திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் தரிசனம்: 6 நாட்களுக்கு அமல்

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

திருப்பதி:

திருமலை திருப்பதியில் ஒரு மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்ய நாளை முதல் 6 நாட்களுக்கு புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பெருமாளை தரிசிக்கக் காத்திருக்கும் நேரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப் பட்ட தகவலில்…

பொது தரிசனப் பிரிவில் செல்லும் பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் சுவாமியை  தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர தரிசனம் – என்ற இந்தப் புதிய முறையில் பெருமாளை தரிசிக்க முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை அவசியம்.

சோதனை முறையில் அமல்படுத்தப்படும் புதிய முறையால் கூண்டு அறைகளில் காத்திருக்கும் நேரம் குறையும். பக்தர்கள் தரும் தகவல்கள், ஆலோசனைகளின் அடிப்படையில், இந்தத் திட்டத்தை மேம்படுத்தி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்… என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.