தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

kamalalayam tn bjp - 2026
  • பி.ஆர். மகாதேவன்

அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே ஏழு லட்சம்
அதிமுக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 41 லட்சம்
அதிமுக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 76 லட்சம்
அதிமுக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே 53 லட்சம்
அதிமுக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம்

அதாவது 2006-ல் ஜெயலலிதா தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகளைவிட 2021-ல் எடப்பாடி தலைமையில் தோற்றபோது வாங்கிய வாக்குகள் 46 லட்சம் அதிகம்.

2026-ல் தோற்றபோது அதிமுக வாங்கியிருக்கும் வாக்குகள் 2006-ல் வாங்கிய வாக்குகளைவிட வெறும் முன்று லட்சம் மட்டுமே குறைவு.

நிச்சயம் ஜெயலலிதாபோல் எடப்பாடியார் பெரிய ஆளுமை இல்லைதான். ஆனால் வாக்களித்திருக்கும் அதிமுகவினரும் பொது மக்களும் எடப்பாடியை இன்றுவரையிலும் கைவிடவில்லை.

மக்களாட்சியில் ஒரு தலைவருடைய மதிப்பு என்பது அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பாஜக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஆறு லட்சம்
பாஜக 2011-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் எட்டு லட்சம்
பாஜக 2016-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 12 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் பதிநான்கு லட்சம்

பாஜக 2009-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 7 லட்சம்
பாஜக 2014-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 22 லட்சம்
பாஜக 2021-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 15 லட்சம்
பாஜக 2026-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் 48 லட்சம்

போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையிலான பாஜகவின் வாக்கு சதவிகிதம்.
2014 – 9 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 24.1%
2019 – 5 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 28.5%
2024 – 23 இடங்களில் போட்டியிட்டு வாங்கிய வாக்குகளை வைத்துப் பார்த்தால் அதன் வாக்கு விகிதம் 20%

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மொத்தம் பதிவான வாக்குகள் எத்தனை… அதில் ஒரு கட்சி எத்தனை வாக்குகளைப் பெறுகிறது என்ற அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிடுவது ஒரு கட்சியின் உண்மையான வளர்ச்சியைக் காட்டாது.

எத்தனை இடங்களில் போட்டியிட்டிருக்கிறது. அங்கு எவ்வளவு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதில் ஒரு கட்சி எத்தனை சதவிகிதம் பெற்றிருக்கிறது என்றுதான் கணக்கிடவேண்டும்.

ஒரு கட்சி போட்டியிடாத தொகுதிகளில் விழுந்த வாக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்ப்பதென்பது சரியல்ல. ஏனென்றால் போட்டியிடாத பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஒரு வாக்கும் கிடைத்திருக்காதே.

கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டால் ஒரு கட்சியின் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். அதைவைத்து கட்சி வளர்ந்துவிட்டதாகச் சொல்லவே முடியாது.

தமிழகத்தில் பாஜக கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்தில் நிறைய இடங்களில் போட்டியிட்டிருக்கின்றன. ஆனால் ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவரைத் தாண்டி மக்கள் பாஜக பக்கம் வரவே இல்லை. இது அத்வானி, வாஜ்பாய் ஆகியோரின் தோல்வி அல்ல. தமிழக மக்கள் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் அந்நாட்களில் இந்து நேச சக்தியாகப் பார்த்தனர். அவர்களை மீறி கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதெல்லாம் மிகவும் கடினமான விஷயம்.

அதோடு அப்போது நரேந்திர மோதி தலைமையிலான மத்திய ஆட்சியும் அமைந்திருக்கவில்லை. எனவே 2014க்கு முந்தைய பாஜகவின் செயல்பாடுகளை இந்தப் பின்னணியில்தான் மதிப்பிடவேண்டும்.

2014க்குப் பிறகும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் பெரிய ஆதரவு அலை ஒன்றும் வீசிவிடவில்லை. படிப்படியான வளர்ச்சி என்று கூட சொல்ல முடியாது. ஒருவித தேக்க நிலையே நிலவுகிறது. வாஜ்பாய் காலத்தைவிட மோதியின் காலத்தில் ஒப்பீட்டளவில் இந்து சக்திகள் ஓரளவுக்கு பலம் பெற்றிருக்கின்றன. இது ஒருபோதும் போதாது.

இந்தக் காலகட்டத்திலும் மக்கள் அதிமுகவிடமிருந்து பாஜக பக்கம் நகர்ந்திருக்கவே இல்லை.

2026 தேர்தலிலும் அதிமுக ஒரு கோடிக்கு மேல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அவை முழுவதும் பாஜகவின் வாக்குகள்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் பாஜகவுக்கு வளர்ச்சி கிடைக்கவில்லை. தனியாக நின்றாலும் வளர்ச்சி கிடைக்கவில்லை.

எனவே அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமா வேண்டாமா என்று வியூகம் வகுக்காமல் இந்துக்களை அணி திரட்டுவது எப்படி என்று வியூகம் வகுக்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், அதிமுக பற்றிய சிந்தனையே பாஜகவுக்குத் தேவையே இல்லை. ஆனால், அதிமுகவுக்கு வாக்களிக்கும் இந்துக்களைப் பற்றி பாஜக சிந்தித்தே தீரவேண்டும். ஜெயலலிதா என்ற மென் இந்துத்துவர் இருந்தபோது பாஜகவுக்கு மக்களிடையே ஆதரவு இல்லை என்பதில் ஆச்சரியப்படவோ வருத்தப்படவோ எதுவும் இல்லை. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின்னரும் அந்த இந்துக்களின் நம்பிக்கையை பாஜகவால் ஏன் இன்னும் பெற முடியவில்லை?

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஊடகங்களின் துறையுடன் உருவாக்கி வைத்திருக்கும் மாயத் தோற்றம் உடைக்கப்படவேண்டும். உண்மையில் அது 2009 வாக்கிலேயே ஆரம்பித்துவிட்டது. நாம் தமிழர் என்றும் தமிழ் தேசியம் என்று 2009 வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்து-இந்திய வெறுப்பு பிரசாரத்தின் இரண்டாம் சுனாமிதான் 2016-2021 காலகட்டத்திலான திமுகவின் பேயாட்டம். உண்மையில் சைமனிஸமே ஸ்டாலினிஸத்தின் முன்னோடி மற்றும் வழிகாட்டி.

பஞ்ச பரிவர்த்தன் என்ற பெயரில் பிளாஸ்டிக் பை உபயோகிக்கூடாது, தினமும் பல் தேய்க்க வேண்டும், சோப் போட்டுக் குளிக்கவேண்டும், அப்பா அம்மாவிடம் அன்பாக நடந்துகொள்ளவேண்டும், டிராஃபிக் கான்ஸ்டபிளை மதிக்கவேண்டும் என்றெல்லாம் நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். பேரியக்கம் நாடு முழுவதும் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறப் பின்பற்ற வேண்டிய பஞ்ச சீலங்கள் :

  1. அண்ணாமலையை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக்கவேண்டும். தமிழக ஊடகங்களை நடுநிலையாக நடந்துகொள்ளச் செய்யவேண்டும். அதாவது சர்ச்-திமுக-இடதுசாரிப் பிடியில் இருக்கும் தமிழக ஊடக மாஃபியாவை அடக்கவேண்டும். அவர் மத்திய அரசு அல்லது மத்திய அரசியல் பதவிக்குச் செல்ல விரும்பாவிட்டால் தமிழகக் கிளைக்கென்று தனியாக ஒரு பதவியை ஆரம்பித்து அதன் தலைவராக அண்ணாமலையை நியமிக்கலாம். சிங்கத்துக்கு வேட்டைக் களம் அமைத்துத் தரவேண்டும். சர்க்கஸ் கூண்டு அல்ல.
  2. மத்திய வருமான வரி – லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையின் தமிழக கிளை ஒன்றை புதிதாக ஆரம்பித்து சுப்ரமணியம் ஸ்வாமியை அதன் தலைவராக நியமிக்கவேண்டும். குற்றம் செய்து தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஆ.ராசா, ஸ்டாலின், கனிமொழி, மாறன், சிதம்பரம், செந்தில் பாலாஜி, பொன்முடி, கி.வீரமணி என வரிசையாக கைது செய்யப்படவேண்டும்.
  3. இந்து அற நிலையத்துறையில் மட்டுமல்லாமல் தலித் பெயரில் இட ஒதுக்கீடு பெற்று பதவியில் இருக்கும் அத்தனை க்ரிப்டோக்களையும் பதவி நீக்கம் மற்றும் உரிய சட்டபூர்வமான அபராதம்+சிறை தண்டனை வழங்க வேண்டும். அரசியல் சாசனத்தையும் இட ஒதுக்கீட்டையும் மதிக்கும் அரசு முதலில் செய்ய வேண்டியது, அரசியல் சாசன மீறலையும் இட ஒதுக்கீட்டு ஏய்ப்பையும் தடுப்பதுதான். அம்பேத்கரை மதிப்பதென்றால் அவர் எழுதிய அரசியல் சாசனத்தை மதிக்கவும். இதற்கென்றே ஒரு துறை உருவாக்கி அதற்கு ஹெச்.ராஜாவைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  4. வகஃப் சொத்து முறைகேடுகளை புதிய சட்டத்தின் அடிப்படையில் விசாரித்து கடந்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரித்திருக்கும் வக்ஃப் சொத்துகளை மீட்டு உரிய நபர்களுக்குத் தரவேண்டும். இந்தத் துறைக்கு தமிழத்தின் சார்பில் வேலூர் இப்ராஹிமைத் தலைவராக நியமிக்கவேண்டும்.
  5. திரைப்படத்துறையில் புழங்கும் கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, கஞ்சா பண முதலீடு, விநியோக ஏக ஆதிக்கம், பாலியல் வன்கொடுமைகள், இந்து துவேஷச் சித்திரிப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கவும் தடுக்கவும் கடும் தண்டனைகள் உடனே வழங்கவும் ஒரு வாரியம் புதிதாக அமைக்கவேண்டும். தமிழிசை-வானதி-குஷ்பு ஆகியோர் தலைமையில் முழு அதிகாரம் கொண்ட ஒரு சக்தி கேந்திரமாக அதைச் செயல்பட அனுமதிக்கவேண்டும்.
ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழகம் தனி நாடு என்றுதானே இந்திய விரோத இந்து விரோத சக்திகள் செயல்படுகின்றன. எனவே தமிழகத்துக்கென்றே தனியான துறைகளை அவர்கள் கேட்பதுபோல் அமைத்து தமிழகத்தை வளம் பெறச் செய்யவேண்டும்.

எந்தப் பதவிக்கு யார் என்பதெல்லாம் ஒரு புரிதலுக்காகச் சொல்லப்பட்டிருப்பவையே. ஒவ்வொரு நபரின் அணுகுமுறை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிப்படை விஷயம் என்னவென்றால் attitude… அதுவே முக்கியம்.
ஆள் அல்ல; ஆளுமை அதுவே பிரதானம்.
சொல் அல்ல; செயலே பிரதானம்.
ஆட்சி அல்ல; அதிகாரப் பிரயோகமே பிரதானம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories