
கர்னூல் மாவட்டத்தில் மற்றுமொரு ராமர் கோவில் விக்ரகம் உடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒருபுறம் ராமதீர்த்தம் சம்பவம் பக்தர்களை மன வேதனைக்கு உள்ளாக்கி வரும் நேரத்தில் கர்நூல் மாவட்டம் கோசிகி அருகில் உள்ள மர்லபண்ட ஆஞ்சனேய சுவாமி கோவிலின் காலிகோபுரத்தில் இருக்கும் சீதாராமர் விக்கிரகத்தின் கால்களை அடையாளம் தெரியாத குண்டர்கள் சேதப்படுத்தி உள்ளார்கள்.
அதன்பிறகு கோவிலில் நுழைந்து உண்டியலை கொள்ளை அடித்துள்ளார்கள். நேற்று ஆலய அர்ச்சகர்கள் காலை பூஜை செய்வதற்காக சென்றபோது இந்த சம்பவங்களை பார்த்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். உடனடியாக கோவில் பொறுப்பாளர்களிடம் செய்தி தெரிவித்ததால் உடனடியாக ஆலய தர்மகர்த்தாக்கள் விசுவநாத ரெட்டி, மௌனய்யா ஆச்சாரி ஆகியோர் விக்கிரகங்களை பரிசீலித்தார்கள்.
ALSO READ: ஜெகனின் ஆந்திரத்தில் அதிகரித்துள்ள இந்து வழிபாட்டுத் தலங்கள் மீதான ‘கிறிஸ்துவ’ தாக்குதல்கள்!
மூன்று நாட்களுக்கு முன்பு மர்லபண்ட ஆஞ்சநேய ஸ்வாமி ஜாத்திரை உற்சவங்கள் மிக விமர்சையாக நடந்தேறின. ஜாத்திரை நடந்து முடிந்த மூன்று நாட்களிலேயே இவ்விதமாக விக்கிரகங்கள் மீது தாக்குதல் நடந்து உண்டியலைத் திருடி உள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கது.
ALSO READ: ஏசு சிலை தலையை துண்டித்தால் எப்படி இருக்கும்?! செயலற்ற ஜெகன் மீது பக்தர்கள் கடுங் கோபம்!
ஜாத்திரைக்கு வந்த பக்தர்கள் சுவாமிக்கு மிகப் பெருமளவில் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை செலுத்தி இருந்தார்கள். அதன் காரணமாகவே அடையாளம் தெரியாத குண்டர்கள் சுவாமி ஆலயத்திற்குள் புகுவதற்கு இரும்பு கம்பிகளை வெட்டி உண்டியல் களையும் திருடி உள்ளார்கள் என்று தர்மகர்த்தாக்கள் தெரிவித்தார்கள்.