தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

kamalalayam tn bjp - 2026

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பொன்னாரிஸம், தமிழிசையிஸம், முருகனிஸம் எல்லாவற்றையும் முன்னாள் தலைவர்களிஸம் என்று வகைப்படுத்தலாம். அவையெல்லாம் வாஜ்பாயிஸத்தின் நீட்சியே. அதாவது மிதவாதமிஸம்.

ஹெச்.ராஜாயிஸம் ஃப்யர் பிராண்ட் இஸம். அத்வானியிஸத்தின் வழியில் செல்லக்கூடியது. ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு பெரும் தலைகள் இருந்த காலகட்டத்தில் மக்களை பாஜக பக்கம் வரவைக்க மிகவும் பொருத்தமான இஸமாக அதுவே இருந்தது. ஆனால், வாஜ்பாயிஸம் அதற்கு இடம் தரவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவாக வெளிப்படையாக இருக்கும் இடத்தில்தான் ஃபயர் பிராண்ட் அரசியல் செல்லுபடியாகும். தமிழகத்தில் அது செல்லுபடியாகாது என்று அதை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவராமல் ஓரங்கட்டினார்கள்.

இத்தனைக்கும் எதிர் தரப்பு ஹெச்.ராஜாயிசத்தைத்தான் கட்டம் கட்டித் தாக்கியது. ஏனென்றால் அது பலம் பெற்றால் அவர்களுக்கு நெருக்கடி என்பது எதிரிகளுக்கு நன்கு புரிந்திருந்தது. நம்மவர்களுக்குத்தான் புரிந்திருக்கவில்லை.

ஒருவகையில் கருணாநிதி – ஜெயலலிதா என்ற இரு பெரும் சர்வ அதிகாரமும் மக்கள் செல்வாக்கும் பெற்ற சக்திகளை எதிர்க்க யாராலும் முடிந்திருக்காது. வன்முறை முத்திரை குத்தி எளிதில் ஓரங்கட்டிவிடுவார்கள் என்று நினைத்து மிதவாதம் பக்கம் நகர்ந்தது தவறாகிவிட்டது. இதுவுமே பின்னால் தள்ளி இருந்து பார்ப்பதால் சொல்லும் விஷயம் தான்.

அண்ணாமலையிஸம் ஓர் எல்லைவரை அதிரடியானதுதான். வாஜ்பாயிஸம் போல் மிதமானது அல்ல. அத்வானியிஸம் போல் அதிரடியானதும் அல்ல. மோதியிஸம் போல் இரண்டும் கலந்த கலவை என்று சொல்லலாம். ஊழலற்ற நிர்வாக நேர்த்தி, அனைவருக்குமான வளர்ச்சி, கலாசார மீட்டெடுப்பு ஆகியவற்றின் இதமான கலவை. பெரிதும் வளர்ச்சி மாடலை முன்னுதாரணமாகக் கொண்டது.

உண்மையில் தமிழகத்துக்கு இந்த மோதியிஸமே சரியானது. அண்ணாமலையிஸம் அதன் வழியில் செல்லும் அத்தனை சாத்தியக்கூறுகளையும் கொண்டதுதான்.

ஆனால், மக்கள் மத்தியில் வாஜ்பாயிஸம் போன்ற மிதவாதத்துக்கும் ஆதரவு இல்லை. அத்வானியிஸம் – ஹெச்ராஜாயிஸம் போன்ற ஃபயர் பிராண்டுக்கும் ஆதரவு இல்லை. இரண்டுக்கும் இடை நிலையிலான மோதியிஸ – அண்ணாமலையிசத்துக்கும் ஆதரவு இல்லை.

நயினாரிஸம் என்பதை கூட்டணியிஸம் அல்லது சமரச இஸம் என்று சொல்லலாம். இதற்கும் தமிழக மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை. ஆக, பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த இஸம்தான் உகந்தது?

நரேந்திர மோதியிஸம் தான் தேசம் முழுவதும் பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. எனவே அதன் வழியிலான அண்ணாமலையிஸம் தமிழகத்துக்கு நன்மை தர வாய்ப்பு உண்டு.

ஆனால் மோதியிஸம் என்பது பிற மாநிலங்களில் பெற்றிருக்கும் வரவேற்பை தமிழகத்தில் பெறவில்லை. எனவே அதை அண்ணாமலையிஸம் என்ற பெயரில் முன்னெடுக்க பாஜக விரும்பியது. எதனாலோ இரண்டுக்கும் 2024-ல் பெரும் பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

உண்மையில் அன்று தோற்றது மோதியிஸமே. இந்திய அளவில் இன்னொரு முக்கியமான இஸம் வலிமையுடன் திகழ்கிறது. அது யோகியிஸம்.

இது ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸம் ஆகியவற்றின் அல்ட்ரா மாடர்ன் வடிவம். இதை அந்தரத்திலிருந்து உருவாக்கிவிட முடியாது. உத்தரபிரதேசத்தில் (க்ரிப்டோ யாதவ்) இடைநிலை ஜாதி சர்வாதிகாரமும் இஸ்லாமிய அப்பீஸ்மெண்டும் உச்சத்தில் இருந்தது. எனவே அங்கு தலித்தாகவும் வெற்றி பெற முடிந்தது. இந்துவாகவும் வெற்றி பெற முடிந்தது.

ஒருவகையில் இங்குமே அந்த அராஜகப் போக்குதான் திராவிட இயக்க வடிவில் இருந்தது. இங்கு தலித்களின் நேச சக்தியாகவும் மென் இந்துத்துவ சக்தியாகவும் அதிமுக இருந்ததால் தலித் சக்தியும் இந்து சக்தியும் தனியாக சொந்த அடையாளத்துடன் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

பாஜகவால் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை என்பவர்கள் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயம் இங்கு தலித் சக்தியும் கால் ஊன்ற முடியவில்லை.

தமிழகம் கருத்தியல் தளத்தில் சைமனிஸம் பக்கம் நகர்ந்துவிட்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் துரோகம், எழுவர் விடுதலை, பாலசந்திரன் படுகொலை, சல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, சி.ஏ.ஏ. எதிர்ப்பு என தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்பட்டவை எல்லாமே சைமனிஸத்தின் அடிப்படையிலானவையே. அந்த கருத்துருவாக்கத்தை திமுக 2021-ல் கைப்பற்றியது. 2026-ல் ஜோசஃபிடம் தந்திருக்கிறது.

சைமனிஸம், ஸ்டாலினிசம், ஜோசஃபிஸம் மூன்றும் பிதா, சுதன், பரிசுத்த ஆவி போன்ற ட்ரினிட்டி சக்திகளே. எனவே தமிழகத்தில் உருவாக வேண்டிய இஸம் எது என்பதை இந்த எதிரியின் ஒருங்கிணைப்பே தீர்மானிக்கவேண்டும். ட்ரினிட்டிக்கு மாற்று திரிசூலமே.

தமிழகத்தில் பாஜகவின் வரலாறை எடுத்துக் கொண்டு பார்த்தால் அண்ணாமலையிசமே ஓரளவுக்கு ஒப்பீட்டளவில் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. ஹெச்.ராஜாயிஸம்-அத்வானியிஸத்துக்கு தலைமைப் பொறுப்பு தராததால் அதைப் பற்றி அதிகம் எதுவும் சொல்லமுடியவில்லை. மற்றபடி அண்ணாமலையிஸம் தலைமைக்கும் வந்திருப்பதால் மற்ற இஸங்களைவிட முன்னணியில் இருக்கிறது.

அண்ணாமலையிஸத்தின் நிறை குறைகளைப் பார்ப்போம். திராவிட பிளஸ்தான் இதன் கொள்கை. எனவே இதை ஏற்க முடியாது. மோதியிஸம் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லா பாரதம் என்கிறது. அதன் அடிப்படையில் நமக்கு திராவிடம் இல்லா தமிழகம் என்பதுதான் சரியானது. ஆனால், வருத்தம் என்னவென்றால் மோதியுமே ‘திராவிட பிளஸ்’ என்பதை ஏற்கிறார். திராவிட மைனஸ் அல்லது சனாதனம் பிளஸ் என்பதுதான் இந்துக்கள் மற்றும் இந்தியாவின் நலனுக்கு உகந்தது.

  • * அண்ணாமலையிஸத்தின் அடுத்த அம்சம்: மத்திய தலைமைக்குக் கட்டுப்படாத தன்மை.
    • ஓர் எல்லை வரை சரி.
  • என் மண்; என் மக்கள்
  • அபாயகரமான முழக்கம். நம் தேசம்… நம் தர்மம் என்றே இருந்திருக்கவேண்டும்.
ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

முன்னாள் தலைவர்களுடன் விரிசல்.
திராவிட ஊடகங்களின் திட்டமிட்ட சதி.

மத்திய தலைமை சொல்லியே முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் எல்லாரும் செயல்படுகிறார்கள். திமுக அதைத் தந்திரமாகத் திரிக்கிறது.

உதாரணமாக, தமிழிசை அவர்களை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடச் சொன்னது மத்திய தலைமையே. திரு எல். முருகன் மிதமாகச் செயல்படவும் மத்திய தலைமையே காரணம். நிர்மலா சீதாராமன், குருமூர்த்தி, பேராசிரியர், வானதி ஸ்ரீனிவாசன் என அனைவரின் செயல்பாடுகளும் மத்திய தலைமையின் வழிகாட்டுதலின் படியே.

இவை அனைத்தையும் உட்கட்சி மோதலாகத் திரித்தது ஊடகங்களே.

நெருப்பில்லாமல் புகையுமா..? நிச்சயம் பாஜக கட்சியினருக்கிடையே ஆளுமை உரசல் – ஈகோ க்ளாஷ் இருந்திருக்கும். எல்லா இடங்களிலும் இருப்பதுதான். ஆனால், பொது இலக்குக்காக தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை விலக்கி விட்டு ஒற்றுமையாகச் செயல்படும் பக்குவமும் புரிதலும் அவர்களுக்கு உண்டு. எனவே, தலைவர்களைப் பார்த்து அதற்கேற்ப நடப்பதே தொண்டர்களுக்கு அழகு. ஈழப் படுகொலைக்குத் துணை நின்ற பின்னரும் திமுகவும் காங்கிரஸும் தோழமையைக் கைவிடவில்லை. பிற கூட்டணிக் கட்சிகளும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதையும் மீறவில்லை. தலைவர்கள் எவ்வழி… தொண்டர்கள் அவ்வழி.

டி.எம்.கே. ஃபைல்ஸ் : தமிழர்கள் பொருட்படுத்தாத ஊழலை பிரதான வியூகமாக அமைத்தது பலன் தரவில்லை… தராது. எனவே பிழையான முன்னெடுப்பு. இடதுசாரி, காங்கிரஸ், திமுக லாபி நிறைந்திருக்கும் அதிகாரவர்க்கத்தை வைத்துக்கொண்டு ஊழலை நிரூபிப்பதும் தண்டனை வாங்கித் தருவதும் மிகவும் கடினம்.

அதிமுகவுடனான மோதல். : திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிகிறது; பாஜக தனிமைப்படுத்தப்பட்டுவிடும்; அதிமுகவில் இருக்கும் இந்துக்கள் பாஜகவின் ஆதரவாளர்களாக வேண்டியவர்கள் என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் தவறு.

பாஜகவின் தனித்தன்மையும் நேர்மையும் கேள்விக்குக்குள்ளாக்கப்படுகிறது என்ற கோணத்தில் பார்த்தால் மோதல் சரி.

  • * அண்ணாமலையிஸத்தின் ஊடகக் கையாளுகை மற்றும் விளம்பர, யுக்திகள்
  • மிகவும் சிறப்பு. மிகவும் அவசியம்.
  • * திரையுலகைப் பற்றி விமர்சனமாகப் பேசக்கூடாது; புகழமட்டுமே செய்யலாம் என்ற தீர்மானம்.
  • மிக மிகத் தவறு.
  • * ஹனி டிராப்…
  • நோ கமெண்ட்ஸ்.
  • * பண மோசடி.
  • வாய்ப்பே இல்லை.
  • *
  • திறமையான நிர்வாகம் சாத்தியமா?
  • 100% சாத்தியமே.
  • * ஆட்சித் திறமை
  • கணிசமாக உண்டு. *
  • கட்சி அவரை ஓரங்கட்டிவிட்டதா?
  • இல்லை. 2026 தேர்தல் தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறது.
  • மீண்டும் தலைவராக்கப்படுவாரா..?
ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

விஜய் சரியான நேரம் பார்த்துக் காத்திருந்து களம் இறங்கியதுபோல், அண்ணாமலையும் களமும் காலமும் கனியும்போது முன்னிலைக்கு வருவார். கட்சித் தலைவர் பதவியைவிட முதல்வர் பதவியே அவருடைய இலக்கு. நரேந்திர மோதி கட்சித் தலைவராக ஒருநாளும் இருந்ததில்லை. ஒரு ஜம்பிங் பேட் ஆக அண்ணாமலைக்கு அது முதலில் தேவையாக இருந்தது. ஆனால், இனி,மேல் அண்ணாமலையும் கட்சிப் பதவியை விரும்ப வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

அண்ணாமலை இல்லையென்றால் இனிமேல் கட்சியே இல்லை.
சர்ச்சின் ஆதிக்கம் ஒடுக்கப்படாதவரை யார் வந்தாலும் பாஜகவுக்கு எதிர்காலமே கிடையாது. சர்ச்சின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்படாமல் மோதியே தமிழக முதலமைச்சரானாலும் சர்ச்சின் சொல்படியே நடந்தாகவேண்டியிருக்கும்.

விஷயம் ரொம்பவும் சிம்பிள்: அரபு நாடுகள் ஒன்றில் அமெரிக்க ராணுவம் கால் ஊன்றியிருந்தால் அந்த நாட்டில் நடப்பது அமெரிக்க ஆட்சியாகத்தான் இருக்கும். ரட்சணிய சேனை அகற்றப்படாத மாநிலத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் அது பாதிரியின் ஆட்சியாகவே இருக்கும். இயேசுவுக்குக் கூட அங்கு இடம் கிடையாது.

*
மேலே சொல்லப்பட்டிருக்கும் தமிழக பாஜகவின் வரலாறை வைத்துப் பார்த்தால் ஹெச்.ராஜாயிஸமே மிகவும் அவசியம். அதாவது, ஜோசஃபிஸத்தை எதிர்க்க ஜோசஃபை முதன் முதலில் அம்பலப்படுத்திய ஹெச்.ராஜாயிஸமே சரியானது.

(ஜோசஃப் நேர்வழியில் செல்வாக்கு பெறுவதில் தவறில்லை. ஜோசஃப் என்பதை மறைத்துக்கொண்டு செல்வாக்கு பெறுவது தவறு. ஹெச்.ராஜாயிஸம் இதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜோசஃபின் முகமூடி கழண்டுவிட்டது. பிற க்ரிப்டோக்களின் முகமூடிகள் கழற்றப்படவேண்டும்.).

அண்ணாமலையிஸத்துக்கு தமிழக அளவில் மக்கள் செல்வாக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. ஊடகங்களிலும் நல்ல ரீச் இருக்கிறது (நேர்மறையாகவும் எதிர்மறையாகவும்). ஆக ஹெச்.ராஜாயிஸத்தின் க்ரிப்டோ எதிர்ப்பு கொள்கை + அண்ணாமலையிஸத்தின் களப்பணி… இதுவே பாஜகவுக்கு தமிழகத்தில் நல்லதொரு எழுச்சியைத் தரும்.

பிராமணர் – பிராமணரல்லாதார் என்று பாஜகவுக்குள் எதிரிகள் தூண்டிவிடும் மோதலுக்கும் மிகச் சரியான பதிலடியாக இருக்கும்.

ராஜ அண்ணாமலையிஸம்…
தீவிர க்ரிப்டோ எதிர்ப்பு + அனைவருக்குமான வளர்ச்சி

இந்துத்துவ பிளஸ். *

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories