ஒவ்வொரு நதியும் கங்கை ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம்
– அடல் பிஹாரி வாஜ்பாயி
பாரத் கோயி பூமிகா துக்கடா நஹி ஹை.
ஜீதா ஜாக்தா ராஷ்ட்ர புருஷ் ஹை.
ஏ வந்தன் கீ தர்தீ ஹை.
அபிநந்தன் கீ தர்தீ ஹை.
ஏ அர்ப்பண் கீ தர்தீ ஹை.
தர்ப்பண் கீ தர்தீ ஹை.
யஹ் கீ நதீ நதீ ஹமாரே லியே கங்கா ஹை.
இஸ்கா கங்கர் கங்கர் ஹமாரேலியே சங்கர் ஹை.
ஹம் ஜீயேங்கே தோ இஸ் பாரத் கேலியே.
மரேங்கே தோ இஸ் பாரத் கேலியே.
ஔர் மர்னே கே பாத்பீ கங்கா ஜல் மே
பெஹ்தீ ஹுயீ ஹமாரே அஸ்தியோங்கோ
கோயீ சுனேகா தோ ஏக்ஹீ ஆவாஜ் ஆயேகா
பாரத் மாதாகீ ஜெய்!
பாரதம் ஒன்றும் வெறும் மண்ணுருண்டை அல்ல.
இது உயிரோட்டமுள்ள மனிதர்களின் ஆத்மா.
இது வணக்கத்துக்குரிய பூமி .
அன்பான பூமி.
தியாக பூமி கர்ம பூமி.
இங்குள்ள ஒவ்வொரு நதியும்
எமக்கு பவித்ரமான கங்கையே!
இங்கு ஒவ்வொரு கல்லும் எமக்கு சிவலிங்கமே!
பாரத தேசத்திற்காக நாங்கள் வாழ்வோம்.
பாரத தேசத்திற்காக உயிர் கொடுப்போம்.
மரணித்த பின்னும் கூட
கங்கையில் அடித்துச் செல்லப்படும் எங்கள் சாம்பலை
யாராவது காது கொடுத்து கேட்டால்
அது ஒரே குரலில் கூறும்
பாரத மாதாவுக்கு வெற்றி என்று!!
தமிழில்: ராஜி ரகுநாதன்