“சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு”—பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி.

Published:

“சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு”—பெரியவாளிடம் சிபாரிசு கேட்ட பாட்டி.

(நானும் எந்த ஆதரவும் அற்றவன்தான்.! ஏதோ இந்த மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம இரண்டு பேரும் அந்த பென்ஷனுக்கு மனுப் போடலாமா.?” என்று குறும்பாக கேட்டு—பாட்டிக்கு அறிவுறுத்திய பெரியவா)

சொன்னவர்; இராசு,சென்னை-61.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஒரு மாலைப்பொழுது, சுமார் ஆறு மணி இருக்கும். பெரியவர்கள் காஞ்சி மடத்தின் ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருக்க, அவரைச் சுற்றி நாலைந்து பேர் இருக்கிறார்கள். அங்கிருந்தவர்களில் அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒரு பாட்டி, தன் தலையை முண்டனம் செய்து வெள்ளாடை அணிந்து, அப்புடவையையே தன் தலையில் சுற்றி உடுத்தியிருந்தார்.நானும் ஒருபார்வையாளன், அங்கே.
அச்சமயத்தில் தமிழகத்தில்,அப்போதைய ஆளும் கட்சி அறிவித்திருந்த முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகமாகி இருந்தது.

தரிசிக்க வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் பரமாசார்யார்.அவரிடம் ஏதோ சொல்ல அந்தப் பாட்டி துடிப்பது தெரிந்தது.அவர் நீண்ட நாட்களாகவே மடத்தில் இருந்து வருபவர்.

“ஸ்வாமிகளுக்கு ஒரு விண்ணப்பம்..” பாட்டி ஆரம்பித்தாள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.08 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“உனக்குக் கூட பிரச்சினையா.?” ஸ்வாமிகள் கேட்க

சற்று ஊக்கமடைந்த அந்த பாட்டி, “ஒண்ணுமில்லே.! சர்க்கார்லே வயசானவாளுக்கு 20ரூ பெஞ்சனா தராளாம். ஆதரவு இல்லாதவர்களுக்கு..ம்”

“ஆமா…அதுக்கு என்ன இப்போ.?”

“வந்து…எனக்கு மடத்து மூலம் சிபாரிசு பண்ணா.. அந்தப் பணம் எனக்கும் கெடைக்குமோல்யோ..”

“கிடைக்கும்தான், சரி, உனக்கு இங்கே என்ன குறை.?.. வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்கிறது. புடவையும் தரா.. தங்கிக்க இடமிருக்கு…அப்புறம் எதுக்கு பணம்,உனக்கு.?”

“இல்லை…சும்மா கிடைக்கிறதே அப்படின்னுதான்..” மூதாட்டி இழுத்தாள் ஈனஸ்வரத்தில்.

“இதோ பார்.! நானும் எந்த ஆதரவும் அற்றவன்தான்.! ஏதோ இந்த மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம இரண்டு பேரும் அந்த பென்ஷனுக்கு மனுப் போடலாமா.?” என்று குறும்பாக கேட்டுச் சிரித்தார்.

இதைக் கேட்டதும் பாட்டி வெட்கத்துடன் தன் தலையை கவிழ்த்துக் கொண்டார்.

அரசு உதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மகாபாவம் என்பது பெரியவர்கள் கருத்து. அதைத்தான், அந்தப் பாட்டிக்குப் புரியும்படியாச் சொல்லி மற்றவர்களுக்கும் விளங்க வைத்து விட்டார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.10 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பரமாசாரியார் மேலும் தொடர்ந்தார்.

“நமக்கானும் உயிர்வாழ உணவு கெடைச்சுடறது. மழை, வெயிலுக்கு ஒதுங்க இடமும்,மானம் மறைக்க துணியும் இருக்கு. இவைகளுக்கெல்லாம் திண்டாடும் அசல் ஏழை மக்களுக்குத் தான் கவர்ன்மெண்டிலே பென்ஷன் திட்டம் கொண்டு வந்திருக்கா…. உனக்கு நான் வாங்கிக் கொடுத்தா,ஒரு உண்மையான, தகுதியான நிராதரவான,வயதானஆணுக்கோ, பெண்ணுக்கோஅந்த வாய்ப்பு போயிடுமோ,இல்லையோ.?”

ஸ்வாமிகளின் உயர்ந்த உள்ளத்தை அந்தப் பாட்டி,நான், மற்றவர்கள் எல்லோரும் பூரணமாகத் தெரிந்து கொண்டோம்.

Related articles

Recent articles

spot_img