தற்போது ஐப்பசி மாத மாதப் பிறப்பை முன்னிட்டு, வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்க படும் போது, கோயிலுக்குச் செல்வதற்காக பெண்கள் வந்தார்கள் என்றால், மலையடிவாரமான பம்பையிலேயே தடுத்து நிறுத்தப் படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.,
பம்பையில் இதற்கான போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார். மேலும், சபரிமலை கோயில் கதவு மூடப் படும் நாள் வரைக்கும், இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.
சபரிமலைக்கு செல்ல விரும்பும் பெண்கள், தங்கள் உடலை மிதித்துதான் சன்னிதானத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரும் என்று அவர் கூறியுள்ளார்.





Thayavi seidhu poradhungal.., idhil pengalukku nanmai theemai ondrumillai ., Idhu varthaga thinippu.., ungaludan porada nangalum thayar