spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்த்ராஹி த்ராஹி துர்கே! காப்பாற்று துர்கையே!

த்ராஹி த்ராஹி துர்கே! காப்பாற்று துர்கையே!

- Advertisement -
kanaka-durga
kanaka durga

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா |
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“தேவீ ப்ரபன்னார்த்தி ஹரே ப்ரஸீத 
ப்ரஸீத மாதர்ஜகதோSகிலஸ்ய
ப்ரஸீத விஸ்வேஸ்வரீ பாஹி விஸ்வம்
த்வமீஸ்வரீ தேவீ சராசரஸ்ய

சரணடைந்த பக்தர்களின் துயரைப் போக்கும் தேவி! மகிழ்ச்சி கொள்! அகில ஜகத்துக்கு அன்னையே! மகிழ்ச்சிகொள்! விஸ்வேஸ்வரீ! மகிழ்ச்சி கொள்! விஸ்வமனைத்தையும் காத்தருள்! தேவி! அசையும் அசையா விஸ்வம் அனைத்துக்கும் ஈஸ்வரி நீயே!

அம்மா! மக்கள் செய்த பாவங்களின் பலனாக உலகில் நிலவும் நோய்களின் கோரத்தாண்டவத்தையும் மரண ஓலங்களையும் நீக்குவாயாக! புறக்கணிக்காதே தாயே!

நோய் அச்சத்தையும் மரண அச்சத்தையும் போக்கும்படி  வேண்டுகிறோம்! இது இயற்கைச் சீற்றமா அல்லது எதிரிக் கூட்டங்கள் விட்ட ஜீவ ஆயுதப் பிரயோகமா? கண்டறிந்து அழிக்கும் சக்தியைக் கொடு!

சர்வபாதா ப்ரசமனம் த்ரைலோக்யஸ்யாஸ்கிலேஸ்வரீ
ஏவமேவ த்வயாகர்யாமஸ்மத்வைரி விநாசனம்

ஈஸ்வரி! மூன்று உலகங்களுக்கும் ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் விலக்கினாய். அதேபோல் எம் பகைவர்களை அழிப்பது கூட உன் செயலே!

பிரபஞ்சமனைத்தும் நன்றாக இருங்க வேண்டும் என்று விரும்பும் ஹிந்து தர்மத்தின் மீதும் பாரத தேசத்தின் மீதும் நடக்கும் தாக்குதல்களை நிர்மூலம் செய்து விடு தாயே! 

நோயின் தாக்கத்தால் மக்கள் துயருற்று அச்சமுறும் இந்த கொடிய காலத்தில் கூட மருந்துகளை பதுக்கி வைத்து கொடூரமாக அதிக விலைக்கு விற்று மரணங்களுக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகும் மருந்து வியாபாரிகளிடமிருந்தும்… வியாபார மருத்துவர்களிடமிருந்தும்… 

இந்தத் துன்ப காலத்தைக் கூட சுய லாபத்திற்காக பயன்படுத்தி பகை நாடுகளோடு கூட்டு சேர்ந்து தம் அரசியல் சுயநலத்தை திருப்திப்படுத்திக் கொள்ளும் பதவிப் பிசாசுகளின் வஞ்சனை கூட்டணிச் செயல்களிடமிருந்து…

மக்களிடம் அச்சத்தை வளர்த்து தேச கௌரவ மரியாதைகளை சிதைப்பதற்குச் சிறிதும்  தயங்காமல் பொய்ப் பிரச்சாரங்களை சமைத்து பரிமாறுவதில் திறமைமிகு ஊடக மஹிசாசுரர்களிடமிருந்து….

அவர்களின் அரசியல் ஆசை வெறி பிடித்த தாகத்திலிருந்து… 

பாரத தேசத்தில் ஒரு மாநிலத்தில் வெற்றி கிட்டிய உடனே உன்னை வணங்கும் மதத்தைச் சேர்ந்தவர்களை கொடுமையாகத் துன்புறுத்தி, உன் அம்சமான பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு, கோயில்களைத் தாக்கி, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும்படி செய்யும் அரசாங்கத் தலைவர்களின் கோரப்பிடியிலிருந்து…

அவற்றை எதிர்க்க இயலாத ஹிந்துக்களின் உதவியற்ற நிலையில் இருந்து…

இத்தனை கொடூரங்கள் நடந்தாலும் வாயைத் திறக்காத மனித உரிமை சங்கங்களிடமிருந்து…

பெண்களின் மீது தாக்குதல் நடந்தாலும் சத்தம் காட்டாமல் சும்மா இருக்கும் பெண்ணீய ஹிந்து எதிர்ப்பாளர்களிடமிருந்து…

கேளிக்கையே வாழ்க்கையாக இஷ்டம் வந்தாற்போல் திரியும் அறிவற்ற இளைஞர் கூட்டத்திடம் இருந்து…

மதுபான கடைகளின் முன் வரிசை கட்டி நிற்கும் இந்திய யுவதிகளின் மதம்பிடித்த மயக்கத்திலிருந்து… 

ஏமாற்றி, மதம் மாற்றி, கெக்கெலி கொட்டும் மதவெறியர்களின் அட்டூழியங்களிடமிருந்து…

பழிவாங்குவதே பரிபாலனையாக நடந்தேறும் குடியரசு நாடகப் பொய்மையிலிருந்து…

பாரத தேசத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறோம்!

ப்ரணதார்திசம்ஹாரிணீ! 

நம்பிக்கை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபயம் அளிப்பாயாக!

இது ஒரு விந்தையான யுத்தம்! கண்ணிற்கு புலப்படாத எதிரி என்பது தெளிவாகப் புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத மாயை! 

பாரத தேசத்தை பலவீனமடையச்  செய்வதற்காக மக்கள் தொகையை நோய் என்ற ஆயுதத்தால் சம்ஹாரம் செய்யும் கண்ணுக்குத் தென்படாத வைரஸ்களின் அமானுஷ துன்மார்க்கத்தை வேரோடு அழிக்க கூடியவள் நீயே அம்மா!

அபயக் கரம் மட்டுமே அல்ல, பீஷண ப்ரசண்ட சூல தனுர் கட்க சுதர்சனம் போன்ற திவ்ய ஆயுத தாரிணியாக விளங்குபவள் நீ! பிரசன்ன கிருபா மூர்த்தி நீ! ஆற்றல் மிக தீவிர ஜுவாலையும் நீ!

கடவுளைத் தவிர யாராலும் காப்பாற்ற இயலாது என்ற நிலையில் நம் பாரத தேசம் இன்று நிற்கிறது என்பது அனைவரும் அறிந்ததே! சகல தேவதைகளின் ஒன்றிணைந்த சக்தியாகிய நீயே கருணையோடு அருளவேண்டும்!

நன்மை நடக்க விடாத சுயநல அரக்கர்களின் சதித்திட்டங்களை பொடிப்பொடியாக்கி உன் மகிமையை வெளிப்படுத்து தாயே! சரணாகத தீனார்த  பரித்ராண பராயணி நீயே என்றும், சர்வ மங்கள ஸ்வரூபிணி நீயே என்றும் அறிந்து வழிபட்டு தேவர்களும் ரிஷிகளும் லோக க்ஷேமத்தை சாதித்தார்கள். தெளிவாகத் தென்பட்டாலும் நீதியற்ற, நேர்மையற்ற ஹிப்சைகளை எதிர்க்க இயலாமல் உள்ளோம். துயரத்தில் தத்தளிப்பதைத்  தவிர அவற்றை தடுத்து நிறுத்தும் சாமர்த்தியம் எமக்கில்லை.  எங்கள் குற்றங்களை மன்னித்து விடு! 

இரட்சிக்கும் தயை மிகுந்த உன் அருள்மீதே எம் நம்பிக்கை!

சர்வஸ்வரூபே சர்வேஸே சர்வசக்தி சமன்விதே
பயேப்ய: த்ராஹி நோ தேவீ  துர்கே தேவீ நமோஸ்துதே
தேவீ ப்ரஸீத பரிபாலயனோSரிபீதே:

நித்யம் யதாS ஸுரவதாததுநைவ ஸத்ய:
பாபானி சர்வஜகதாம் ப்ரசமம் நயாஸு
உத்பாத பாக ஜனிதாம்ஸ்ச மஹோபஸர்கான் 

தேவீ! எங்களிடம் ப்ரசன்னமானவளாக இரு!

அசுரர்களிடமிருந்து தேவர்களை காத்தருளினாற்போல தினமும் பகைவரின் பயத்தால் தவிக்கும் எங்களைக் காத்தருள்! 

சகல ஜகத்திலும் பாவங்களை சம்பூரணமாக ஒழித்து இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் மகா உபத்திரவங்களை  விரைவில் விலக்குவாயாக!!

(ருஷிபீடம், ஜூன் 2021 தலையங்கம்) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe