10. .செவ்வா. அசுபம்
10-11. சூரியன். அசுபம்
11-12. சுக்கிரன். சுபம்

பிற்பகல்

12-1. புதன். சுபம்
1-2. சந்திரன். சுபம்
2-3. சனி அசுபம்

மாலை

3-4. குரு. சுபம்
4-5. செவ்வாய் அசுபம்
5-6. சூரியன் அசுபம்
6-7. சுக்கிரன். சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..

இன்றைய (2-11-2026) ராசி பலன்கள்

மேஷம்

நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் பிறக்கும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்படவும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அஸ்வினி : ஆர்வம் ஏற்படும்.
பரணி : நெருக்கடியான நாள்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரிஷபம்

பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் தன்னம்பிக்கை உருவாகும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : புரிதல் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


மிதுனம்

நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.


கடகம்

சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
பூசம் : சிக்கல்கள் குறையும்.
ஆயில்யம் : தாமதங்கள் விலகும்.


சிம்மம்

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : விவாதங்கள் மறையும்.
பூரம் : உழைப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். இலக்கியப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால வைப்பு நிதிகளில் ஆதாயம் அடைவீர்கள். தடைப்பட்ட வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

உத்திரம் : மதிப்பு ஏற்படும்.
அஸ்தம் : ஆதாகரமான நாள்.
சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.


துலாம்

தொழில் ரீதியான எண்ணங்கள் சாதகமாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

சித்திரை : எதிர்ப்புகள் விலகும்.
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : அனுபவம் ஏற்படும்.


விருச்சிகம்

மனதளவில் புதிய தெளிவுகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்புகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்

விசாகம் : தெளிவுகள் உண்டாகும்.
அனுஷம் : ஆதரவான நாள்.
கேட்டை : திருப்பங்கள் ஏற்படும்.


தனுசு

மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களை சார்ந்து இருக்காமல் எந்தவொரு பணியையும் செய்து முடிப்பது நல்லது. வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். முன் பின் தெரியாதவர்களிடம் கவனமாக இருக்கவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகனப் பயணங்களின் போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : இழுபறியான நாள்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.


மகரம்

வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் வழியில் புரிதல் மேம்படும். உயர்கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : திருப்தியான நாள்.
திருவோணம் : ஆர்வமின்மை குறையும்.
அவிட்டம் : சாதகமான நாள்.


கும்பம்

திடீர் வரவுகளால் சேமிப்புகள் உயரும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். பெரியோர்களின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். வியாபாரப் பயணங்களில் ஆதாயம் ஏற்படும். கடன் பிரசனைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் சாதகமாகும். மேல்நிலை கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்

அவிட்டம் : சேமிப்புகள் உயரும்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


மீனம்

வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்ப்புகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். வருமானம் தேவைக்கு இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வாகன பராமரிப்பில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : கவனம் வேண்டும்.


தினம் ஒரு திருக்குறள்

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை (1228)

– முன்னெல்லாம் இனியதாய்ப் போந்த ஆயன் குழல், இப்பொழுது அழல்போலச் சுடுவதாய மாலைக்குத் தூதுமாய், அது வந்து என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. நெருப்புப் போலச் சுடும் மாலைக் காலத்திற்கு இடையனின் புல்லாங்குழல் தூதாக வந்து பின் கொல்லும் படைக்கருவி போன்று வருத்தும் என்பது உரை.

மாயனாகிய இடையன் கண்ணபிரானின் புல்லாங்குழல் என்பதே அன்றைய சமூகத்தில் புகழ்பெற்றிருந்த அடையாளம். அதனையே இங்கே குறளில் கையாண்டார் வள்ளுவர்.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 பதிகம் – 61 பாடல் – 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

விளக்கவுரை

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

இன்றைய சிந்தனைக்கு…

காக்கைக்கு சோறு போட்டா, மற்ற காக்கைகளையும் கூப்பிடும்; ஒரு பிச்சைக்காரனுக்கு பிச்சையிட்டால், மற்ற பிச்சைகாரனை கூப்பிடுவானா?!

நேர்மையானவர்களுக்கு, கோபம் அதிகம் வரும், துரோகிகளுக்கு, நடிப்பு நல்லா வரும், ஏமாற்றுக்காரர்கள், பொய்யைகூட, உண்மை போல் பேசுவர்!!

தேவைப்படும் போது, அறிவையும், தேவையற்ற போது, மௌனத்தையும், சமநிலையில், பயன்படுத்தி, வாழ தெரிந்தால், எதையும் இங்கு, தேட வேண்டிய, அவசியம் இருக்காது!!!

1 thought on “பஞ்சாங்கம் நவ.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *