
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகூர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு பேர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திதுள்ளது இதுவே முதல்முறையாகும்
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யகோரும் நோட்டீஸை குடியரசு துணை தலைவரும், மாநிலங்கள் அவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்தன. இந்த நோட்டீஸ் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதாதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட 7 கட்சிகளைச் சேர்ந்த 64 எம்.பி.க்கள் கையொப்பம் இட்டிருந்தன. இந்திய வரலாற்றில் இதுவரை உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதிக்கு எதிராக இதுவரை பதவிநீக்கம் செய்யக்கோரும் நோட்டீஸ் கொண்டுவந்தது இல்லை. ஒருவேளை கொண்டுவந்தால், இதுதான் வரலாற்றில் முதல்முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு
இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார்.



