
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் ஐப்பசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் சுசீந்திரம் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலில் இன்று ஐப்பசி திருவிழா கொடியேற்று வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்று வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வரும் நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பரிவேட்டை விழாவும் நவம்பர் நான்காம் தேதி திங்கள்கிழமை திரு ஆராட்டு வைபவமும் நடைபெற உள்ளது!







