why kanyakumar like this - 2026

குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

உரத்த சிந்தனை அரசியல்
why kanyakumar like this - 2026
  • எம். தங்கராஜ்

குமரி மாவட்டத்தின் சில கடற்கரை கிராமங்களில் கடற்கரை மணலில் மோனோசைட் போன்ற கனிமங்கள் இயற்கையாகவே கலந்துள்ளன. இந்தக் கனிமங்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் புற்றுநோய் அதிகமாக வருகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட காரணம் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவாக நிரூபிக்கப்படவில்லை.

ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு சாதாரண மனிதனின் இயல்பான கேள்வி என்னவாக இருக்கும்?

“இந்த மணல்தான் பிரச்சினை என்றால், அதை முழுவதுமாக அள்ளிக்கொண்டு போய்விடுங்கள். எங்களுக்கு எந்த ஆபத்தும் வேண்டாம். இந்த மண்ணே இங்கே இருக்கக் கூடாது” என்பதுதான் பெரும்பாலான மக்களின் இயல்பான எண்ணமாக இருக்கும்.

ஆனால், அந்த மணலை காந்த சக்தி மூலம் பிரித்து எடுப்பதற்கு ஒரு நிறுவனம் வரும் போது, “அந்த மணலை மட்டும் பிரித்தெடுக்கக் கூடாது, அது அப்படியே இங்கேயே இருக்க வேண்டும்” என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை.

இதுபோலவே, ஒரு காலத்தில் துறைமுகம் வந்தால் அந்தப் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யாது, கடல் வளம் அழிந்துவிடும் என்று பல்வேற விதமான அச்சத்தை மக்கள் மத்தியில் கிளப்பி விட்டார்கள். ஆனால், இன்று கேரளாவில் வெறும் சில கிலோமீட்டர் தூரத்தில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கும் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன, நண்டுகள் முட்டையிடுகின்றன, மீன்பிடித் தொழிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதேபோல், கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாவரா பகுதியில் பல ஆண்டுகளாக IREL நிறுவனம் கடற்கரை கனிம மணலைப் பிரித்தெடுத்து வருகிறது. ஒடிசாவிலும் அதேபோன்ற கனிம மணல் பிரிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு இந்தக் கனிமங்களை அகற்றுவதை இயல்பான தொழில்துறை நடவடிக்கையாகவே பார்க்கிறார்கள்.

அப்படியிருக்க, தமிழ்நாட்டில் மட்டும் இதே விஷயத்திற்கு முற்றிலும் மாறுபட்ட எதிர்ப்புகள் ஏன் உருவாகின்றன என்ற கேள்வி எழுவது இயல்புதான். எந்தத் திட்டமாக இருந்தாலும் அதன் நன்மை, தீமை, சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்களின் நலன் ஆகிய அனைத்தையும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் ஆராய்ந்து விவாதிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

உணர்ச்சியை விட உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதே சமூகத்திற்கு நல்லது. இந்த திராவிட கல்வி சிலைகள் உண்டியல் கூட்டங்கள் மற்றும் மிஷனரிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படி விளங்காத வேலை தான் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.