சினிமாவால் நான் கற்று கொண்டது என்ன தெரியுமா? தமன்னா சொல்லும் ரகசியம்

சினி நியூஸ் சினிமா

tamannah 3 - 2026பள்ளி பருவத்தின்போதே நான் சினிமாவுக்கு வந்துவிட்டதால் எனது சினிமா வாழ்க்கையில் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன் என்று நடிகை தமன்னா வட இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் இந்த பேட்டியில் கூறியதாவது:

“சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக்கொடுக்கிறது. நான் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் இருந்தது. ஆனால் சினிமாவில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. நான் தெலுங்கில் முதலாவது நடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தில் கல்லூரி மாணவியாகத்தான் வந்தேன். வாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந்தது மிகவும் மகிழ்ச்சி.

பாடங்களை தீவிரமாக படிப்பது, தேர்வுக்கு தயாராவது, ரிசல்ட்டுக்காக காத்து இருப்பது என்று எல்லா அனுபவங்களும் கிடைத்தன. சைரா படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறேன். இது சரித்திர படம். இதனால் வரலாற்று கதைகளை படித்து அந்த காலகட்டத்து வாழ்க்கை முறைகள் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். பாகுபலி படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போடுவது, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தேன். இன்னொரு படத்துக்காக நடனம் கற்றேன்.” என்று கூறியுள்ளார்.

தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் உள்பட மொத்தம் 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.