usilampatti karattu perumal koil annadhanam - 2026

புரட்டாசி கடைசி சனி, கரட்டு பெருமாள் கோயிலில் பாறையில் உணவுண்டு வழிபாடு!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
usilampatti karattu perumal koil annadhanam - 2026

உசிலம்பட்டி அருகே புரட்டாசி கடைசி சனிக் கிழமையை முன்னிட்டு கரட்டு பெருமாள் கோவில்- அன்னதானமாக வழங்கப்படும் உணவை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஒற்றுமைக்காகவும் மழை வேண்டியும் பாறையில் உண்டு வினோத வழிபாடு நடத்தினர். உடனே மழையும் பெய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சூலப்புரம் கிராமத்தில் அருகே அமைந்துள்ள சுமார் 2000 -ம் அடி உயரமுள்ள மலையில் பழமையான கரட்டு பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை முன்னிட்டு கிராமத்து சார்பில் வழிபாடு செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று பெரிய அண்டாக்களில் உணவுகள் சமைத்து பெருமாள் சாமிக்கு பூஜைகள்
செய்தனர். மேலும் தண்ணீருக்காக மலையில் உள்ள கரட்டு பெருமாள் கோவில் அருகில் உள்ள பாறையில் வற்றாத சுனை நீரை உணவு சமைப்பதற்கும், குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாறையில் அமர வைக்கப்பட்டு அன்னதானமாக உணவுகள் பரிமாறப்பட்டது. இதில், சமூக ஒற்றுமைக்காகவும், மழை வேண்டியும் சூலப்புரம் கிராமத்தை சுற்றியுள்ள 25 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உணவை உண்டு வழி பாடு செய்து சாமி தரிசனம் செய்து கோவிந்த கோஷங்கள் எழுப்பி வினோத வழிபாடு செய்தனர்.

மேலும் , பாறையில் பக்தர்கள் உண்ட உணவை அப்படியே விட்டு செல்வதால் மழை பெய்து அந்த இடத்தை சுத்தம் செய்து விடும் என்பது ஐதீகம். இந்த நிலையில், மலையிலும் சூலப்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழையும் பெய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.