subramaniam swamy
subramaniam swamy

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெள்ளிக்கிழமை இன்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக தனது டிவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள திமுக., திக., ரவுடிகள், பிராமண சமூகத்தினர் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர் என்றும், அதனைக் குறித்து தலைமைச் செயலரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி எழுதியுள்ள அந்தக் கடிதத்தில்… மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மாநில தலைமைச் செயலாளரை வரவழைத்து, மாநிலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பிராமண சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அறிக்கை கோருமாறு கேட்டுக் கொண்டார் .

“மு.க. ஸ்டாலினின் திமுக., தலைமையில் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தவறான மறைமுக ஆதரவில் இருந்து எழும் தமிழ்நாட்டின் தற்போதைய பதற்றம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் .

ஜெர்மனியில் அடோல்ஃப் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசாங்கத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நிகழ்ந்ததைப் போலவே, மாநிலத்தில் பிராமணர்களைக் குறிவைப்பதும், இந்த மகிழ்ச்சியற்ற ஒருங்கிணைப்பற்ற ஒரு சமூகத்தை வாய்மொழியாக அச்சுறுத்துவதும் இன்று கண்கூடாக உள்ளது . தமிழகத்தில் வாழும் ஆசிரியர்கள், பூஜாரிகள் ஆகியோர் குறிப்பாக தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர், காரணம், அவர்கள் பிராமணர்கள்.

தமிழகத்தில், பிராமண சமூகம் மற்றும் அவர்களின் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் திமுக., ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன… என்று சுப்பிரமணியன் சுவாமி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

மேலும், திராவிடர் கழகத்தின் முரட்டுத்தனமான ரவுடிகள், ஆளும் திமுக மற்றும் விடுதலைப் புலிகளின் நபர்கள், பிராமண சமூகம் மற்றும் அவர்களின் நிறுவனங்களுக்கு எதிரான இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். புதிய மாநில அரசு உருவான பின்னர் இந்த நிலைமை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், இந்தக் கட்டத்தில், ஆட்சியைக் கலைப்பதற்கான 356 வது பிரிவு தற்போது பொருந்தக்கூடியதுதான் என்றும் தான் பரிந்துரைப்பதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இருப்பினும், தமிழக அரசின் தலைமைச் செயலாளரை வரவழைத்து , பிராமண சமூகத்தின் இந்த பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணமான நிலையையும், அனைத்து குறைகளையும் கோரி, ஓர் அறிக்கையைத் தயாரித்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அதன்பிறகு, உரிய நடவடிக்கை என்று நீங்கள் கருதுவதை எடுக்கலாம், ” என்றும் சுப்பிரமணியன் சுவாமி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கடிதம் …

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
subramanian swamy letter to governor1
subramanian swamy letter to governor1
subramanian swamy letter to governor 2
subramanian swamy letter to governor 2

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending