
ஒடிசாவில் சங்கிலியை இழுத்து, பின்னர் புலம்பெயர்ந்தோர் 305 பேர், ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் இருந்து தப்பி ஓடினர்
பாலாங்கீர்: ஒடிசாவின் பாலாங்கீர் மாவட்டத்தில் திங்கள் கிழமை இன்று அபாயச் சங்கிலியை இழுத்த பின்னர் புலம்பெயர்ந்தோர் 305 பேர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் இருந்து குதித்து அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர்.
பாலாங்கீர் மாவட்டத்தின் காந்தபஞ்சி அருகே புலம்பெயர்ந்தோர் ரயிலின் அலாரம் சங்கிலியை இழுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் அனைவரையும் டவுன் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் சுற்றிவளைத்து மீட்டுள்ளனர்.
ஷ்ராமிக் சிறப்பு ரயில் சூரத்திலிருந்து நிர்குந்திக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை கஞ்சம் மாவட்டம் பாலிபகடாவில் சங்கிலியை இழுத்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் இருந்து தப்பிச் சென்றனர். இந்த ரயில் தெலங்கானாவின் நமப்பள்ளியில் இருந்து கோர்தா சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அவ்வாறு தப்பித்த புலம்பெயர்ந்தோர உள்ளூர்வாசிகள் சிலர் கண்டறிந்து சதர்பூர் பி.டி.ஓ, தாசில்தார் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அவர்களில் 70 பேர் உள்ளூர் நிர்வாகத்தால் மீட்கப்பட்டனர்.
இருப்பினும், மற்றவர்கள் தப்பித்துள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. புலம்பெயர்ந்த ஒடிசா மக்களில் ஒரு குழு இதே போல், மே 10 அன்று ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்த பின்னர் அங்குல் மாவட்டத்தின் மஜிகா சிவமந்திர் அருகே ‘ஷ்ராமிக் ஸ்பெஷல்’ ரயிலில் இருந்து தப்பி ஓடினர். பின்னர், அவர்கள் மீட்கப்பட்டனர்.