மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை பிப்.12ல் திறப்பு!

Published:

sabarimalai nadai open - 2026
#image_title

மாசி மாத பூஜைக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை பிப் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். கோவில் திருநடையை மேல் சாந்தி திறந்து வைத்ததும் ஆழியில் நெய் தீபம் ஏற்றி கோவிலில் தீபமேற்றி பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவார்.

அன்று எந்த சிறப்பு பூஜையும் இல்லை. பிப் 13-ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து சிறப்பு பூஜைகள் தொடங்கி, மதியம் 1 மணிக்கு கோவில் நடை மூடப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

மாலை 6 மணி முதல் 7:30 மணி வரை படி பூஜை நடைபெறும்.
(இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்). அபிஷேகம் காலை நேரத்தில் மட்டும் காலை 5:15 முதல் 7 மணி வரை, பின்னர் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை நடைபெறும். (இது 13 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும்).

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

இரவு தினமும் 9:50 மணிக்கு ஹரிவராசனம் கீர்த்தனை பாடி,
10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் பிப் 12 முதல் 17 தேதி வரை தினமும் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்க
ஆன்லைன் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.முன் பதிவு செய்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img