சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

17
udayanidhi in assembly - 2026

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: உதயநிதி

தமிழக சட்டமன்றத்தில் இன்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் அழைத்துச் சென்று, அவரது இருக்கையில் அமர வைத்தனர். அதன் பின்னர் சபாநாயகர் பிரபாகர், துணை சபாநாயகர்ரவிசங்கர் ஆகியோருக்கு உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி பேசியபோது, நிறைவாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி முடித்தார். அவரது உரையில்,

“தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்; வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்” – என்று பேசி முடித்தார். உதயநிதியின் பேச்சின் நிறைவில் முதலமைச்சர் விஜய் கைகூப்பி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

எனினும் உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

ஹிந்து மதத்தின் மீது உங்களுக்குள்ள அதீத வெறுப்பே, உங்கள் சரிவிற்கு வழிவகுக்கும. உங்கள் முதல் சட்டமன்ற உரையிலேயே கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக நீங்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதைத் தான் காட்டுகிறது. ஹிந்துக்களின் மீது தொடர்ந்து நீங்கள் கல்லெறிவது கடும் கண்டனத்திற்குரியது.

துணை முதல்வராக இருந்த நீங்கள், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி இறக்கம் செய்யப்பட்டதற்கு ‘சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று நீங்கள் ஒருமுறை பொதுவெளியில் பேசி, ஹிந்துக்களின் நீங்கா வெறுப்பை சம்பாதித்துக் கொண்டதே காரணம்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

எனவே, நீங்கள் அரசியலில் மென்மேலும் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணர்வை வெட்டி எறிந்துவிட்டு, உண்மையான மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியம். ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அவரவர் மத அடையாளங்களும் நம்பிக்கைகளும் அதிமுக்கியம் என்பதை நீங்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு ஹிந்துக்களின் நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்தி, ‘மத’ யானையின் மீது அரசியல் சவாரி செய்ய முயன்றால் மீள முடியா பாழுங்குழியில் வீழ்வீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும், அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் விஜய், சட்டமன்றத்தில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு என்ன எதிர்வினையாற்றப் போகிறார் என்பதைத் தான் தமிழகம் தற்போது ஆவலாக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

உதயநிதி பேச்சு விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவால்: பாஜக

“சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று மீண்டும் திமுக வின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திட்டமிடப்பட்ட, உள்நோக்கத்தோடு பேசியுள்ள அதே வேளையில், திமுகவுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கட்சிகளின் தயவால் தான் விஜய் முதலமைச்சராக இருக்கிறார் என்று ஆணவத்தோடு உதயநிதி பேசியிருப்பதும், ஒன்றோடொன்று தொடர்புடையவை. அதாவது முதலமைச்சர் விஜய் அவர்கள் சனாதனம் குறித்து உதயநிதி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அரசுக்கு ஆதரவு இருக்காது என்பதை மறைமுகமாக சொல்லி மிரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் இந்த மிரட்டலை திமுக விடுத்திருப்பது முதலமைச்சர் விஜய்க்கு விடப்பட்டிருக்கும் சவாலே!”

– நாராயணன் திருப்பதி, தலைமை செய்தி தொடர்பாளர், பா.ஜ.க.


அர்ஜுன் சம்பத் அறிக்கை!

கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆயுதங்கள் தமிழக சட்டசபையில் வேலையை செய்ய துவங்கி விட்டன.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் மாண்புமிகு திரு ஜே சி டி பிரபாகர் ஐயா அவர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள மேரி மாதா சர்ச்சுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றது சிலுவையை தொட்டு வணங்கி கும்பிட்டது தன்னை ஒரு கிறிஸ்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு பைபிள் பரிசு வழங்கியது ஆகியோவற்றை குறித்து பேசியுள்ளார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஒரு கிறிஸ்தவர் என்பதில் பெருமைப்பட்டுக் கொள்கிறேன் என்று பேசியவர். தற்பொழுது உதயநிதியும், ஜோசப் விஜய்யும்,ஜே சி டி பிரபாகர் அவர்களும் ஒரே லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் ஒருவர் பிடிப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை ஒழிப்பதாக பேசியது குறித்து ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மீண்டும் மீண்டும் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசுவது திமுகவில் உள்ள ஒரு கோடி ஹிந்துக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.

குறிப்பாக அவரது தாயார் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் சனாதனத்தை பின்பற்றுபவர். முதலில் அவர் அவரது வீட்டில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் ஆனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இஸ்லாமிய கிறிஸ்தவ மதவெறி மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக அப்பாவி இந்து தமிழர்கள் பின்பற்றுகின்ற தமிழர்களின் பாரம்பரியமான சனாதனத்தை ஒழித்துக் கட்டுவேன் என தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது திராவிட மாடல் திமுக இன்னும் திருந்தவில்லை. என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திரைப்பட நடிகராக இருந்த காலத்தில் மெர்சல் திரைப்படத்தில் தமிழர்களின் பாரம்பரியம் வேஷ்டி சட்டை என்பதை குறித்து பெருமை பேசி இருப்பார். ஆனால் தற்பொழுது அதற்கு மாறாக தமிழக சட்டசபையில் கோட் அணிந்து பங்கெடுத்துக் கொள்கிறார் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை புறக்கணித்து வருகிறார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

திரு ஜோசப் விஜய் அவர்கள் லயோலா கல்லூரியில் படித்து வருபவர் லயோலா கல்லூரி நிர்வாகிகளான அவரது உறவினர்கள் திரு சேவியர் மற்றும் திரு பிரிட்டோ ஆகியோருக்கு கிறிஸ்தவ மதம் பரப்பும் வேலையை தொடர்ந்து செய்து வருபவர்கள். இந்து சமயம் குறித்தும் சனாதன தர்மம் குறித்தும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருபவர்கள்.

தற்பொழுது சட்டசபையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்திற்கு உரியது. ஹிந்து தமிழர்கள் தமிழக வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கன்னியாகுமரி,சென்னை போன்ற பகுதிகளில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாக உள்ளனர் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக மாறிவிட்டார்கள்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெற முடியாது ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் மிக எளிதாக கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று வந்து இந்து விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திராவிட மாடல் தீய சக்தி திமுக சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.