
சபரிமலை சிறப்பு ரயில்களின் வரிசையில், செங்கோட்டை – புனலூர் வழியாக கொல்லம் வரை இயங்கும் வகையில் இரண்டு ரயில்கள் இயக்கப்படும் என்று மாவேலிக்கர நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் தம் சமூகத் தளப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். இதில் ஒன்று ஏற்கெனவே செங்கோட்டை வரை இயங்கிய சார்லப்பள்ளி ரயில் ஆகும். அது கொல்லம் வரை நீட்டித்து இயக்கப்படவுள்ளது.
இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்ததாவது….
கேரள மாநிலம் மாவேலிக்கர நாடாளுமன்ற உறுப்பினர் கொடிக்குன்னில் சுரேஷ் அவர்களுக்கு
தென்காசி செங்கோட்டை வழியாக கொல்லத்திற்கு இரண்டு சபரிமலை சீசன் கால சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பெற்றமைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சபரிமலை மண்டல-மகர கால யாத்திரை காலத்தில்
கேரளாவுக்கு வரும் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா பக்தர்களுக்கு வசதியான மற்றும் நேரடி ரயில் பயணத்தை தென்காசி – செங்கோட்டை – புளலூர் ரயில் பாதை வழியாக கொல்லத்திற்கு இரண்டு சபரிமலை சிறப்பு ரயில் சேவையை உறுதி செய்ய எடுத்துள்ள முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
இந்த இரண்டு ரயில்களில், இதற்கு முன்பு செங்கோட்டையில் சேவையை நிறுத்திய ஹைதராபாத் சார்லாப்பள்ளி ரயில், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டும், நாந்தெட்-கொல்லம் முதல் புதிய சிறப்பு சேவை செய்ய அனுமதித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட சேவைகளின் விபரம்:
- ரயில் எண்: 07691/07692
சார்ரைப்பள்ளி-செங்கோட்டை (சார்லாப்பள்ளி வழித்தடத்தில் முன்பு சேவை செய்த ரயில் கொல்லம் வரை நீட்டிப்பு.) - ரயில் எண்: 07687/07688
நாந்தெட் – கொல்லம் பதிய சிறப்பு ரயில்
இந்த ரயில்கள் குறித்து கொடிக்குன்னில் சுரேஷ் கொடுத்த அறிவிப்பில்,
சபரிமலை யாத்திரையின் முக்கியத் தலங்களில் ஒன்றான கொட்டாரக்கரை ஸ்ரீ மஹாகணபதி கோயிலுக்கு யாத்திரையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு ரயில்களும் கொட்டாரக்கரையில் நிற்கும்.
இதன் முலம் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் யாத்ரிகர்கள் நோடியாக ரயில் வழியாக
கொட்டாரக்கரை செல்லும் வசதி கிடைக்கும். செங்கோட்டையில் நின்று செல்லும் ரயிலை புனலூர் வழியாக கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்விளி வைஷ்ணவ்க்கு விரிவான கோரிக்கையாக விடுத்திருந்தேன்.
கடந்த வாரம் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் இது வலுவாக எழுப்பப்பட்டது.
சபரிமலை யாத்திரையின் சிறப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு செங்கோட்டை – தென்காசி – கொட்டாரக்கரை
வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரயில் சேவைகளை அனுமதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும் ரயில்வே அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன்.
சபரிமலை யாத்திரை தொடர்பான ரயில் வசதிகளை அதிகரிக்கவும், கொல்லம் மாவட்டத்தில் ரயில்வே மேம்பாட்டுத் தேவைகளை அடையவும் வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Posts by Dhinasari Reporter:
- திருவண்ணாமலை தீப தரிசனம்; பக்தர்கள் இலவசமாக ஆன்லைன் பதிவு செய்யலாம்!
- உச்ச நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு: டாக்டர் கிருஷ்ணசாமி கண்டிப்பு!
- சிங்கபூரில் இளையராஜா; ரசிகர் விவரித்த இசை அனுபவம்!
- சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்! தொடர்பு எண்கள் வெளியீடு!
- அமிர்தா வேளாண் கல்லூரி சார்பில் நீர்வடிப் பகுதி மற்றும் வறட்சி மேலாண்மை விழிப்பு உணர்வு நிகழ்ச்சி!


