
திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபமேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே CISFஐ பாதுகாப்பிற்காக செல்ல உத்தரவிடப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரரை ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசு ஏதோ ஒரு நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது என்று கூறினர். முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் CISFஐ பாதுகாப்புடன் தீபத்தூணில் தீபமேற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார் என்பதால், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரருக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை – சிஐஎஸ்எப் பாதுகாப்பை அளித்து மலை மேல் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுப்பியது சரிதான் என்று இரு நீதிபதிகள் கொண்ட அமர்வ் தீர்ப்பு அளித்துள்ளது, தமிழக அரசின் செயல்பாட்டின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பதையே வெளிப்படுத்தியது. குறிப்பாக, மாநில அரசு கடமையைச் செய்யத் தவறிவிட்டது என்று குறிப்பிட்டதால், அரசு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, அரசின் நிர்வாகத்தில் இயங்கும் அறநிலையத்துறை ஆகியவற்றின் மீது நீதித்துறைக்கு நம்பிக்கை இல்லை என்பது வெளிப்படிக்ருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் காவல் துறை ஆணையர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து இன்று விசாரிக்கிறார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
தமிழக அரசு சார்பில் உள்நோக்கத்துடன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறிய நீதிமன்றம், மதுரை கிளை நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரிதான் என்று உறுதிப் படுத்தியது. எனவே மதுரை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை தனிப்பட்ட வகையில் விமர்சித்தவர்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்று கூறப்ப்டுகிறது.





