February 22, 2026, 3:43 AM
25.6 C
Chennai

அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்

“அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் ரசத்திலே போடு,
கொஞ்ச நேரம் ஊறட்டும்.”-பெரியவா. (பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக,
நாலு
ஓடுகளாவது இருந்தனவே!– பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மெலட்டூர் ராமசாமி அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் பக்தர்.

ஒரு தடவை தரிசனத்துக்கு வந்தபோது நன்றாகப் பழுத்த உயர்ந்த ரக விளாம்பழங்கள்
வாங்கி வந்து பெரியவா முன் வைத்து, “பெரியவா குக்ஷியில் (வயிற்றில்) இவை
சேரணும்” என்று பிரார்த்தித்தார்.பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

விளாம்பழக் கூடை உட்புறம் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரை மணி கழித்துப் பார்த்தால், கூடை காலி!
ஒரே ஒரு பழம் கூட இல்லை. பூஜைக் கட்டில் பணி செய்யும் இருவர், சுவையான
உட்பகுதியைத் தின்றுவிட்டு,விளாம்பழ ஓடுகள்
நான்கை ஜன்னலில் வைத்திருந்தார்கள்.

பெரியவா பிக்ஷைக்கு வந்தார்கள். “விளாம்பழத்தை என்ன செய்தே?” எல்லோருக்கும்
தேள் கொட்டின மாதிரி சுரீரென்றது. பெரியவா இப்படியெல்லாம் குறிப்பாகக் கேட்டு
வாங்கிச் சாப்பிடுகிற வழக்கமில்லையே?……

இறுக்கமான மௌனம்.பெரியவாளுக்குப் புரிந்து விட்டது.
கண்களை அங்குமிங்கும் சுழல விட்டார்கள்-பெரியவா.

“அந்த நாலு ஓட்டையும் (விளாம்பழ) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்.”

அந்த ரசத்தை உணவில் சேர்த்துக்கொண்டு சுவைத்தார்கள்.

பெரியவாளுக்கு விளாம்பழத்தின் மீது தனி ஆசை ஏதும் இல்லை. சுமார் நூறு
விளாம்பழங்களைக் கொண்டு வந்து
சமர்ப்பித்த பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமே? என்ற கரிசனம்.

பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே! விளாம்பழ
ஓட்டுச் சுவை
சேர்ந்த ரசத்தைச் சாப்பிட்டதால் பக்தரின் பிரார்த்தனைப்படி,
‘குக்ஷியில் கொஞ்சம்’ சேர்ந்துவிட்டது.

பக்தர்களிடம் அத்தனை பரிவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories