பஞ்சாங்கம் அக்.31 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ஆன்மிகம் பஞ்சாங்கம்
astrology panchangam rasipalan dhinasari 3

இன்றைய பஞ்சாங்கம் – அக்.31

ஸ்ரீராமஜயம் – ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்

||श्री:|| !!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

ஐப்பசி ~ 14 ( 31.10.2026 ) சனிக்கிழமை
வருடம் ~ பராபவ{ பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ சரத் ருது.
மாதம் ~ ஐப்பசி மாதம் { துலா மாஸம் }
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ இரவு 9.36 PM வரை ஷஷ்டி பின்னர் ஸப்தமி.
நாள் ~ { ஸ்திர வாஸரம் } சனிக்கிழமை.
நக்ஷத்திரம் ~ பகல் 12.12 PM வரை திருவாதிரை பின்னர் புனர்பூசம்.
யோகம் ~ ஸித்தம்.
கரணம்~ கரஜை / வணிஜை.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம் ~ காலை 9.00 ~ 10.30 AM.
எமகண்டம் ~ மதியம் 1.30 ~ 3.00 PM.
குளிகை ~ காலை 6.00 ~ 7.30 AM.
நல்ல நேரம் ~ 7.30 to 8.30 AM & 4.30 to 5.30 PM.
சூரிய உதயம் ~ காலை 6.08 AM.
சந்திராஷ்டமம் ~ வ்ருச்சிகம்.
சூலம் ~ கிழக்கு.
பரிகாரம் ~ தயிர்.
ஸ்ராத்த திதி ~ ஷஷ்டி.
இன்று ~

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु !!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

ஓரை என்றால் என்ன?
ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.

சனிக்கிழமை ஹோரை
காலை
6-7 : சனி – அசுபம் ❌
7-8 : குரு – சுபம் ✔
8-9: செவ்வாய் – அசுபம் ❌
9-10: சூரியன் – அசுபம் ❌
10-11 : சுக்கிரன் – சுபம் ✔
11-12 : புதன் – சுபம் ✔

பிற்பகல்
12-1 : சந்திரன் – சுபம் ✔
1-2 : சனி – அசுபம் ❌
2-3 : குரு – சுபம் ✔

மாலை
3-4: செவ்வாய் – அசுபம் ❌
4-5 : சூரியன் – அசுபம் ❌
5-6 : சுக்கிரன் – சுபம் ✔
6-7 : புதன் – சுபம் ✔

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்..


இன்றைய (31-10-2026) ராசி பலன்கள்


மேஷம்

மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : முயற்சிகள் கைகூடும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.


ரிஷபம்

நண்பர்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : மனக்கசப்புகள் விலகும்.
ரோகிணி : சிந்தனைகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.


மிதுனம்

இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பணிகளில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத திடீர் வாய்ப்புகள் மூலம் புதுமை பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.
புனர்பூசம் : புதுமையான நாள்.


கடகம்

தொழில் செய்பவர்களுக்கு மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டார நட்புகளால் புதிய அனுபவம் ஏற்படும். வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வாகன வகையில் ஆதாயம் ஏற்படும். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : ஆதாயகரமான நாள்.
ஆயில்யம் : பயணங்கள் உண்டாகும்.


சிம்மம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுப காரியங்கள் பலிதமாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சாம்பல் நிறம்

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : பிரச்சனைகள் குறையும்.
உத்திரம் : திறமை வெளிப்படும்.


கன்னி

வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத் திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


துலாம்

வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும். துணைவர் வழி உடன் பிறப்புகளால் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : தடைகள் விலகும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.


விருச்சிகம்

பேச்சுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். உயர்கல்வியில் எதிர்பாராத சில அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார முடிவுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கேட்டை : அனுபவம் உண்டாகும்.


தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வருமான வாய்ப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : இலக்குகள் பிறக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் மேம்படும்.


மகரம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில விஷயங்கள் குறையும். பழக்க வழக்கங்கள் மூலம் மேன்மை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.


கும்பம்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதாயகரமான நாள்.
சதயம் : ஒத்துழைப்பான நாள்.
பூரட்டாதி : கனவுகள் பிறக்கும்.


மீனம்

உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சமூக பணிகளில் மதிப்பு உயரும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்தியோகப் பணிகளில் அலைச்சலும், புரிதலும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : தெளிவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல் – குறள் எண்: 101

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 10

நாணொடுகூடிய சாயினரேனு நகுவ ரவரிருபோதும்
ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைக ளவைகொளவேண்டா
ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
பூணெடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ விவர்பொற்பே.

விளக்கவுரை :நாணத்தொடு கூடிய செயல்களை இழந்து ஆடையின்றித் திரிதலால் எல்லோராலும் பரிகசிக்கத் தக்கவராகிய சமணரும், இருபொழுதும் உண்டு அஞ்சத்தக்க நகையோடு திரியும் புத்தரும், ஆகிய புறச்சமயத்தவர் உரைகளை மெய்யெனக் கொள்ளவேண்டா. அன்பர்கள் வழிபடும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் மாதொருபாகராய் அணிகலன்கள் பூண்ட திருமார்பினராய் விளங்கும் இறைவர் இப்பூங்கொடியாளை வாடச்செய்து பழிப்புரை கொள்ளல் இவரது அழகுக்கு ஏற்ற செயலா?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

ஆலினிலைப் பாலகனாய் அன்று உலகமுண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளையவானருத்துக்கு அளித்தவனே!
காலின்மணி கரையலைக்கும் கணபுரத்து என் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ
(குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
– சக்கரவர்த்தித் திருமகனைக் கௌசலையார் தாலாட்டும் பாசுரம் – 725)

இன்றைய சிந்தனை!

முதல் படி

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.

  • Goethe.

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

  • Martin Luther King Jr.

உழைப்பு = வெற்றி

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

  1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
  2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
  • வில்லியம் ஷேக்ஸ்பியர்

தினசரி.காம்


இன்றைய சிந்தனைக்கு…

பொறுப்பு என்பது, பாரம் அல்ல, வாய்ப்பு, ஒருவரின், திறமையை நிரூபிப்பதற்கான, சந்தர்ப்பம்!
முடியாது என்பதை பிறகு சிந்தி, எப்படி முடிப்பது என்பதை, எப்பொழுதும் சிந்தி, வெற்றி நிச்சயம்!!
ஒருவருக்கு கிடைத்ததைப் பற்றி, பேசும் இந்த சமூகம், அதனை அடைய, அவர் இழந்ததைப் பற்றி, பேசுவதில்லை!!!

உன் வார்த்தைகளின் நாகரீகமே, பிறரிடம், உனக்கான நன்மதிப்பை, பெற்று கொடுக்கும்!
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், உன்னுடைய கால்களை பயன்படுத்து, பிறரின் முதுகை அல்ல!!
உன்னை எப்படி நினைக்கிறாயோ, மத்தவங்களையும் அப்படியே நினைக்க கத்துக்கோ; உன் எண்ணம் உறுதியா இருந்தா, நீ எண்ணியபடி உயர்ந்திடுவாய்!!!

எந்த மனிதரிடமும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், உறவு கொள்வதும், பிரதி பலன் எதிர் பாராமல் அன்பு செய்வதும், அறம்! அனைவரும் அவரவர் பார்வையில், தங்களை சரியானவர்கள் என்று நினைப்பதை புரிந்து கொண்டு, எதையும் கடந்து போக கற்றுக்கொள்!! பட்டம், பதவி, பகட்டு வாழ்க்கையுடன், மனதின் மகிழ்ச்சியை, ஒன்றாக இணைத்து பார்ப்பதை நிறுத்தும் போது, உண்மையில் மனம், பக்குவம் அடைகிறது!!!

Leave a Reply