kerala cm inspect sabarimala yatra - 2026

சபரிமலை யாத்திரை முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் சுற்றுலா
kerala cm inspect sabarimala yatra - 2026

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை அதைத்தொடர்ந்து நடைபெறும் மகர ஜோதி விழாவுக்கு யாத்திரைக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கல் வந்த கேரள முதல்வர் வி.டி. சதீசன், நிலக்கல் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், தேவசம்போர்டு தலைவர் மற்றும் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வரும் 2026- 27 ஆம் ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு காலத்தில் சபரிமலை வரும் பக்தர்களுக்கு செய்து தரப்பட உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பஸ் வசதி உட்பட அனைத்து வசதிகளும் குறித்தும் கேரள முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சபரிமலை மண்டல-மகரவிளக்கு திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி. சதீசன், தேவஸ்வம் அமைச்சர் கே. முரளிதரன் ஆகியோருடன் இணைந்து இன்று சனிக்கிழமை சபரிமலைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

முதல்வர் இன்று காலை 9 மணியளவில் நிலக்கல் பகுதிக்கு வருகை தந்து, அங்குள்ள வாகன நிறுத்துமிடம் மற்றும் சாலை சீரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, காலை 10:30 மணியளவில் பம்பையில் உள்ள ஸ்ரீராம சாேகத மண்டபத்தில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மற்றும் தேவஸ்வம் அமைச்சர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சந்நிதானம் வருகை: மதியத்திற்குப் பிறகு சந்நிதானத்தில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை முதல்வர் பார்வையிட்டார். மாலை 5 மணிக்கு துலா மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படும் வேளையில் அவர் சுவாமி தரிசனமும் செய்தார்.

இந்த ஆய்வின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத், மாநில காவல்துறை தலைவர் ராவட ஏ. சந்திரசேகர், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ. ஜெயக்குமார் மற்றும் பிற அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.