திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

Published:

hindumunnani
hindumunnani

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இன்று( 01.12.25 ) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது முருகனின் அருளால், முருக பக்தர்களின் வேண்டுதால், இந்து வழக்கறிஞர்கள் முயற்சியால் கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பானது நீதியை நிலைநாட்டியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைதீபத்திற்காக போராடி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த அட்வகேட் அமரர் திரு. ராஜகோபாலன் அவர்களின் ஆன்மாவிற்கு கிடைத்த வெற்றி.

தனது தீர்க்கதரிசனத்தால் இந்து சமுதாயத்திற்கு போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இன்றும் தெய்வமாக இருந்து வழிநடத்தி வரும் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களின் கனவு நனவாகியுள்ளது.

எப்படி பிரிட்டிஷ் காலத்தில் 12.5.1931இல் இலண்டன் பிரிவ்யூ கவுன்சில் இந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. சுதந்திர பாரதத்தில் 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் அந்த தீர்ப்பை ஊர்ஜிதப் படுத்தி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளது.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதே போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1996இல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு தந்தது. அதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஊர்ஜிதப்படுத்தி தீபம் ஏற்ற உத்தரவு தந்துள்ளது.

இதற்காக குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும், வீடுதோறும் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் படித்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிமையான செய்தி ஆகும்.

இதற்காக சட்ட ரீதியாக போராடிய இந்து வழக்கறிஞர்கள் முன்னணி மற்றும் இதன் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய ஊடகத்தினர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இது முருகனின் வெற்றி. தர்மத்தின் வெற்றி. மக்களின் வெற்றி.
எனவே பக்தர்களின் உணர்வுகளை மதித்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

இந்த ஆண்டு திருவண்ணாமலை போல திருப்பரங்குன்றம் மலை தீபத்தை கண்டு முருகனுக்கு அரோகரா என்று விண்ணதிர முழங்கிட லட்சக்கணக்கான முருக பக்தர்களே மகிழ்வுடன் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img