சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் 21 வயது பெண் ஒருவர் இந்த மாத தொடக்கத்தில் சாமியாருக்கு எதிராக பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
இதை தொடர்ந்து சுவாமி பலஹரி மகாராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 15 காவலில் வைக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைக்காக அல்வாரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மகாராஜ் அனுப்பப்பட்டார்.
3 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் அவருக்கு சோதனை நடத்துகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சாமியார் ஆகஸ்ட் 7 ந்தேதி அழ்வாரில் உள்ள மதுசூதனன் ஆசிரமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
பாதிக்கப் பட்ட பெண் ஜெய்ப்பூரில் சட்டம் படித்து வருகிறார். இவர் இந்த சாமியாரின் பக்தையாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து உள்ளார்.
இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடந்த செப்டம்பர்
11-ந்தேதி புகார் அளிக்கப்ப்ட்டது.
சாமியாரின் பரிந்துரையின் பேரில் புதுடெல்லியில் உள்ள ஒரு மூத்த வழக்கறிஞரிடம் ரூ. 3 ஆயிரம் ஊக்கத் தொகையில் ஜூனியராக சேர்ந்து உள்ளார். அந்தப் பணத்தையும் ஆசிரமத்திற்கு நன்கொடையாக அவரது பெற்றோர்கள் வழங்கி உள்ளனர்.
பாதிக்கப் பட்ட பெண் தனது பெற்றோரின் ஆலோசனையின் பேரில் கடந்த மாதம் ரக்ஷா பந்தன் சந்திர கிரகணத்தன்று அந்த ஆசிரமத்தில் தங்கி உள்ளார். இரவு அந்த பெண்ணை அழைத்த சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் இதையாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி உள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய பெண் பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறி போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.



