பஞ்சாங்கம் நவ.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

ஆன்மிகம் பஞ்சாங்கம்
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம்: நவ.01

ஶ்ரீராமஜெயம் ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:|| 
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री: श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி ~ 15 ( 1.11.2026 ) ஞாயிற்றுக் கிழமை
வருடம் ~ பராபவ வருஷம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயணம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ சரத் ருது.
மாதம்~ ஐப்பசி மாதம் { துலா மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி~ இரவு 7.22 PM வரை ஸப்தமி பின்னர் அஷ்டமி.
நாள் ~ பானு வாஸரம் ( ஞாயிற்றுக்கிழமை )
நட்சத்திரம் ~ காலை 10.37 AM வரை புனர்பூசம் பின்னர் பூசம்.
யோகம் ~ ஸாத்யம்.
கரணம்~ பத்திரை / பவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00 PM.
எமகண்டம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30 PM.
நல்லநேரம் ~ 9.00 to 10.30 AM & 3.00 to 4.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.08 AM.
சந்திராஷ்டமம் ~ தனுர்.
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சப்தமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (01-11-2026) ராசி பலன்கள்

மேஷம்

மனதளவில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பற்றற்ற தன்மை உண்டாகும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். நுட்பமான விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அஸ்வினி : குழப்பங்கள் மறையும்.
பரணி : தடைகள் நீங்கும்.
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரிஷபம்

மனதில் தன்னம்பிக்கை மேம்படும். சிறுதொழில் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : புரிதல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வெற்றிகள் கிடைக்கும்.


மிதுனம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உருவாகும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும்.


கடகம்

பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இனம் புரியாத சில கவலைகள் தோன்றி மறையும். கணவன் மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.


சிம்மம்

எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வெளியூர் செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : பயணங்கள் கைகூடும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


கன்னி

கணவன்-மனைவிக்குள் புரிதல் மேம்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : புரிதல் மேம்படும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : வாய்ப்புகள் சாதகமாகும்.


துலாம்

வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சில முடிவுகளில் அனுபவம் வெளிப்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : அனுபவம் வெளிப்படும்.
விசாகம் : நம்பிக்கை மேம்படும்.


விருச்சிகம்

ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். காப்பீட்டு வகைகளில் ஆதாயம் ஏற்படும். சபை தலைவராக இருப்பவர் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்ணிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : கனிவு வேண்டும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.


தனுசு

நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன் இருப்பவர்கள் இடத்தில் அளவுடன் இருக்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் அமையும். எதிலும் பெருமையுடன் செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மூலம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூராடம் : மந்தமான நாள்.
உத்திராடம் : விவேகம் வேண்டும்.


மகரம்

எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு உயரும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : உற்சாகமான நாள்.
திருவோணம் : தாமதங்கள் விலகும்.
அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும்.


கும்பம்

தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். நீண்ட நாளாக எண்ணிய எண்ணம் நிறைவேறும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மீனம்

உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து சேமிப்பை பயன்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்

பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.


தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.


தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்


தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

நன்னம்பிக்கை மொழி!

  • எல்லாமே போய்விட்டதென கவலைப் படாதே, உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத, உள்ளம் உண்டு, மறவாதே!
  • நீ கவலைப் படுவதாலோ, வேதனை படுவதாலோ, உன் வாழ்கையில், எந்த மாற்றமும் வந்துவிட போவதில்லை!!
  • பணக்காரனை பார்த்து, பொறாமைப் படுவதைவிட, படுத்ததும் தூங்குபவனை பார்த்து, பொறாமை படு, ஏன்னா அது தான் சந்தோசமான வாழ்க்கை!!!
  • வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உன்னை அழிக்க வரவில்லை, உன் மன வலிமை மற்றும் திறமையை வெளி படுத்த, ஒரு அரிய வாய்ப்பு, அவ்வளவே!
  • ஒரு காலத்தில், நேர்மை தவறாமல், வாழ்ந்தவர்களைதான் பார்த்தோம், ஆனால் இப்போதெல்லாம், நேரத்திற்கு தகுந்தாற்போல் வாழ்பவர்களே அதிகம்!!
  • ஏணிக்கு சாய்ந்து கொள்ள, சுவர் தேவை, தோணிக்கு பாய்ந்து செல்ல, கடல் தேவை , வாழ்க்கையில் நீ ஜெயிக்க, உனக்கு சில, நல்ல உறவுகளும், நண்பர்களும் தேவை!!!

5 thoughts on “பஞ்சாங்கம் நவ.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!”

  1. தினசரி பஞ்சாங்கம் மற்றும் தினப் பலன்கள் உபயோகமாக உள்ளது. நன்றி.

Leave a Reply