நள்ளிரவு பரபரப்பு! சென்னை எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் விடுதியில் சோதனை!

Published:

mla hostel chennai - 2026

சென்னையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்கும் விடுதியில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சி.பிளாக் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வந்தனர்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் சி பிளாக்கில் உள்ள 10-வது மாடியில் சோதனை நடத்தினர். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர்புடைய 3 அறைகளிலும் சோதனை நடைபெற்றதாகக் கூறப் படுகிறது. தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தினர்.

பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப் படுகிறது. இரவு 10 மணி தொடங்கி, 12 மணிக்குப் பிறகும் சோதனை நீண்டது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

சோதனை நடைபெறும் இடத்தில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் ஊடகங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல், பறக்கும் படை அதிகாரிகள் வேறு வழியில் வெளியில் சென்று விட்டனர்!

Related articles

Recent articles

spot_img