sabarimala que during mandala pooja days - 2026

சபரிமலை தரிசன முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

சற்றுமுன் Featured ஆன்மிகச் செய்திகள் இந்தியா பொது தகவல்கள்
sabarimala que during mandala pooja days - 2026

சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசன முன்பதிவில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு…

உலகப் பிரசித்தி பெற்ற கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்ல உள்ள தற்போதைய நிலையில் தரிசன முன்பதிவில் தேவசம் போர்டு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. அதாவது தினசரி 80 ஆயிரம் பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்திருந்தாலும், அதில் பாதிக்கும் குறைவான 30ஆயிரம் பக்தர்களே தரிசனத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு நடத்திய விசாரணையில், தரிசன முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மண்டல பூஜை காலத்திற்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

அதாவது பிற மாநிலங்களைச் சேர்ந்த சில டிராவல் ஏஜென்சிகள் தரிசன டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து, அவற்றைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும், முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு வராமல் இருப்பதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறையின்படி, முன்பதிவு செய்த குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு செல்லாமல், அதனை முன்கூட்டியே ரத்து செய்யாத பக்தர்களுக்கு இந்த மண்டல சீசனில் மீண்டும் ஆன்லைன் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படாது.

ALSO READ:  இந்திய விமானியின் சாகசத்தால் பயங்கரவாத செயலில் இருந்து காப்பாற்றப்பட்ட இஸ்ரேலியர்கள்!

குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு செல்ல முடியாத பக்தர்கள், தங்களது பயணத் தேதியை மாற்றிக்கொள்ளவும் அல்லது முன்பதிவை ரத்து செய்யவும் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலி முன்பதிவுகளைத் தடுக்க, ஒவ்வொரு பக்தரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி.யை (OTP) உள்ளீடு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பலர் தரிசனத்திற்கு வராததால், நவம்பர் 30ஆம் தேதி வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் தரிசன அனுமதி வழங்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இலவசமாக முன்பதிவு செய்யுமாறு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. முன்பதிவு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் திருவாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள காவல்துறை இணைந்து கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவு (Virtual Queue) செய்துவிட்டு வராத பக்தர்கள், அதே சீசனில் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

ALSO READ:  ஸ்டார் லிங்கை அல்ல; எலான் மஸ்க்கைதான் மதிப்பீடு செய்ய வேண்டும்!

2026-27 மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முன்பதிவு இடங்கள் வீணாவதைத் தடுக்கவும் தேவசம் போர்டு பின்வரும் முக்கிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது:

தரிசன முன்பதிவு புதிய கட்டுப்பாடுகள்

  • மீண்டும் முன்பதிவுக்குத் தடை. ஆன்லைன் மூலம் தரிசன அனுமதி பெற்று, குறிப்பிட்ட நாளில் தரிசனத்திற்கு வராமல் தவிர்க்கும் பக்தர்கள், நடப்பு சீசனில் மீண்டும் ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாது. போலி முன்பதிவுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான Sabarimala Online Portal வழியாக விர்ச்சுவல் க்யூ முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தர்களுக்கு விர்ச்சுவல் க்யூ மூலம் தரிசன அனுமதி வழங்கவும் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. (வழக்கமாக விர்ச்சுவல் க்யூ மூலம் 66,000 பேருக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 14,000 பேருக்கும் என தினமும் 80,000 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது).

பம்பையில் உடனடி தரிசன முன்பதிவு (Spot Booking) வசதி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிலக்கல் (10,000 இடங்கள்), எருமேலி (2,000 இடங்கள்) மற்றும் வண்டிப்பெரியாறு சத்திரம் (2,000 இடங்கள்) ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும்.

ஸ்பாட் புக்கிங் மற்றும் தரிசன சரிபார்ப்பிற்கு ஆதார் அட்டை (அல்லது வாக்காளர் அட்டை/பாஸ்போர்ட்) அசல் அல்லது நகலைக் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ALSO READ:  சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!

சன்னிதானம் மற்றும் பதினெட்டாம் படி பகுதியில் செல்போன் பயன்படுத்துவதற்கும், தேங்காய் உடைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீர்நிலைகளில் குளிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், அரவணை மற்றும் அப்பம் பிரசாதங்களை தபால் மூலம் வீட்டிற்கே அனுப்பும் வசதியும் சன்னிதானத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

Posts by Sakthi Paramasivan.k:

Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam