December 12, 2025, 5:34 AM
23.1 C
Chennai

நவீன தொழில்நுட்பத்தில் ரீ-ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’!

captain prabakaran re release - 2025

நவீன தொழில்நுட்பத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ ; ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் ஆகஸ்ட் 22-ல்  நவீன தொழில்நுட்பத்தில் வரவிருக்கிறது.

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது.. 

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும்  ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது..  ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்..

கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்,  தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார்,  அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு  ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.

கேப்டன் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், காந்திமதி என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

Topics

தென்காசி டூ காசி… அகத்திய முனிவரின் 9 நாள் வாகனப் பயணம்!

அகத்திய முனிவரின் வாகனப் பயணம் 9 நாள் யாத்திரையை வெற்றிகரமாக முடித்து காசியை அடைந்தது.

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

Entertainment News

Popular Categories