
காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்ள, காசி தமிழ் சங்கமம் 4.0-க்கு வாருங்கள்
- சுபாஷ் சந்திரா
இந்தியாவின் கலாச்சார ஆன்மா எப்போதாவது ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருந்தால், அது காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையிலான அருவமான, தனித்துவமான மற்றும் பண்டைய உறவில்தான் பிரதிபலிக்கிறது. வடக்கின் ஆன்மீகத் தலைநகரான காசியும், தெற்கின் நித்திய பாரம்பரியத்தின் துருவ நட்சத்திரமான ராமேஸ்வரமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவை ஒன்றிணைத்த கலாச்சார ஒற்றுமையாக காண்பிக்கிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த நித்திய ஒற்றுமை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் இந்தியத்தன்மையின் தனித்துவமான உணர்வைக் கொண்டாடுகிறது. இந்த சங்கமம் 2 புனித துருவங்களை, காசி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை ஒரு கலாச்சார பாலத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலம் என்பதையும் நிரூபிக்கிறது. இங்கே, ஒருபுறம், காசியின் கங்கா-ஜமுனி பாரம்பரியமும், மறுபுறம், தமிழ்நாட்டின் தெய்வீக திராவிட பாரம்பரியமும் உள்ளது. ஒருபுறம், சைவ ஆன்மீக பயிற்சியின் முடிவற்ற நீரோடையும், மறுபுறம், அறிவு, இலக்கியம் மற்றும் இசையின் வளமான பாரம்பரியமும் உள்ளது.
இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் “ஒரே இந்தியா, சிறந்த இந்தியா” என்ற உறுதிமொழி புதிய பரிமாணங்களைப் பெற்று வரும் நிலையில், காசி தமிழ் சங்கமம்- 4, இந்தியாவின் மைய உணர்வை, கலாச்சார ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பகிரப்பட்ட வேர்களை மீண்டும் கண்டறியவும், வடக்கு மற்றும் தெற்கை எப்போதும் ஒன்றாக இணைத்துள்ள கலாச்சார பாரம்பரியத்தை புதுப்பிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.
காசி தமிழ் சங்கமம் 4.0 இந்த ஆண்டு டிசம்பர் 2 -ந் தேதி வாரணாசியில் தொடங்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கப்பட்ட இந்த தனித்துவமான சங்கமம், இப்போது நாட்டின் மொழியியல் மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, சங்கமத்தின் கருப்பொருள் – “தமிழ் கற்றுக்கொள்வோம் – கற்போம் தமிழ்” – தமிழ் மொழியின்
முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த நிகழ்வு தமிழ்நாட்டுக்கும், காசிக்கும் இடையிலான ஆன்மீக, கலாச்சார மற்றும் அறிவுசார் உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையை அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும் இது ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வையொட்டி தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மீக அறிஞர்கள் என 1,400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு அழைத்து வரப்படுவார்கள், அங்கு அவர்கள் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொண்டு கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு சங்கமம் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் 15 –ந் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் நிறைவு விழா அதன் முக்கிய பகுதியாக இருக்கும். கூடுதலாக, 2 புதிய முயற்சிகள் தொடங்கப்படும். முதலாவது “தமிழ் கற்போம்”, இது வட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ் கற்க வாய்ப்பளிக்கும். 2-வது முயற்சி தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் ஒரு பயணமாகும், இது தமிழ்நாடு தேசத்துக்கு அளித்த பங்களிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த பதிப்பின் சிறப்பம்சம் டிசம்பர் 15 -ந் தேதி ராமேஸ்வரத்தில் அதன் உச்சக்கட்டமாகும். அங்கு காசி மற்றும் தமிழ் மரபுகளின் ஆன்மீக ஒன்றியம் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
“அகஸ்திய பயணம்”, இது அகஸ்திய முனிவரின் பாரம்பரியத்தையும், தமிழ்நாட்டின் பங்களிப்புகளையும் தென்காசியில் இருந்து காசி வரையிலான பயணத்தின் மூலம் தேசிய அரங்கில் எடுத்துக்காட்டுகிறது. முதல் காசி தமிழ் சங்கமம் 2022 –ம் ஆண்டு நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து சுமார் 2,500 பேர் காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் செய்தனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்று வெற்றியைப் பெற்றது.
2-வது சங்கமம் 2023-ம் ஆண்டு நமோ காட்டில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் முறையாக, பிரதமரின் உரையின் நிகழ்நேர, செயலி அடிப்படையிலான மொழிபெயர்ப்பு தமிழில் வழங்கப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார சங்கமத்தின் ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. 3-வது சங்கமம் 2025 -ல் நடைபெறுகிறது. இது அகஸ்திய முனிவரின் மரபை மையமாகக் கொண்டது. சுமார் 1,000 தமிழ் பிரதிநிதிகள் மற்றும் 200 பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவின் மொழிகள் வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, நமது நாகரிகத்தின் ஆன்மாவும் ஆகும். காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது அந்த உணர்வை உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியாகும். இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையில் உள்ளது என்பதையும், மொழிகள் மீதான மரியாதை, கற்றுக்கொள்ளும் விருப்பம் மற்றும் பரஸ்பர நெருக்கம் ஆகியவை நம்மை ஒரு “கலாச்சார வல்லரசாக” ஆக்குகின்றன என்பதையும் இந்த சங்கமம் நமக்கு சொல்கிறது.
காசி தமிழ் சங்கமம் 4.0 என்பது 2 மொழிகளையும் 2 பிராந்தியங்களையும் இணைக்கும் ஒரு திட்டம் மட்டுமல்ல, இந்தியாவின் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற கருத்தாக்கத்தின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வு இந்திய மொழிகள், கருத்துக்கள் மற்றும் மரபுகளின் சங்கமத்தை அடையாளப்படுத்தும். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமை உணர்வை புதிய உயரங்களுக்கு உயர்த்தும்.





