
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விடுமுறை நீட்டிக்கப் பட்டிருக்கிறது.
ஜனவரி 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று மதியம் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது! ஆனால் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையாததால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது!
