உத்தர பிரதேசம் பார்சனாவில் ஆசிரமம் நடத்தி வருபவர் சாது கோவிந்த் தாஸ். இவர் ஒரு ஊன முற்ற பெண் சீடரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்து உள்ளது.
இது தொடர்பாக மேற்கு வங்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு மேற்கு வங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாதிக்கபட்ட பெண் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்.
கடந்த சில மாதங்களாக சாமியாரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தாராம். சாமியாரால் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு அந்த பெண் கர்ப்பமானாராம்.
இதைத் தொடர்ந்து அந்தப் பெண் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார். மேற்கு வங்காளத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அந்தப் பெண், சாமியார் மீது புகார் அளித்துள்ளார்.
புகாரைத் தொடர்ந்து மேற்கு வங்காள போலீசார் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஆசிரமத்திற்கு சென்று சாமியாரை கைது செய்தனர்.
சாமியார் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். எனக்கு எதுவும் தெரியாது. ஒரு நாள் ஒரு தம்பதியினர் இந்தப் பெண்ணை என்னை பார்த்து கொள்ளச் சொல்லி இங்கு விட்டுச் சென்றனர் எனக் கூறி உள்ளார்.



