thiruvannamalai karthigai deepa kodiyetram - 2026

திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் விழாக்கள் விசேஷங்கள்
thiruvannamalai karthigai deepa kodiyetram - 2026
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தரிசன கட்டணம் ரத்து. நடப்பாண்டு முதல்முறையாக 3,000 பக்தர்களுக்கு ஆன்லைனில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
  • நவ.18 காலை 11 மணி முதல் நவ.20 மாலை 3 மணி வரை ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.
  • நவ.20 மாலை 4 மணிக்கு கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, SMS மற்றும் இணையதளத்தில் அனுமதி சீட்டுகள் வழங்கப்படும்.
  • திருவண்ணாமலையைச் சேர்ந்த 1,500 பேருக்கும், வெளியூர் பக்தர்கள் 1,500 பேருக்கும் பாஸ் வழங்கப்படும் – இந்து சமய அறநிலையத்துறை

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற பக்தர்கள் இணையதளம் வாயிலாக முற்றிலும் இலவசமாக முன்பதிவு செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் மற்றும் மகா தீபம் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ளன. மகா தீபத்தைக் காண 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

3,000 இலவச நுழைவுச் சீட்டுகள்:

கடந்த ஆண்டுகளில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்காக முறையே ரூ.500 மற்றும் ரூ.600 மதிப்பிலான கட்டண நுழைவுச் சீட்டுகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறும் தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷின் அறிவுறுத்தலின்படி, மொத்தம் 3,000 நுழைவுச் சீட்டுகள் முற்றிலும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கான நுழைவுச் சீட்டு ஒதுக்கீடு

நவம்பர் 24ஆம் தேதி நடைபெறவுள்ள தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டுகள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பரணி தீபம்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் – 500 சீட்டுகள்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் – 500 சீட்டுகள்.

மகா தீபம்:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் – 1,000 சீட்டுகள்.
பிற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் – 1,000 சீட்டுகள்.

நவம்பர் 18 முதல் இலவச ஆன்லைன் முன்பதிவு

பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற விரும்பும் பக்தர்கள், தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி திருக்கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு தொடங்கும் நாள்: நவம்பர் 18, 2026.
முன்பதிவு தொடங்கும் நேரம்: காலை 11 மணி.
முன்பதிவு முடியும் நாள்: நவம்பர் 20, 2026.
முன்பதிவு முடியும் நேரம்: மாலை 3 மணி.
இந்த முன்பதிவு முற்றிலும் இலவசமாகும்.

ALSO READ:  புரட்டாசி கடைசி சனி, கரட்டு பெருமாள் கோயிலில் பாறையில் உணவுண்டு வழிபாடு!

கணினி குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு

இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களில் இருந்து நவம்பர் 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் (Random Selection) முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு மின்னணு நுழைவுச் சீட்டை (e-Ticket) பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புடன் குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும், அவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்களுக்கான மின்னணு நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து, நவம்பர் 24ஆம் தேதி கோயில் நுழைவுவாயிலில் காண்பிக்க வேண்டும். அங்கு நுழைவுச் சீட்டு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் கவனத்திற்கு – முக்கிய நிபந்தனைகள்

  • ஆதார் அட்டையை அடையாளச் சான்றாகக் கொண்டு சரிபார்த்த பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • பரணி தீபத்திற்கு முன்பதிவு செய்பவர்கள் மகா தீபத்திற்கு முன்பதிவு செய்ய முடியாது. அதேபோல், மகா தீபத்திற்கு முன்பதிவு செய்பவர்களும் பரணி தீபத்திற்கு முன்பதிவு செய்ய முடியாது.
  • பரணி தீபத்திற்கான முன்பதிவில் ஒருவர் ஒரு நுழைவுச் சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
  • மகா தீபத்திற்கான முன்பதிவில் வெவ்வேறு ஆதார் எண்களைக் கொண்டு இரண்டு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
  • அனைத்து நுழைவுச் சீட்டுகளும் கணினி மூலம் தானியங்கி குலுக்கல் முறையில் மட்டுமே தேர்வு செய்து வழங்கப்படும்.
ALSO READ:  பெரியார் அறிவுலக நூலக ஊழல்: படைப்பாளர்கள் சங்கமம் கண்டனம்

எனவே, திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Posts by Dhinasari Reporter: