
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் தண்ணிர் வரத்து அதிகரித்ததால் கோயிலுக்கு சென்று திரும்ப முடியாத பக்தர்களை வனத்துறை ஊர்காவல்படையினர் கயிறு கட்டி மீட்டனர்.அடிக்கடி நிகழும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண ஆற்றில் பாலம் அமைத்து தர பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருவாகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது
வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, பக்தர்கள் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரளா பெரியார் புலிகள் வனச்சரணாலய மாலை பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு, தண்ணீர் கரை புரண்டு ஓடியது.
வியாழக்கிழமை திருக்கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு ராஜபாளையம் அய்யனார் கோவில் மற்றும் அருகில் உள்ள சிவானந்தா ஆசிரமத்தில் சிறப்பு விழாக்கள் பூஜை வழிபாடுகள் அன்னதானம் நடைபெற்றது இதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் மேலும் வியாழக்கிழமை பௌர்ணமி என்பதால் அருகில் உள்ள சாய்பாபா கோயிலுக்கும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர் .இவர்கள் அய்யனார் கோவில் செல்லும் போது ஆற்றைக் கடந்து அய்யனார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியப திடீரென கேரளா வனப்பகுதியில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் ஏற்பட்டது இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர் ராஜபாளையம் ஊர் காவல் படை மற்றும் வனத்துறையினர் உடன் பார்க்குக்கு சென்று கயிறு கட்டி வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்டனர். மேலும் நேற்று மாலைக்கு பிறகு வனப்பகுதியில் செல்ல தடையும் விதிக்கப்பட்டது
இப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





