அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையாத்தூர் ராஜகோபாலசுவாமி கோயிலில்
உள்ள வைராக்ய விஸ்வருப ஆஞ்சநேயரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அறந்தாங்கி அருகே இடையாத்தூர் கிராமத்தில் பழமையான பல்லவர் கால தொடர்புடைய
ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது இக்கோயிலில் பாமா,ருக்மணி,கருடாழ்வார்,நாகர்
ஆகாய ஆஞ்சநேயர் வைராக்ய விஸ்வருப ஆஞ்நேயர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.
சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு அதனை
தொடர்ந்து ஹோமங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீர் அபிஷேகம் நடந்தது.இதில்
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
அபிஷேக அர்ச்சனைகளை ராஜகோபாலன் செய்தார்.
இக்கோயில் வளாகத்தில் முற்காலத்தில் சைவமும் வைணவமும் ஒற்றுமையாக இருந்தது
என்பதற்கு எடுத்துகாட்டாக பெருமாள் கோயில் வளாத்தில் வில்வமரம் இருப்பது
மேலும் சிறப்பு.
; ஏற்பாடுகளை இடையாத்தூர் கிராமத்தார்கள் செய்தனர் இந்த வழிபாட்டின் போது
கோயிலின் முகப்பில் உள்ள
22 அடி உயரமுள்ள வைராக்ய விஸ்வருப ஆஞ்சநேயரை இடைத்தூர் பிராமணவயல்
கொக்குமூட்டை காடை இடையாத்தூர் சிலாத்தனி சோழனி நீர்விளங்குளம் நாகுடி ஆகிய
பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




