
உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தை என்ற தனது நிலையை மீண்டும் பெறும் முயற்சியில் , இந்தியா தைவானைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது என பிசினஸ்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாத இறுதியில் இருந்து ஏற்பட்ட 640 பில்லியன் டாலர் மீட்சியைத் (ரெபெண்ட்)தொடர்ந்து, இந்திய ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக களின் பட்டியலிடப்பட்ட சந்தை மதிப்பு 5.4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள்(FPI ), அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட ₹45,162 கோடி நிகர வெளிப்பாய்வை மாற்றி, நவம்பர் 11 வரை இந்தியப் பங்குகளில் ₹65,735 கோடிக்கு வாங்கியுள்ளது இந்தியா ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மதிப்பு சேர்த்துள்ளது. . வலுவான பெருநிறுவன வருவாய் மற்றும் சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்த மீட்சிக்கு ஆதரவளித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சற்றே குதூகலிக்கும் செய்தி. .
அதே சமயம், செயற்கை நுண்ணறிவு (AI) செலவினங்கள் மற்றும் லாபத்தன்மை குறித்த கவலைகள், அக்டோபர் மாதத்தில் தைவானில் இருந்து 30.68 பில்லியன் டாலரும், தென் கொரியாவில் இருந்து 14.59 பில்லியன் டாலரும் வெளிநாட்டு வெளிப்பாய்வைத் தூண்டின. “இந்தியாவின் சமீபத்திய வலிமைக்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணி, மாறிவரும் உலகளாவிய முதலீட்டுச் சூழலாகும். சில செயற்கை நுண்ணறிவு தொடர்பான பங்குகள் மீதான ஆர்வம் தணிவதால், முதலீட்டாளர்கள் மற்ற சந்தைகளில் உள்ள வாய்ப்புகளை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள் ,” என்று ஹிமான்ஷுக்யான் எல்எல்பி-யின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிமான்ஷு வர்மா கூறினார். உலகின் ஐந்தாவது பெரிய பங்குச் சந்தையாக உருவெடுக்க இந்தியா மீண்டும் தைவானை முந்தியுள்ளது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் சந்தையாளர்கள் கருதுகிறார்கள்.
நவம்பர் மாதத்திற்குப் பிறகும் வெளிநாட்டுப் பங்குகளை வாங்குவது தொடருமா என்பதும், நிறுவனங்களின் வருவாய், தற்போதைய சந்தை மதிப்பீடுகளை நியாயப்படுத்துமா என்பதும், வெளிநாட்டுப் பங்குகளின் வரத்து குறைந்தால், உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து நிலைத்தன்மையை வழங்குவார்களா என்பதையும் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் அமைப்புக்களும் சந்தை விற்பன்னர்களும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அலெர்ட்: இது ஏற்கனவே ஊடகங்கள பலவற்றில் வெளிவந்த நிதி கல்வி தொடர்பான செய்தியே அன்றி, முதலீட்டு ஆலோசனைக்கான செய்திப்பிரிவில் அடங்காது.
- ஆர்.கே



